பகவந்த் மான்
பகவந்த் மான் | |
---|---|
![]() | |
பகவந்த் சிங் மான் | |
17வது பஞ்சாப் முதலமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 16 மார்ச் 2022 | |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித் |
முன்னவர் | சரண்ஜித் சிங் சன்னி |
இந்திய பஞ்சாபின் சட்டமன்றம் பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 16 மார்ச் 2022 | |
முன்னவர் | தல்வீர் சிங் கங்குரா |
தொகுதி | தூரி சட்டமன்றத் தொகுதி |
இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 16 மே 2014 – 14 மார்ச் 2022 | |
முன்னவர் | விஜய் இந்தர் சிங்லா |
தொகுதி | சங்கரூர் |
ஒருங்கிணைப்பாளர், பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சி | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 31 சனவரி 2019[1] | |
முன்னவர் | பல்பீர் சிங் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | பகவந்த் சிங் மான் 17 அக்டோபர் 1973 சங்கரூர், பஞ்சாப், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | ஆம் ஆத்மி கட்சி |
பிற அரசியல் சார்புகள் |
பஞ்சாப் மக்கள் கட்சி (2012-2014) |
தொழில் | நடிகர், பாடகர், நகைச்சுவையாளர், சமூக ஆர்வலர், அரசியல்வாதி |
கையொப்பம் | ![]() |
இசை வாழ்க்கை | |
பிற பெயர்கள் | "நகைச்சுவை மன்னன்", "ஜுக்னு" |
இசை வடிவங்கள் | நகைச்சுவை |
இசைத்துறையில் | 1992–2015 |
பகவந்த் மான் (Bhagwant Singh Mann ) (பிறப்பு: 17 அக்டோபர் 1973) இந்தியாவின் பஞ்சாப் மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி அரசியல்வாதியும், சமூக ஆர்வலரும், நகைச்சுவையாளரும், பாடகரும்,முன்னாள் நடிகரும் ஆவார். 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளாராக இவரது பெயர் அறிவிக்கப்பட்டது.[2]இவர் 10 மே 2017 அன்று சங்கரூர் மக்களவைத் தொகுதியிலிருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அரசியல் வாழ்க்கை[தொகு]
2011-ஆம் ஆண்டில் பகவந்த் மான் பஞ்சாப் மக்கள் கட்சியில் இணைந்தார்.[3][4]2012 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் லெகரா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.
மார்ச் 2014-இல் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து சங்கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 2,11,721 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.[5]2017 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக ஜலாலாபாத் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். [6] இவர் 2017 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலின் போது போதை மது சர்ச்ச்சையில் சிக்கினார்.[7] [8]
2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பகவந்த் மான் ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக சங்கரூர் மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு வென்றார்.
பஞ்சாப் முதலமைச்சர் பதவி[தொகு]
சனவரி 18, 2022 அன்று, பகவந்த் மன், 2022 பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலில் பஞ்சாப் முதலமைச்சருக்கான ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு பொது வாக்கெடுப்பின் அடிப்படையில் 93% வாக்காளர்கள் பகவந்த் மான் முதல்வராக ஆக வேண்டும் என்று கூறினர். இவரது தலைமையின் கீழ் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி 2022ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல்களில் 117 இடங்களில் 92 இடங்களை வென்றது.[9] பஞ்சாபின் முதல் அமைச்சராகப் பகவந் மன் பதவியேற்பார் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.[10][11]
இவர் 16 மார்ச் 2022 அன்று, பகத் சிங் பிறந்த ஊரான கட்கர் கலனில் பஞ்சாப் முதலமைச்சராக, பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தால் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.[12][13]
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ A year after exit Bhagwant Mann reappointed Punjab Aam Aadmi Party Chief
- ↑ Punjab election: AAP announces Bhagwant Mann as its chief ministerial candidate
- ↑ [1] பரணிடப்பட்டது 13 ஆகத்து 2011 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "I want to see Punjab growing- Bhagwant Mann". Americanpunjabinews.com. 2011-03-21 இம் மூலத்தில் இருந்து 3 September 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110903222910/http://www.americanpunjabinews.com/index.php?option=com_content&view=article&id=1452:i-want-to-see-punjab-growing-bhagwant-mann&catid=24:english-news.
- ↑ "Sangrur MP Bhagwant Mann of AAP" (in en). June 2, 2014. https://www.indiatoday.in/elections/new-mps-2014/story/sangrur-bhagwant-mann-of-aap-195359-2014-06-02.
- ↑ "Bhagwant Mann to contest from Jalalabad" (in en). https://www.tribuneindia.com/news/archive/features/bhagwant-mann-to-contest-from-jalalabad-285610.
- ↑ "Mann 'drunk' complaint to Parliament: 'Kejriwal was told many times but least bothered'" (in en). 2016-07-23. https://indianexpress.com/article/india/india-news-india/mann-drunk-complaint-to-parliament-kejriwal-was-told-many-times-but-least-bothered-2930906/.
- ↑ "Bhagwant Mann says won't drink from now, Arvind Kejriwal terms it 'sacrifice' for people" (in en). 2019-01-20. https://www.hindustantimes.com/india-news/bhagwant-mann-says-won-t-drink-from-now-arvind-kejriwal-terms-it-sacrifice-for-people/story-RMG9UnTPx8ZWDkyo5sc61J.html.
- ↑ "AAP Picks Bhagwant Mann For Punjab, Says He Scored 93% In Televote" (in en). https://www.ndtv.com/india-news/aap-names-bhagwant-mann-as-chief-minister-candidate-for-punjab-based-on-public-votes-2714230.
- ↑ ""This Big A Majority Scares Me Too," Says Arvind Kejriwal". https://www.ndtv.com/india-news/this-big-a-majority-scares-me-too-says-arvind-kejriwal-2814970.
- ↑ "'Will take oath in Bhagat Singh's ancestral village, not Raj Bhawan':, Bhagwant" (in en). 2022-03-10. https://www.hindustantimes.com/elections/punjab-assembly-election/will-take-oath-in-bhagat-singh-s-ancestral-village-not-raj-bhawan-bhagwant-101646907325044.html.
- ↑ Bhagwant Mann assumes office as Punjab Chief Minister
- ↑ 'Won't waste single day': Bhagwant Mann takes oath as Punjab CM at Bhagat Singh's village