சாகிப்ஜாதா அஜித்சிங் நகர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாகிப்சாதா அஜித்சிங் நகர் மாவட்டம்
மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாப்
தலைமையிடம்மொகாலி
பரப்பளவு
 • மொத்தம்1,094 km2 (422 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்994,628
 • அடர்த்தி909/km2 (2,350/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிபஞ்சாபி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-PB-SA
இணையதளம்www.sasnagar.gov.in

சாகித்ஜாதா அஜித்சிங் நகர் மாவட்டம் (Sahibzada Ajit Singh Nagar) (அதிகாரப்பூர்வமாக[1]) (சுருக்கமாக SAS நகர் என்பர்)

வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் 22 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் மொகாலி ஆகும். ஏப்ரல் 2006-இல் ரூப்நகர் மாவட்டம் மற்றும் பட்டியாலா மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு புதிதாக துவக்கப்பட்ட இம்மாவட்டத்திற்கு மொகாலி மாவட்டம் என முதலில் பெயரிடப்பட்டது. பின்னர் சீக்கிய சமய குரு கோவிந்த் சிங்கின் மூத்த மகன் சாகிப்ஜாதா அஜித்சிங்கின் நினைவாக மொகாலி மாவட்டத்தை சாகிப்சதா அஜித் சிங் நகர் மாவட்டம் பெயர் மாற்றி அமைக்கப்பட்டது. [2][3]

மாவட்ட அமைவிடம்[தொகு]

இம்மாவட்டம் பட்டியாலா மாவட்டம், பதேகாட் சாகிப் மாவட்டம் அரியானா மாநிலத்தின் பஞ்சகுலா மாவட்டம், பஞ்சகுலா மாவட்டம், அம்பாலா மாவட்டம் மற்றும் சண்டிகர், இமாசலப் பிரதேசம் சோலன் மாவட்டம் ஆகியவைகளால் சூழப்பெற்றது.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

1,094 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம் சாகிப்ஜாத அஜித்சிங் நகர் வட்டம், கரார், தேராபஸ்சி என மூன்று வருவாய் வட்டங்களையும், கரார். மஜ்ஜிரி, தேராபஸ்சி என மூன்று ஊராட்சி ஒன்றியங்களையும் கொண்டுள்ளது.

அரசியல்[தொகு]

இம்மாவட்டம் கரார், எஸ் எ. எஸ். நகர் மற்றும் தேரா பஸ்சி என மூன்று சட்டமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 994,628 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 45.24% மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் 54.76% வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி 33.15%% விகிதம் ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 529,253 ஆண்களும் மற்றும் 465,375 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 879 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. 1,094 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 909 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 83.80% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 87.89% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 79.18% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 115,644 ஆக உள்ளது. [4]

சமயம்[தொகு]

இம்மாவட்டத்தில் சீக்கிய சமய மக்கள் தொகை 478,908 (48.15 %) ஆகவும், இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 476,276 (47.88 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 29,488 (2.96 %) ஆகவும், கிறித்தவ, பௌத்த, சமண சமய மக்கள் தொகை மிகக் குறைவாக உள்ளது.

மொழிகள்[தொகு]

பஞ்சாப் மாநிலத்தின் ஆட்சி மொழியான பஞ்சாபி மொழியுடன், இந்தி, உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]