பஞ்சாப் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பஞ்சாப்

ਪੰਜਾਬ

Land of Five Rivers
—  மாநிலம்  —

முத்திரை
கடிகாரச்சுற்று மேலிருந்து: பொற்கோயில், குயிலா முபாரக், காந்தி பவன், வாகா எல்லை, ஜாலியன்வாலா பாக் நினைவிடம்
இருப்பிடம்: பஞ்சாப் , இந்தியா
அமைவிடம் 30°47′N 76°47′E / 30.79°N 76.78°E / 30.79; 76.78ஆள்கூற்று : 30°47′N 76°47′E / 30.79°N 76.78°E / 30.79; 76.78
நாடு  இந்தியா
மாநிலம் பஞ்சாப்
மாவட்டங்கள் 20
நிறுவப்பட்ட நாள் 1966-11-01
தலைநகரம் சண்டிகர்
மிகப்பெரிய நகரம் லூதியானா
ஆளுநர் சிவராஜ் பாட்டீல்[1]
முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல்[2]
ஆளுநர் சிவ்ராஜ் பாட்டீல்
முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல்
சட்டமன்றம் (தொகுதிகள்) பஞ்சாப் சட்டமன்றம் (117)
மக்களவைத் தொகுதி பஞ்சாப்
மக்களவை உறுப்பினர்

வார்ப்புரு:இந்திய மக்களவை/பஞ்சாப்/உறுப்பினர் (வார்ப்புரு:இந்திய மக்களவை/பஞ்சாப்/உறுப்பினர்/கட்சி) வார்ப்புரு:இந்திய மக்களவை/பஞ்சாப்/உறுப்பினர்/குறிப்புகள்

மக்கள் தொகை

அடர்த்தி

2,42,89,296 (15வது) (2000)

482/km2 (1,248/sq mi)

ம. வ. சு (2005) Green Arrow Up Darker.svg
0.679 (medium) (9வது)
கல்வியறிவு 74% (12வது)
மொழிகள் பஞ்சாபி
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு 50362 கிமீ2 (19445 சதுர மைல்)
ஐ. எசு. ஓ.3166-2 பஞ்சாப் (இந்தியா)
Portal வலைவாசல்: பஞ்சாப்  
இணையதளம் [http://www.punjabgovt.nic.in www.punjabgovt.nic.in]

பஞ்சாப் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். இம்மாநிலத்தின் மேற்கில் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபும், வடக்கில் ஜம்மு காஷ்மீரும், வட கிழக்கில் இமாசல பிரதேசமும், தென் கிழக்கில் அரியானாவும், தென் மேற்கில் ராஜஸ்தானும் உள்ளன. லூதியானா, ஜலந்தர், பாட்டியாலா, அம்ரித்சர் ஆகியவை இம்மாநிலத்தின் முக்கிய நகரங்கள். பஞ்சாபின் எல்லைக்கு வெளியே உள்ள சண்டிகர் பஞ்சாபின் தலைநகராகும். பஞ்சாபி மொழி அதிகாரப்பூர்வ மொழி. சீக்கிய மக்களே இங்கு பெருமளவில் வசிக்கின்றனர். கோதுமை பஞ்சாபில் அதி்கமாக விளையும் பயிராகும். பஞ்சாபில் ராவி, பியாஸ், சத்லஜ் ஆகிய மூன்று ஆறுகள் பாய்வதால் இம்மாநிலம் செழிப்பாக உள்ளது. ஜீலம், செனாப் ஆகியவை பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தி்ல் பாய்கின்றன.

பண்டைய காலத்தில், பஞ்சாப் பகுதி என்று அழைக்கப்பட்ட நிலப்பரப்பு, இன்றைய இந்திய பஞ்சாப் மாநிலம், பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம், அரியானா மாநிலம், இமாச்சல பிரதேசம், டெல்லி , ஆப்கானிஸ்தானின் சில பகுதிகள், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இன்றைய பஞ்சாப் மாநிலம் 1966 ஆம் ஆண்டு கிழக்கு பஞ்சாப் மாநிலத்தை பிரித்து உருவாக்கப்பட்டது. பஞ்சாப்பின் அண்டை மாநிலங்களான அரியானா மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இப்பிரிவின் மூலம் உருவாக்கப்பட்டவையே.

வேளாண்மை பஞ்சாப் மாநிலத்தின் முதன்மை தொழிலாக இருந்துவருகிறது. பஞ்சாப், இந்தியாவின் மிகச் சிறந்த அடிப்படை கட்டமைப்பை கொண்ட மாநி்லங்களில் ஒன்றாக விளங்குகிறது.[3]. பஞ்சாபில், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை மற்ற இந்திய மாநிலங்களைவிட மிகக்குறைவாக இருந்துவருகிறது. 1999-2000 கணக்கெடுப்பின்படி, சுமார் 6.16 விழுக்காடு மக்கள் மட்டுமே வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர்.

சொற்தோற்றம்[தொகு]

"பஞ்சாப்" என்ற பாரசீக மொழி சொல், 'பஞ்' (پنج) = 'ஐந்து', 'ஆப்' (آب) = நீர், என்று பிரிக்கப்பட்டு ஐந்து ஆறுகள் பாயும் பகுதி என்று பொருள் தரும். இவ் ஐந்து ஆறுகளாவன : ஜீலம், செனாப், ராவி, பியாஸ் மற்றும் சத்லஜ்

புவியியல்[தொகு]

பஞ்சாபின் பெரும்பகுதி வளமிக்க வண்டல் மண் கொண்டுள்ளது. பொதுவாக வரண்ட வானிலையை கொண்டிருப்பினும், மிகச் சிறந்த நீர்பாசன கட்டமைப்பினை கொண்டிருப்பதாலும், வளமிக்க மூன்று ஆறுகள் பாய்வதாலும், வேளாண்மையில் சிறந்து விளங்குகிறது.

பஞ்சாப் பகுதியின் தட்பவெட்பம், பருவ நிலைக்கு தக்கவாறு, -5 °C இருந்து 47 °C வரை நிலவுகிறது.

மக்கள்[தொகு]

பஞ்சாப் மக்கள்தொகை
வருடம் மக்கள்தொகை
1971 13,551,000
1981 16,788,915
1991 20,281,969
2001 24,358,999

சீக்கியம் பஞ்சாபில் பின்பற்றபடும் முக்கிய மதமாகும். சுமார், 59.91 விழுக்காடு மக்கள் இம்மதத்தினை சார்ந்தவர்கள்.[4] . சுமார் 36.94 விழுக்காட்டினர், இந்து சமயத்தையும், ஏனையோர் மற்ற சமயங்களையும் சார்ந்தவர்களாவர். சீக்கியர்களின் புனிதத்தலமான பொற்கோவில், பஞ்சாப்பில் உள்ள அம்ரித்சர் நகரில் அமைந்துள்ளது. சீக்கியம் பஞ்சாபின் அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ளமையால், சீக்கிய குருத்துவாராக்களை பஞ்சாப்பில் எங்கும் காணலாம். பண்டைய பஞ்சாப்பில், மதபேதமின்றி அனைவரும் தலைப்பாகை அணிந்து வந்திருந்தாலும், காலப்போக்கில், இவ்வழக்கம் மறைந்து, தற்காலத்தில், சீக்கியர்கள் மட்டுமே தலைப்பாகை அணிகின்றனர்.

குருமூகி முறையில் எழுதப்படும் பஞ்சாபி மாநிலத்தின் அலுவல் மொழியாக உள்ளது.

சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 24,358,999 100%
சீக்கியர் [5] 14,592,387 59.91%
இந்துகள் [5] 8,997,942 36.94%
இசுலாமியர் [5] 382,045 1.57%
கிறித்தவர் [6] 292,800 1.20%
பௌத்தர் [5] 41,487 0.17%
சமணர் [5] 39,276 0.16%
ஏனைய [5] 8,594 0.04%
குறிப்பிடாதோர் [5] 4,468 0.02%

பஞ்சாப் மாவட்டங்கள்[தொகு]

பஞ்சாப் மாவட்டங்கள்

பஞ்சாப் மாநிலத்தில் 22 பெரு நகரங்களும், 157 நகரங்களும் உள்ளன.

 1. ஹோசியார்பூர் மாவட்டம்
 2. ஜலந்தர் மாவட்டம்
 3. அமிர்தசரஸ் மாவட்டம்
 4. பர்னாலா மாவட்டம்
 5. பதிண்டா மாவட்டம்
 6. பரீத்கோட் மாவட்டம்
 7. பதேகர் சாகிப் மாவட்டம்
 8. பசிலிகா மாவட்டம்
 9. பெரோஸ்பூர் மாவட்டம்
 10. குர்தாஸ்பூர் மாவட்டம்
 11. லூதியானா மாவட்டம்
 12. கபூர்தலா மாவட்டம்
 13. மன்சா மாவட்டம்
 14. மொகா மாவட்டம்
 15. மொகாலி மாவட்டம்
 16. ரூப்நகர் மாவட்டம்
 17. முக்சார் மாவட்டம்
 18. பகத்சிங் மாவட்டம் (நவன் சாகிப் மாவட்டம்)
 19. சங்குரூர் மாவட்டம்
 20. பாட்டியாலா மாவட்டம்
 21. பதான்கோட் மாவட்டம்
 22. தார்ன் மாவட்டம்

கல்வி[தொகு]

பஞ்சாப் ஜலந்தர் NITJ முதன்மை கட்டடம்

பஞ்சாப் மாநிலத்தில் 11 உயர் கல்வி அரசு பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. கலை, அறிவியல், உளவியல், பொறியியல், சட்டம், மருத்துவம், கால்நடை மருத்துவம், வணிகம், ஆகிய பல்வேறு துறைகளில், உயர் கல்வி அளிக்கப்பட்டுவருகிறது. பஞ்சாப் வேளாண்மை பல்கலைக்கழகம் உலக புகழ் பெற்றது. அதுவே, 1960- 19970 களில் நடந்த பஞ்சாப்பின் பசுமை புரட்சிக்கு பெரும் பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப்பின் பல்கலைக்கழகங்கள்

 1. குருநானக் தேவ் பல்கலைக்கழகம் , அம்ரித்சர் .
 2. பஞ்சாபி பல்கலைக்கழகம் , பாட்டியாலா.
 3. பஞ்சாப் பல்கலைக்கழகம் , சண்டிகர் .
 4. பஞ்சாப் வேளாண்மை பல்கலைக்கழகம் , லூர்தியானா .
 5. பஞ்சாப் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் , சலண்தர்.
 6. பாபா பரிது பல்கலைக்கழகம், பரிதுகோட்.
 7. பஞ்சாப் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம், தால்வாண்டி
 8. குரு அங்கது தேவ் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம்
 9. தேசிய மருந்து கல்வி & ஆராட்சி கழகம் , மௌகலி
 10. தேசிய தொழில்நுட்ப கழகம் , சலண்தர்.
 11. தாபர் பல்கலைக்கழகம் , பாட்டியாலா.

வணிகம் மற்றும் அடிப்படை கட்டமைப்பு[தொகு]

பஞ்சாப் இந்தியாவின் மிகச்சிறந்த அடிப்படை கட்டமைப்பினை கொண்ட மாநிலங்களில் ஒன்று[7]. இந்திய தேசிய பொருளாதார ஆராய்ட்சி குழு (Indian National Council of Applied Economic Research NCAER) தனது தரவரிசையில் இந்தியாவின் சிறந்த அடிப்படை கட்டமைப்பை கொண்ட மாநிலமாக பஞ்சாப் மாநிலத்தை தேர்ந்தெடுத்துள்ளது.[3]. நாட்டில் மின்சார உற்பத்தி/ தனிநபர் யில் மற்ற இந்திய மாநிலங்களை விட சுமார் 2.5 மடங்கு அதிகம்பெற்று பஞ்சாப் முதன்மை வகிக்கிறது. இதன் காரணமாக, பஞ்சாப்பின் எல்லா முக்கிய நகரங்களிலும், மின் கட்டணம் குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

 • சாலைகளின் மொத்த நீளம் 47,605 கிலோமீட்டர்.
 • அனைத்து நகரங்களும் தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளன.
 • தேசிய நெடுஞ்சாலை நீளம்: 1000 கிலோமீட்டர்.
 • மாநிலம் நெடுஞ்சாலை நீளம்: 2166 கிலோமீட்டர்
 • முக்கிய மாவட்ட சாலைகள்: 1799 கிலோமீட்டர்.
 • ஏனைய மாவட்டம் சாலைகள்: 3340 கிலோமீட்டர்.
 • இணைப்பு சாலைகள்: 31657 கிலோமீட்டர்

சுற்றுலா[தொகு]

புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் மௌகின்தரா கல்லூரி, பாட்டியாலா.
பஞ்சாப்
பண்பாடு
Dhol players.jpg

பஞ்சாபி மொழி
இலக்கியம்
நடனம்
பங்கரா
நாடகம்
ஓவியம்
சினிமா
உணவு
உடை
கட்டிடக்கலை
சிற்பம்
விளையாட்டு
பாதுகாப்பு கலை

தொகு

பஞ்சாப்பின் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் சுற்றுலாத்துறையும் ஒன்று. பஞ்சாப் பஞ்சாப்பின் சுற்றுலாத்துறை அம்மாநிலத்தின் கலாச்சாரம், பண்பாடு, பழம்பெருமை, வரலாறு ஆகியவற்றை பறைசாற்றும் சின்னங்களை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளது.

புகழ்பெற்ற பஞ்சாப் குடிமக்கள்[தொகு]

முன்னாள் இந்தியப் பிரதமர்கள் ஐ. கே. குஜரால், நந்தா, மன்மோகன் சிங் ஆகியோர் பஞ்சாப் மாநிலத்தை சார்ந்தவர்கள். இவர்கள் மூவர் பிறந்த இடமும் தற்போது பாகிஸ்தானில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

 1. http://india.gov.in/govt/governor.php
 2. http://india.gov.in/govt/chiefminister.php
 3. 3.0 3.1 [1]
 4. [2]
 5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 Census of india , 2001
 6. .gov.in/Census_Data_2001/Census_Data_Online/Social_and_cultural/Religion.aspx Census of india , 2001
 7. Welcome to Official Web site of punjab

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சாப்_(இந்தியா)&oldid=1859646" இருந்து மீள்விக்கப்பட்டது