அமரிந்தர் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமரிந்தர் சிங்
பஞ்சாப் முதலமைச்சர்
பதவியில்
16 மார்ச் 2017 – 18 செப்டம்பர் 2021
முன்னவர் பிரகாஷ் சிங் பாதல்
பஞ்சாப் மாநில காங்கிரசு குழுத் தலைவர்
பதவியில்
1998–2002
முன்னவர் இரஜீந்தர் கவுர் பட்டல்
பின்வந்தவர் எச் எசு அன்சுபல்
பதவியில்
2010–2013
முன்னவர் மொகிந்தர் சிங் கேப்பீ
பின்வந்தவர் பர்தாப் சிங் பாஜ்வா
மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2014 - 2017
முன்னவர் நவ்ஜோத் சிங் சித்து
தொகுதி அமிர்தசரசு
பதவியில்
1980-1984
முன்னவர் குருசரண் சிங் டோரா
பின்வந்தவர் சரண்சித் சிங் வாலியா
தொகுதி பாட்டியாலா
தனிநபர் தகவல்
பிறப்பு மார்ச்சு 11, 1942 (1942-03-11) (அகவை 81)
பட்டியாலா, பஞ்சாப்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
சார்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) பிரநீத் கவுர்
இருப்பிடம் புது மோத்தி பாக் அரண்மனை, பட்டியாலா
இணையம் அலுவல்முறை வலைத்தளம்

கேப்டன் அமரிந்தர் சிங் (பிறப்பு: மார்ச்சு 11, 1942) பஞ்சாபைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதி ஆவார். முன்னாள் பாட்டியாலா இராச்சியத்தைச் சேர்ந்த இவர் பஞ்சாபின் முதலமைச்சராகப் பணிபுரிந்துள்ளார்.[1] 2014 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சியின் பெருந்தலைவரான அருண் ஜெட்லியைத் தோற்கடித்து அமிர்தசரசு இல் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் 2002 முதல் 2007 முடிய பஞ்சாப் முதலமைச்சராக இருந்தவர். இவர் மீண்டும் இரண்டாம் முறையாக 16 மார்ச் 2017 அன்று மீண்டும் பஞ்சாப் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021-இல் காங்கிரசு கட்சி மேலிடத்தில் மீது ஏற்பட்ட அதிருப்தியால், அம்ரிந்தர் சிங் தனது முதலமைச்சர் பதவி விலகல் கடிதத்தை, பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் 18 செப்டம்பர் 2021 அன்று கொடுத்தார்.[2][3]

பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சி நிறுவுதல்[தொகு]

பஞ்சாப் மாநில முதலமைச்சராக இருந்த அமரிந்தர் சிங்கிற்கும், நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் ஏற்பட்ட உட்கட்சி மோதல்கள் காரணமாக, அமரிந்தர் சிங் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.[4] பின் 2 நவம்பர் 2021 அன்று இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து விலகி 2 நவம்பர் 2021 அன்று பஞ்சாப் லோக் காங்கிரஸ் அரசியல் கட்சியை நிறுவினார்.[5][6]

தனி வாழ்க்கை[தொகு]

அமரிந்தர் சிங் புலிகான் மரபுவழிவந்த பாட்டியாலா அரசப் பரம்பரையில் மகாராசா யாதவேந்திர சிங்கிற்கும் மகாராணி மொகீந்தர் கவுருக்கும் மகனாகப் பிறந்தார்.[7] தேராதூனில் உள்ள தூன் பள்ளியில் சேர்வதற்கு[8] முன்னதாக வெல்காம் பாய்சுப் பள்ளியிலும் சனாவர் இலாரன்சு பள்ளியிலும் கல்வியைத் துவக்கினார்.[9] இவருக்கு ரனீந்தர் சிங் என்ற மகனும் ஜெய் இந்தர் கவுர் என்ற மகளும் உள்ளனர். இவரது மனைவி பிரீநீத் கவுர் 2009-14 காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்; அப்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பாற்றி உள்ளார்.

இவரது அக்காள் எமீந்தர் கவுர் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் கே. நட்வர் சிங்கைத் திருமணம் செய்துள்ளார். முன்னாள் நடுவண் காவல்பணி அலுவலரும் சிரோமணி அகாலி தளத்தின் தலைவருமான சிம்ரன்ஜித் சிங் மான் இவருக்கு உறவினர் ஆவார்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "City Centre Scam: Next hearing on February 27". The Times Of India. 6 February 2010 இம் மூலத்தில் இருந்து 2013-09-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130928034659/http://articles.timesofindia.indiatimes.com/2010-02-06/ludhiana/28123489_1_city-centre-scam-hearing-arguments-today-homes. 
  2. பஞ்சாப் முதல் மந்திரி பதவியில் இருந்து அமரீந்தர் சிங் ராஜினாமா
  3. பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் பதவி விலகல்: என்ன காரணம்?
  4. Amarinder Singh resigns as Punjab Chief Minister amid turmoil in Congress
  5. லோக் காங்கிரஸ்: புதுக்கட்சி பெயரை அறிவித்தார் அமரீந்தர் சிங்[தொடர்பிழந்த இணைப்பு]
  6. Capt Amarinder Singh resigns from Congress, announces new party 'Punjab Lok Congress'
  7. http://www.royalark.net/India/jind.htm
  8. "'Seven Doscos in 15th Lok Sabha'". இந்தியன் எக்சுபிரசு. 31 May 2009. http://www.indianexpress.com/news/seven-doscos-in-15th-lok-sabha/468807. 
  9. Sharma, Pratul (19 January 2012). "Captain goes all guns blazing: Congress's Amarinder Singh insists he hasn't mellowed and is sure of victory in Punjab as he takes on the Badals". Daily Mail (London). http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2088642/Congresss-Amarinder-Singh-sure-victory-Punjab.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமரிந்தர்_சிங்&oldid=3517660" இருந்து மீள்விக்கப்பட்டது