அவிநாசி

ஆள்கூறுகள்: 11°10′23″N 77°16′07″E / 11.173000°N 77.268600°E / 11.173000; 77.268600
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவிநாசி
அமைவிடம் 11°10′23″N 77°16′07″E / 11.173000°N 77.268600°E / 11.173000; 77.268600
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
வட்டம் அவிநாசி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி அவிநாசி
சட்டமன்ற உறுப்பினர்

ப. தனபால் (அதிமுக)

மக்கள் தொகை 28,868 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


356 மீட்டர்கள் (1,168 அடி)

இணையதளம் www.townpanchayat.in/avanasi

அவிநாசி (About this soundஒலிப்பு ) (ஆங்கிலம்:Avanashi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி வட்டம் மற்றும் அவிநாசி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். இங்கு, சமயக்குரவர்களில் ஒருவரான சுந்தரர் பாடி, பாடல் பெற்ற பிரசித்தி வாய்ந்த அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.

அமைவிடம்[தொகு]

அவிநாசி பேரூராட்சியிலிருந்து, திருப்பூர் 18 கி.மீ. மற்றும் கோயம்புத்தூர் 40 கி.மீ. தொலைவில் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

11.65 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 82 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, அவிநாசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 7,443 வீடுகளும், 28,868 மக்கள்தொகையும் கொண்டது.[5]

வரலாறு[தொகு]

கொங்கு மண்டலத்திலுள்ள பாடல்பெற்ற ஏழு சிவத்தலங்களில், அவிநாசி முதன்மையானது ஆகும்.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 11°12′N 77°17′E / 11.2°N 77.28°E / 11.2; 77.28 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 314 மீட்டர் (1030 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 22,274 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[7] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அவிநாசி மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 79%; பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அவிநாசி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. 2015. http://www.tn.gov.in/ta/government/keycontact/197. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/government/keycontact/18358. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/collectors. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  4. அவிநாசி பேரூராட்சியின் இணையதளம்
  5. Avanashi Population Census 2011
  6. "Avanashi". Falling Rain Genomics, Inc. http://www.fallingrain.com/world/IN/25/Avanashi.html. பார்த்த நாள்: ஜனவரி 30, 2007. 
  7. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை" இம் மூலத்தில் இருந்து 2004-06-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999. பார்த்த நாள்: ஜனவரி 30, 2007. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=அவிநாசி&oldid=3603511" இருந்து மீள்விக்கப்பட்டது