தலித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்திய மற்றும் தமிழ் சாதிய சமூக படிநிலை கட்டமைப்பில் அடித்தள மக்கள் தலித் என்று பொதுவாக அடையாளப்படுத்தப்படுவார்கள். நசுக்கப்பட்ட மக்கள், நொருக்கப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்டோர், தீண்டத்தகாதவர்கள், பஞ்சமர்கள், அரிஜனங்கள், பட்டியல் இனத்தவர் என்றும் தலித்துக்கள் அழைக்க அல்லது குறிப்பிடப்படுவதுண்டு. தலித்துக்கள் இந்து-வர்ண தத்துவ சமய நோக்கில் தீண்டத்தகாதவர்களாகவும், பொருளாதாரத்தில் தாழ்த்தப்பட்டும், அரசியல் அதிகார வலு அற்றவர்களாகவும், சமூக பண்பாட்டு நிலையில் வேறுபடுத்தப்பட்டவர்களாகவும் இருந்து வருகின்றார்கள். பல கால தொடர்ச்சியான எதிர்ப்பு போராட்டங்கள் ஊடாக நியாயமான வாய்ப்புக்களை பெற, முன்னேற முயன்று கொண்டிருக்கின்றார்கள்.

"இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அட்டவணை சாதிகள் (Schedule Castes) என்றும் குறிப்பிடப் பெற்றுள்ள தீண்டாதோர்க்கும், பழங்குடி மக்களுக்கும் (Schedule Tribes) தலித்துக்கள் என்பது பொதுப் பெயராகும்" என்று அம்போத்கரும் தலித் மனித உரிமை போராட்டம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. எனினும் பொருளாதார நிலையில் பிற்பட்ட பிரிவினரும் (Backward Classes), மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களில் பலரும் தங்களை தலித்துக்கள் என்றோ அல்லது தலித்துக்களுடனோ அடையாளப்படுத்துகின்றனர். மேலும் சர்வதேச(பன்னாட்டு) மட்டத்தில் ஒடுக்குமுறைகளை அனுபவிக்கும் கறுப்பின, மற்றும் முதற்குடி மக்களையும் தலித்துக்கள் என்று அடையாளப்படுத்தப்படுவதுண்டு.

தலித் மக்களின் சமூக பொருளாதார நிலை[தொகு]

தலித் மக்களின் வீடுகளில் பிறக்கும் 1,000 குழந்தைகளில் 83 குழந்தைகள் ஒரு வயது முடிவதற்குள் இறக்கின்றன. தலித் அல்லாதோர் வீடுகளில் இந்த விகிதாச்சாரம் 1,000: 61.ஐந்து வயதுக்கு உட்பட்ட தலித் குழந்தைகள் 1,000-ல் 39 பேர் இறந்துவிடுகின்றன. தலித் அல்லாத குழந்தைகளில் இந்த விகிதாச்சாரம் 1,000:22. தலித் குழந்தைகளில் 75% நோஞ்சானாக இருக்கின்றன. தலித் அல்லாத குழந்தைகளில் இது 49%. 2000 ஆண்டு கணக்குப்படி 66% தலித் குடும்பங்கள் நிலமில்லாதவை. தலித் அல்லாத குடும்பங்களில் இது 33%.தலித் மக்களில் முக்கால்வாசிப் பேர் கூலித் தொழிலாளிகள். இதர சாதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களிடையே இந்த விகிதாச்சாரம் கால்வாசியாக உள்ளது. [1] இவர்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை அரசு ஊழியர்கள் அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பைக்கூட ஏற்படுத்திக்கொடுக்க தயாராக இல்லை. [2]

தலித் பண்பாட்டு அமைப்பு[தொகு]

"இந்திய தலித்துக்களின் பண்பாட்டு அமைப்பானது இந்தியாவின் ஆதிக்க பண்பாட்டின் சமூக ஒழுங்கமைப்பினைக் கேள்விக்குள்ளாக்குவதாகவும் மறுமதிபீடு செய்வதும் இல்லை. மாறாக அது அவ்வாதிக்கப் பண்பாட்டுனைப் போன்றதொரு அமைப்பொழுங்கைத் தனது பண்பாட்டுக்குள்ளும் தொடர்ந்து மறுபடைப்புச் செய்து கொண்டிருக்கின்றது" [3]

தலித்துகள் மீதான தாக்குதல்களும் , நீதிமன்ற தீர்ப்புகளும்[தொகு]

இந்தியா[தொகு]

 1. வெண்மணி கிராமத்தில் 44 தலித் விவசாயத் தொழிலாளர்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் பிரதான குற்றவாளியான கோபால கிருஷ்ண நாயுடு உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.இத்தகைய பெரிய மனிதர்கள் உயிரோடு எரிப்பது போன்ற செயலில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என்று நீதி மன்றம் கூறியது .[4]
 2. திண்ணியம் என்ற கிராமத்தில் தலித் ஒருவரின் வாயில் மலத்தை திணித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாதி ஆதிக்க எண்ணம் கொண்ட வெறியர் விடுவிக்கப்பட்டார். முதல் தகவலறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பு உயர் அதிகாரியின் அனுமதி பெறவில்லை என்று காரணம் கூறப்பட்டது.[5]
 3. பீகார் மாநிலம் பதானிதோலா என்ற இடத்தில் 1996ம் ஆண்டு 21 தலித்துகள் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த அரா மாவட்டத்தின் அமர்வு நீதிமன்றம் 3 பேருக்கு தூக்குத் தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.ஆனால் பாட்னா உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 23 பேரையும் விடுவித்து உத்தரவிட்டது .ரண்வீர் சேனா 1996ல் தலித் மக்களை கொன்றுகுவித்த அமைப்பாகும். படுகொலை செய்யப்பட்ட தலித்துகளில் குழந்தைகள், பெண்களும் அடங்குவர். 10 வயது குழந்தையைக் கொன்றதாகக் குற்றம்சாட் டப்பட்ட அஜாய்சிங், 3 வயது குழந்தையைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட மனோஜ் சிங் ஆகியோரும் நீதிமன்றத்தால் விடுவிக்கப் பட்டுள்ளனர். இந்தப் படுகொலையை நேரில் கண்டவர்கள் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில்தான் அமர்வு நீதிமன்றம் தெளிவான தீர்ப்பு வழங்கியது. ஆனால் சாட்சியத்தில் தெளிவில்லை என்று கூறி பாட்னா உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்துள்ளது. சாட்சிகள் குற்றம் இழைத்த அனைவரின் பெயரையும் கூறி அடையாளம் காட்டவேண்டிய அவசியம் இல்லை என்ற உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை பாட்னா உயர்நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை.[6]
 4. தமிழ் நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருவானூர் என்ற தன் சொந்த ஊர் கோவிலில் சாமி கும்பிட்டதற்க்காக அந்த ஊர் மக்களே தலித் சிறுவனை அடித்து வன்கொடுமை செய்தனர். [7]
 5. மும்பையில் உள்ள அகமது நகரில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த சகார் ஷெஜ்வல் என்ற 21 வயது இளைஞன் மே 16 ஆம் திகதி 2015 ஆம் ஆண்டு அம்பேத்கரின் பாடலை செல்போனில் வைத்திருந்ததற்க்காக கொலை செய்யப்பட்டான். [8]
 6. கர்நாடக மாநிலத்தில் கஷன் மாவட்டத்தில் அமைந்துள்ள ஹொலேநார்சிபூர் தாலுகாவுக்கு உட்பட்ட ஒரு கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்யச்சென்ற பெண்களை உயர் சாதி என்று சொல்லிக்கொள்ளும் சிலர் அபராதம் விதித்தனர். [9]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "இந்திய வறுமையின் உள்கதைகள்". தி இந்து (24 அக்டோபர் 2013). பார்த்த நாள் 24 அக்டோபர் 2013.
 2. தலித், பழங்குடியினருக்கான நிதியில் ஒரு ரூபாய் கூட செலவிடவில்லை: கர்நாடக சமூக நலத்துறை அமைச்சர் வேதனை
 3. மொஃபாத், 1979:3 - ச. பிலவேந்திரன் அவர்களின் தமிழ்ச் சொல்லாடலும் மானிடவியல் விவாதங்களும்
 4. "அநீதி". தீக்கதிர் (18 ஏப்ரல் 2012). பார்த்த நாள் 27 ஏப்ரல் 2014.
 5. S. Dorairaj (Volume 26 - Issue 24 :: Nov. 21-Dec. 04, 2009). "Unwilling to act Governments across the country have shown a remarkable reluctance to use the S.C./S.T. Act to protect Dalits from upper-caste violence.". Frontline. பார்த்த நாள் 27 ஏப்ரல் 2014.
 6. Shoumojit Banerjee (17 ஏப்ரல் 2012). "All accused in 1996 Bihar Dalit carnage acquitted". தி இந்து. பார்த்த நாள் 27 ஏப்ரல் 2014.
 7. கிருஷ்ணகிரியில் தலித் சிறுவன் மீது வன்கொடுமை: 6 பேர் கைது
 8. [http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=147133%7C ரிங்டோனில் அம்பேத்கர் பாட்டு: தலித் இளைஞர் கொலையில் 4 பேர் சிக்கினர்] தினகரன் மே 24 2015
 9. நுழைந்த 4 தலித் பெண்களுக்கு அபராதம்: கர்நாடகாவில் அவலம் தி இந்து தமிழ் 08. செப்டம்பர் 2015

துணை நூல்கள்[தொகு]

 • சி.என். குமாரசாமி. (2001). அம்பேத்கரும் தலித் மனித உரிமைப் போராட்டமும். சென்னை: தமிழ் புத்தகாலயம்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலித்&oldid=1941764" இருந்து மீள்விக்கப்பட்டது