தாராபுரம்

ஆள்கூறுகள்: 10°44′N 77°31′E / 10.73°N 77.52°E / 10.73; 77.52
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாராபுரம்

Dharapuram

ராஜராஜபுரம், விரதாபுரம் (வரலாற்று)[1][2]
—  தேர்வு நிலை நகராட்சி  —
அகத்தீஸ்வரர் கோவில், தாராபுரம், தமிழ்நாடு
அகத்தீஸ்வரர் கோவில், தாராபுரம், தமிழ்நாடு
தாராபுரம்
இருப்பிடம்: தாராபுரம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°44′N 77°31′E / 10.73°N 77.52°E / 10.73; 77.52
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
வட்டம் தாராபுரம்
ஆளுநர் ஆர். என். ரவி[3]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[4]
மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், இ. ஆ. ப [5]
நகராட்சி தலைவர்
மக்கள் தொகை 67,007 (2011)
மொழிகள் தமிழ், ஆங்கிலம்
வட்டார மொழிகள் கொங்கு தமிழ்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


245 மீட்டர்கள் (804 அடி)

குறியீடுகள்
தாராபுரம்
அகத்தீஸ்வரர் கோவில், தாராபுரம்

தாராபுரம் (Dhārāpuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் வட்டம் மற்றும் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வுநிலை நகராட்சியும் ஆகும். இந்நகரத்தில் அமராவதி ஆறு பாய்கிறது. மிகப் பழமையான நகரங்களில் ஒன்று. விவசாயம் நிறைந்த நகரம். மூன்று ஊராட்சி ஒன்றியங்களை கொண்டது. தாராபுரம் முதலில் கோயம்புத்தூர் மாவட்டத்தில்(1804-1979)(கோவை மாவட்டத்தின் தலைநகரமாகவும் சில ஆண்டுகள் விளங்கியது) இருந்தது. அதன்பின் புதிதாக உருவாக்கப்பட்ட ஈரோடு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. பின் 2009ல் புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் மிகப்பெரிய வட்டம் தாராபுரம் வட்டமே (தாலுகா) ஆகும் (பரப்பளவில் பெரியது) தாராபுரம் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் மூன்று வருவாய் கோட்டங்களில் ஒன்று இதில் தாராபுரம், காங்கேயம் வட்டங்கள் இதில் அடங்கும். காற்றாலைகள் மிகுந்த நகரம். தென்னை, பனை மரங்கள் அதிகமாக காணப்படும் ஊராக திகழ்கிறது. தேங்காய் அதிக அளவில் சாகுபடி செய்யபடும் நகரங்களில் ஒன்று.

வரலாறு[தொகு]

ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் கொங்கு நாட்டில் ஆன்பொருநைக் கரையில் (ஆம்பிராவதி) உள்ள கொங்கு வஞ்சி என்ற நகரத்தை அரண்களால் வலிமிக்கதாக்கினான். அதன்கண் சேரர் குடியில் தோன்றிய அரசியற் செல்வருள் ஒருவரை நிறுவிச் சேரர் கொங்கில் நாடு காவல் புரியச் செய்தான், இடைக்காலச் சோழ வேந்தர் கொங்கு வஞ்சியைக் கைப்பற்றி அதற்கு இராசராசபுரம் என்று பெயரிட்டனர். இதனை அவர்களுடைய கல்வெட்டுகள், “நறையனூர் நாட்டுக் கொங்கு வஞ்சியான ராசராசுபுரம்" என்று குறிப்பதினால் அறிகின்றோம். பிற்காலத்தே இதன் ஒரு பகுதி “இராசாதிராசத் சதுர்வேதிமங்கல”மாகியது. இந்த இராசராசபுரம் தாராபுரம் என்று மருவியது.[6]

தலைநகரம்[தொகு]

தாராபுரம் சேரர்கள், மேற்கு கங்க பேரரசு மற்றும் பின்னர் கொங்கு சோழர்கள் கீழ் கொங்கு நாட்டின் தலைநகராக இருந்தது.[7]

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 10°44′N 77°31′E / 10.73°N 77.52°E / 10.73; 77.52 ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 245 மீட்டர் (803 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 30 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 15,842 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 67,007 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 88.4% மற்றும் பாலின விகிதம் 1,045 ஆண்களுக்கு, பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5048 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 967 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 12,032 மற்றும் 56 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 77.12%, இசுலாமியர்கள் 16.76%, கிறித்தவர்கள் 5.74% மற்றும் பிறர் 0.37% ஆகவுள்ளனர்.[9]

போக்குவரத்து[தொகு]

தாராபுரம் நகரமானது கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய மாநகரங்களில் இருந்து தென் தமிழகத்திற்கு செல்லும் வழியில் அமைந்துள்ளதால் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியாக உள்ளது. தாராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், பழனி, மதுரை, தேனி, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, காங்கேயம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய நகரங்களுக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை தவிர மற்ற நகரங்களுக்கும் குறிப்பிட்ட நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இவை தவிர சிவகாசி, ராமேஸ்வரம், திருச்செந்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில், செங்கோட்டை, தென்காசி, சங்கரன்கோவில், பரமக்குடி, காரைக்குடி போன்ற ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழகத்தின் விதைக் களஞ்சியம்[தொகு]

தமிழகத்தின் மொத்த விதை நெல் உற்பத்தியில் 50 சதவீதத்தை உற்பத்தி செய்து, ‘விதைக் களஞ்சியம்’ என்ற சிறப்புப் பெயரை பெற்றுள்ளது தாராபுரம்.[10] தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கியபோதும், தாராபுரத்தில் இருந்துதான் தஞ்சை உட்பட 7 மாவட்ட விவசாயிகளுக்கு விதை நெல் விநியோகிக்கப்படுகிறது. தமிழகத்தில் 20 லட்சம் ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. மொத்த விதை நெல் தேவையில் பெரும்பகுதி தாராபுரத்தில் இருந்துதான் பூர்த்தி செய்யப்படுகிறது.

காற்றாலைகள்[தொகு]

தாராபுரம் பகுதியில் பலமான காற்று வீசும் என்பதால், தமிழகத்தின் முக்கியமான ஒரு காற்றாலை நகரமாக மாறியிருக்கிறது. குறிப்பாகத் தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் நூற்றுக்கணக்கான காற்றாலைகள் அமைந்திருக்கின்றன. மேலும் தாராபுரம்-காங்கேயம் சாலைப் பகுதியிலும் காற்றாலைகள் அமைந்துள்ளன.அனைத்து தென் நகரங்களுக்கும் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. காங்கயம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி போன்ற நகரங்களுக்கு மையமாக அமைந்துள்ளது.

புகழ்பெற்றவர்கள்[தொகு]

சுற்றுலா இடங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.covaimail.com/?p=1907
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2022-10-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221030055314/https://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/. 
  3. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. 2015. http://www.tn.gov.in/ta/government/keycontact/197. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  4. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/government/keycontact/18358. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  5. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/collectors. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  6. {{cite book url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/217 | title=சேரமன்னர் வரலாறு | publisher=வள்ளுவர் பண்ணை | author=ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை | year=2002 | location=சென்னை | pages=215}}
  7. comail; comail (2017-07-29). "தாராபுரம்: ஊர் சொல்லும் கதை" (in en-US). https://www.covaimail.com/?p=1907. 
  8. "Dharapuram". Falling Rain Genomics, Inc. http://www.fallingrain.com/world/IN/25/Dharapuram.html. பார்த்த நாள்: ஜனவரி 30, 2007. 
  9. தாராபுரம் நகர மக்கள்தொகை பரம்பல்
  10. தமிழகத்தின் விதைக் களஞ்சியம் தாராபுரம்: பல்லடத்தில் விதைச் சான்று அலுவலகம் அமையுமா?. தி ஹிந்து நாளிதழ். 15 Nov 2016. https://www.hindutamil.in/news/tamilnadu/89631-.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாராபுரம்&oldid=3824258" இருந்து மீள்விக்கப்பட்டது