இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


2011 கணக்கெடுப்பு சின்னம்‎
கணக்கெடுக்கும் பெண் இலச்சினை‎

இந்தியாவில் மக்கள் தொகையை கணக்கெடுக்கும் பணி 1872ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் மக்களின் எண்ணிக்கை, பொருளாதாரம், எழுத்தறிவு மற்றும் கல்வியறிவு, பெற்றோர் விகிதம், உறைவிட விவரம், நகரமயமாக்கம், பிறப்பு மற்றும் இறப்பு விகிதங்கள், பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடிகள், மொழி, மதம், இடம் பெயர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியவை பற்றிய விவரங்களை சேகரிகக்க அரசாங்கத்தால் எடுக்கப்படும் நடவடிக்கையாகும். ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியாவில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. 2011 ம் ஆண்டு நடைபெற்ற கணக்கெடுப்பு பணி இந்தியாவில் நடைபெற்ற 15வது கணக்கெடுப்பு பணியாகும். இக் கணக்கெடுப்பின் இடைக்கால விவரங்களை, மத்திய உள்துறை செயலர் ஜி. கே. பிள்ளை முன்னிலையில், இந்திய மக்கள்த்தொகை கணக்கெடுப்பு ஆணையாளர் சி. சந்திர மவுலி 31 மார்ச், 2011ல் வெளியிட்டார். தமிழகத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இயக்குனர் கோ. பாலகிருசினன் சென்னையில் வெளியிட்டார்.[1]

2011 மக்கட்தொகை கணக்கெடுப்பு முடிவுகள்[தொகு]

மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மக்கட்தொகை 121 கோடியே 19 இலட்சத்து மூவாயிரத்தி நானூற்று இருபத்தி இரண்டு பேர் (1,210,193,422) உள்ளனர். மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 17.70 ஆக உயர்ந்துள்ளது.[2] அதிக மக்கட்தொகை (199,812,341) கொண்ட மாநிலமாக உத்தரப்பிரதேசமும், குறைந்த மக்கட் தொகை (610,577) கொண்ட மாநிலமாக சிக்கிம் உள்ளது.

சமயவாரியான மக்கட்தொகை கணக்கெடுப்பு முடிவுகள்[தொகு]

2011ஆம் ஆண்டைய மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, இந்திய மக்கள் தொகை ஆணையம் 27 ஆகஸ்டு 2015 அன்று வெளியிட்டுள்ள சமயவாரி மக்கட்தொகை கணக்கீட்டின்படி, இந்தியாவின் மொத்த மக்கட்தொகையான 121.09 கோடியில், இந்துக்களின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 0.7% ஆக குறைந்து, 96.63 கோடியாகவும் (79.08%), முஸ்லிம்களின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 0.8% உயர்ந்து, 17.22 கோடியாகவும் (14.2%), கிறித்தவர் மக்கட்தொகை 2.78 கோடியாகவும் (2.3%),சீக்கியர்கள் மக்கட்தொகை 2.08 கோடியாகவும் (1.7%), சமணர்கள் மக்கட்தொகை 45 இலட்சமாகவும் (0.4%), புத்த மதத்தினரின் மக்கட்தொகை 84 இலட்சமாகவும் (0.8%), சமயம் குறிப்பிடாதோர் 29 இலட்சமாகவும் (0.4%) உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. [3]

சாதி வாரி கணக்கெடுப்பு[தொகு]

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதல் முறையாக சாதிவாரியாக கணக்கெடுப்பு எதிர்கட்சிகளின் கோரிக்கையையடுத்து நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 1931ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் சாதி வாரியாக கணக்கெடுக்கப் பட்டது. சுதந்திரத்திற்கு பின்பு 1968ம் ஆண்டு கேரளா மாநிலத்தில் மார்க்சிய பொதுவுடமை கட்சியின் ஆட்சியின் போது இ.எம்.எஸ். நம்பூதிரிப்பட் முதலமைச்சராக இருந்த காலத்தில் மக்களின் சமூக நிலையை அறிய சாதிவாரியாக கணக்கெடுக்கப் பட்டது. அதன் அறிக்கை 1971ம் ஆண்டு கேரள கெசட்டில் வெளியிடப்பட்டது[4]

மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகள்[தொகு]

 1. The Census Act, 1948
 2. The Census Rules, 1990
 3. The Citizenship Act, 1955
 4. The Citizenship (Registration of Citizens and Issue of National Identity Cards) Rules, 2003
 5. The Registration of Births and Deaths Act, 1969

நகர்புறம் மற்றும் கிராமப்புறம்[தொகு]

2011 மக்கட்தொகை கணக்கீட்டில் நகர்புறம் மற்றும் கிராமப்புறம் என்பதற்கு கீழ்கண்ட வரையறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன:

நகர்புறம்[தொகு]

 • நகராட்சி, மாநகராட்சி மற்றும் ராணுவக்குடியிருப்பு ஆகிய பகுதிகளின் கீழ் வரும் அனைத்து இடங்களும் நகர்புறம் எனக் கருதப்படும்.
 • கீழ்கண்ட மூன்று தகுதிகளையும் உடைய எந்தொரு இடமும் நகர்புறமாக கொள்ளப்படும்: அ) குறைந்தது 5000 மக்கள் ஆ) ஆண்களில் 75 சதவீதம் பேர் விவசாயம் அல்லாத தொழிலில் ஈடுபட்டிருப்பது. இ) சதுர கிலோமீட்டருக்கு குறைந்தது 400 பேர் (அல்லது சதுர மைலுக்கு 1000 பேர்)

ஊர்புறம்[தொகு]

நகர்புறத்திற்கு வரையறுக்கப்பட்ட தகுதிகள் இல்லாத எந்த ஒரு குடியிருப்பும் கிராமப்புறமாக கொள்ளப்படும்.

தமிழ்நாட்டில் கணக்கெடுப்பு[தொகு]

தமிழக அரசு, மக்களுக்குக் கொடுத்த அறிவிக்கை

கணக்கெடுப்பின் முதல் கட்டமான வீடுகள் கணக்கெடுக்கப்படும் பணி 1, சூன், 2010 முதல் 15, சூலை, 2010 வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட பணியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நாடு முழுவதும் 9, பிப்ரவரி, 2011 முதல் 28, பிப்ரவரி, 2011 வரை நடைபெற்றது.

அதிகாரப்பூர்வ இணையதளம்[தொகு]

http://censusindia.gov.in/2011-Common/why_imp.html

மேற்கோள்கள்[தொகு]

 1. மாநில வாரியான மக்கட்தொகை பட்டியல்
 2. Decadal Growth
 3. Census: Hindu share dips below 80%, Muslim share grows but slower
 4. http://www.census2011.co.in/