நவ்ஜோத் சிங் சித்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நவ்ஜோத் சித்து
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் நவ்ஜோத் சிங் சித்து
பிறப்பு 20 அக்டோபர் 1963 (1963-10-20) (அகவை 55)
இந்தியா
வகை துடுப்பாட்டம்
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 166) நவம்பர் 12, 1983: எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு சனவரி 6, 1999: எ நியூசிலாந்து
முதல் ஒருநாள் போட்டி (cap 61) அக்டோபர் 9, 1987: எ ஆத்திரேலியா
கடைசி ஒருநாள் போட்டி செப்டம்பர் 20, 1998:  எ பாக்கித்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 51 136 157 205
ஓட்டங்கள் 3202 4,413 9,571 7,186
துடுப்பாட்ட சராசரி 42.13 37.08 44.31 41.77
100கள்/50கள் 9/15 6/33 27/50 10/55
அதிக ஓட்டங்கள் 201 134* 286 139
பந்து வீச்சுகள் 6 4 104 10
வீழ்த்தல்கள் 0
பந்துவீச்சு சராசரி
ஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 9/– 20/– 50/– 31/–

சனவரி 1, 2009 தரவுப்படி மூலம்: espncricinfo

நவ்ஜோத் சிங் சித்து (Navjot Singh Sidhu, பிறப்பு: அக்டோபர் 20 1963, இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர் மற்றும் அரசியல்வாதி ஆவார், இவர் இந்தியத் துடுப்பாட்ட அனிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் ஆகிய போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போது இவர் பஞ்சாப் மாநில அமைச்சராக உள்ளார்.தற்போது்இவர் இவர் 51 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 136 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1983 – 1998 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.[1]

இவர் 1981 -1982 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைத் திடரில் முதல் முறையாக முதல்தரத் துடுபபட்டப் போட்டிகளில் விளையாடினார். சுமார் 19 ஆண்டுகாலம் இவர் துடுபாடம் விளையாடியுள்ளார். சில காலங்கள் தேசிய அணியில் இவருக்கு இடம் கிடைக்காமல் உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடினார்.அதில் சிறப்பாக விளையாடியதனால் 1983 ஆம் ஆண்டில் இவர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார். 1987 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் நான்கு அரை நூறுகள் அடித்தார். பெரும்பான்மையாக இவர் துவக்க வீரராகவே களம் இறங்குவார். இவர் ஆறு ஓட்டங்கள் திறனின் மூலம் இவர் பரவாலக அறியப்பட்டார். இந்தத் திறனின் மூலம் இவர் சிக்சர்ஸ் சித்து எனும் புனைபெயர் கொண்டு அழைக்கப்பட்டார்.[2] தனது ஓய்விற்குப் பிறகு துடுப்பட்டப் போட்டிகளின் வர்ணனையாளராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் நடுவராகவும் பணிப்ரிந்தார். 2013 முதல் 2015 ஆம் ஆண்டுகள்வரை நடைபெற்ற காமெடி நைட் வித் கபில் எனும் நகைச்சுவைத் தொடரில் நிரந்தர விருந்தினராகப் பங்குபெற்றார்.பின் 2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராக கலந்துகொண்டார்.

சர்வதேச போட்டிகள்[தொகு]

1983 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இதில் நவம்பர் 12 இல் அகமதாபாத்தில் மேற்கிந்தியத் தீவுகள் துடுபபட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்ட்டியின் முட்க்ஹல் ஆட்டப்பகுதியில் 15 ஓட்டங்கள் எடுத்து ரன் அவுட் அனார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 4 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 138 ஓட்டங்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது.[3]

பின் இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் இவர் அதிக ஓட்டங்களை எடுக்கவில்லை. பின் 1987 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடருக்கான இந்தியத் துடுப்பாட்ட அணியில் இவருக்கு இடம் கிடைத்தது. இந்தத் தொடரில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.இந்தப் போட்டியிலிவர் 73 ஓட்டங்கள் எடுத்தார். இருந்த ப்பொதிலும் இந்தப் போட்டியில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி வெற்றி பெற்றது. இவர் இந்தத் தொடரில் நான்கு போட்டிகளில் அரைநூறு ஓட்டங்களை எடுத்தார். பின் அரையிறுதியில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோற்றது. 1989 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்டா ணி பாக்கித்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. சார்ஜவில் நடைபெற்ற பாக்கித்தன் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் தனது முதல் நூறு ஓட்டங்களைப்பதிவு செய்தார். பின் 1993 ஆம் ஆண்டில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது . குவாலியரில் நடைபெற்ற இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலிவர் 139 ஓட்டங்களை அடித்தார்.

சான்றுகள்[தொகு]

  1. "Punjab: Navjot Singh Sidhu to take charge of Local Government, Tourism & Cultural Affairs Ministry" (16 March 2017). பார்த்த நாள் 18 March 2017.
  2. "Navjot Sidhu: From 'Sid who?' to 'Sixer Sidhu!'". ESPNcricinfo (3 December 1999). பார்த்த நாள் 11 March 2017.
  3. 3rd Test, West Indies tour of India at Ahmedabad, Nov 12-16 1983 | Match Summary | ESPNCricinfo, http://www.espncricinfo.com/series/16933/scorecard/63352/india-vs-west-indies-3rd-test-west-indies-tour-of-india-1983-84/, பார்த்த நாள்: 2018-05-31 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவ்ஜோத்_சிங்_சித்து&oldid=2720293" இருந்து மீள்விக்கப்பட்டது