பல்லடம் ஊராட்சி ஒன்றியம்
பல்லடம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் இருபது பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது.[1] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பல்லடம் நகரத்தில் இயங்குகிறது
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,35,948 ஆகும். அதில் பட்டியல் சாதிமக்களின் தொகை 24,415 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை ஐம்பதாக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்[தொகு]
பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்கள் விவரம்:
- அனுப்பப்பட்டி
- அருமுத்தம்பாளையம்
- சித்தம்பலம்
- கணபதிபாளையம்
- இச்சிப்பட்டி
- கே. அய்யம்பாளையம்
- கே. கிருஷ்ணாபுரம்
- கரடிவாவி
- காரைபுதூர்
- கோடாங்கிபாளையம்
- மலைக்கவுண்டன்பாளையம்
- மாணிக்கபுரம்
- பணிக்கம்பட்டி
- பருவை
- பூமாலூர்
- புளியம்பட்டி
- செம்மிப்பாளையம்
- சுக்காம்பாளையம்
- வடுகபாளயம்புதூர்
- வேலம்பாளையம்
பல்லடம் ஒன்றியத்தை பிரிக்கும் நடவடிக்கை[தொகு]
பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் இருபதுக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் அடங்கியுள்ளதால் ஊராட்சி ஒன்றிய சேவைகளை பெற பொதுமக்கள் மற்றும் ஊராட்சிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் பல்லடத்தில் தெற்கே அமைந்துள்ள காமநாயக்கன் பாளையத்தை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் துவக்க கோரிக்கை வலுத்துள்ளது. இதனால் கீழ்க்கண்ட ஊராட்சிகள் பயன் பெறும்.
பொங்கலூர் ஒன்றியத்தில் உள்ள
இந்த ஊராட்சிகள் யாவும் காமநாயக்கன் பாளைய காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ளது.
வெளி இணைப்புகள்[தொகு]
இதனையும் காண்க[தொகு]
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்