சரண்ஜித் சிங் சன்னி
சரண்ஜித் சிங் சன்னி | |
---|---|
16வது பஞ்சாப் மாநில முதலமைச்சர் | |
பதவியில் 20 செப்டம்பர் 2021 – மார்ச் 2022 | |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித் |
முன்னையவர் | அமரிந்தர் சிங் |
அமரிந்தர் சிங்கின் இரண்டாம் அமைச்சரவை, பஞ்சாப் அரசு | |
பதவியில் 16 மார்ச் 2017-2021 | |
பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2007 - 2022 | |
முன்னையவர் | சத்வந்த் கௌர் |
தொகுதி | சம்கௌர் சாகிப் சட்டமன்றத் தொகுதி |
பஞ்சாப் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் | |
பதவியில் 11 டிசம்பர் 2015 – 11 நவம்பர் 2016 | |
முன்னையவர் | சுனில் குமார் ஜாக்கர் |
பின்னவர் | ஹர்விந்தர் சிங் பூல்கா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 ஏப்ரல் 1973 சாகிப்ஜாதா அஜித்சிங் நகர் மாவட்டம், பஞ்சாப், இந்தியா |
துணைவர் | கமல்ஜித் கௌர் |
பிள்ளைகள் | நவ்ஜித் சிங், ரிதம்ஜித் சிங் |
வாழிடம்(s) | காரர், சாஸ் நகர், மொகாலி |
சரண்ஜித் சிங் சன்னி (Charanjit Singh Channi), அமரிந்தர் சிங் 18 செப்டம்பர் 2021 அன்று பதவி விலகிய பின்னர் இவர் பஞ்சாப் மாநில புதிய முதலமைச்சராக 19 செப்டம்பர் 2021 அன்று இந்திய தேசிய காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.[1][2]இந்திய தேசிய காங்கிரசு கட்சி அரசியல்வாதியான இவர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். 49 வயதான சரண்ஜித் சிங் சன்னி, மூன்று முறை சம்கௌர் சாகிப் சட்டமன்றத் தொகுதியிலிருந்து பஞ்சாப் சட்டமன்றத்திற்கு தேர்வானவர். இவர் 2015-2019 காலத்தில் பஞ்சாப் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக செயல்பட்டவர். மேலும் இவர் 2017-இல் அமரிந்தர் சிங் அமைச்சரவையில் தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழிலக பயிற்சித்துறை அமைச்சராக இருந்தவர்.[1] 20 செப்டம்பர் 2021 அன்று பஞ்சாப் முதலமைச்சராகப் பதவியேற்றார்.[3]
வரலாறு
[தொகு]பஞ்சாப் மாநிலத்தின் மக்ரோனா காலன் என்ற கிராமத்தில் 2 ஏப்ரல்,1972இல் எஸ். ஹர்சா சிங், தாய் அஜ்மீர் கவுருக்கு மகனாகப் பிறந்தார் சரண்ஜித் சிங். பள்ளிப்படிப்பை முடித்த பின் இவர் சண்டீகரில் உள்ள ஸ்ரீ குரு கோவிந்த் சிங் கல்லூரியில் இளங்கலைப் படிப்பும், பின்னர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பையும் முடித்தார். பிறகு பஞ்சாப் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (ஜலந்தர்) முதுகலை மேலாண்மைப் படிப்பு முடித்தார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஆட்சி இயலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[4] காங்கிரசு தொகுதியை தர மறுத்ததால் கட்சி சாராமல் போட்டியிட்டு 2007இல் இவர் முதல் முறையாக சம்கௌர் சாகிப் சட்டமன்றத் தொகுதியிலிருந்து பஞ்சாப் சட்டமன்றத்திற்கு தேர்வானார் அதன் பின் 2012, 2017இல் காங்கிரசு சார்பாக போட்டியிட்டு வென்றார். மூன்று முறை தொடர்ந்து சம்கௌர் சாகிப் சட்டமன்றத் தொகுதியிலிருந்து உறுப்பினராக இருக்கிறார்.[5]
2022 தேர்தல்
[தொகு]சட்டமன்ற காலத்தின் முடிவில், 2022 சட்டமன்றத் தேர்தலுக்கான இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக சன்னி நியமிக்கப்பட்டார்.இவர் 2022 பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலில் சம்கவுர் சாஹிப் மற்றும் பதவுர் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டார். ஆனால் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களிடம் இந்த இரண்டு இடங்களையும் இழந்தார்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Charanjit Singh Channi elected as Punjab Congress Legislature Party leader, set to take over as CM
- ↑ "பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் தேர்வு". Archived from the original on 2021-09-19. பார்க்கப்பட்ட நாள் 2021-09-19.
- ↑ Charanjit Singh Channi takes oath as Punjab Chief Minister, two deputies sworn in
- ↑ Who is Charanjit Singh Channi, the man who is set to be Punjab’s first Dalit Sikh CM
- ↑ பஞ்சாபின் தலித்' முதல்வர் சரண்ஜித் சன்னி
- ↑ "Punjab assembly election 2022: In setback to Congress, CM Channi loses from both seats" (in en). Hindustan Times. 10 March 2022. https://www.hindustantimes.com/elections/punjab-assembly-election/punjab-polls-in-setback-to-congress-cm-channi-loses-from-both-seats-101646902901759.html.