அருண் ஜெட்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருண் ஜெட்லி
Arun Jaitley, Minister.jpg
நிதித்துறை அமைச்சர்
பதவியில்
26 மே 2014 – 30 மே 2019
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் ப. சிதம்பரம்
பின்வந்தவர் நிர்மலா சீத்தாராமன்
பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர்
பதவியில்
26 மே 2014 – 30 மே 2019
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் சச்சின் பைலட்
பின்வந்தவர் நிர்மலா சீத்தாராமன்
பாதுகாப்புத்துறை அமைச்சர்
(கூடுதல் பொறுப்பு)[1][2][3]
பதவியில்
26 மே 2014 – 9 நவம்பர் 2014
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் அ. கு. ஆன்டனி
பின்வந்தவர் மனோகர் பாரிக்கர்
பதவியில்
13 மார்ச் 2017 – 3 செப்டம்பர் 2017
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் மனோகர் பாரிக்கர்
பின்வந்தவர் நிர்மலா சீத்தாராமன்
எதிர்க்கட்சித் தலைவர், மாநிலங்களவை
பதவியில்
3 ஜூன் 2009 – 26 மே 2014
முன்னவர் ஜஸ்வந்த் சிங்
பின்வந்தவர் குலாம் நபி ஆசாத்
சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர்
பதவியில்
29 ஜுலை 2003 – 21 மே 2004
பிரதமர் அடல் பிகாரி வாச்பாய்
முன்னவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி
பின்வந்தவர் எச். ஆர். பரத்வாஜ்
பதவியில்
7 நவம்பர் 2000 – 1 ஜுலை 2002
பிரதமர் அடல் பிகாரி வாச்பாய்
முன்னவர் ராம் ஜெத்மலானி
பின்வந்தவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி
தனிநபர் தகவல்
பிறப்பு 28 திசம்பர் 1952 (1952-12-28) (அகவை 66)
புது தில்லி
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) சங்கீதா ஜெட்லி
இருப்பிடம் புது தில்லி
படித்த கல்வி நிறுவனங்கள் ஸ்ரீராம் பொருளியல் கல்லூரி மற்றும் தில்லி பல்கலைக்கழகம்
பணி அரசியல்வாதி மற்றும் வழக்கறிஞர்
தொழில் மூத்த வழக்கறிஞர், இந்திய உச்ச நீதிமன்றம்
சமயம் இந்து சமயம்
இணையம் www.arunjaitley.com

அருண் ஜெட்லி (Arun Jaitley, பிறப்பு திசம்பர் 28, 1952) இந்திய பதினாறாவது மக்களவையின் அமைச்சரவையில் நிதியமைச்சராகவும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சராகவும் பொறுப்பில் இருந்தவன் ஆவார். தவிர பாதுகாப்பு அமைச்சராகக் கூடுதல் பொறுப்பிலும் இருந்துள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும் இந்திய உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் மூத்த வழக்கறிஞரும் ஆவார். பதினைந்தாவது மக்களவையில் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எதிர்கட்சித் தலைவராக இருந்தார். முன்னதாக 1998-2004 காலகட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆய அமைச்சரவையில் பொருளாதார மற்றும் தொழில் அமைச்சராகவும் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.2014 பொதுத் தேர்தலில், அமிர்தசரசு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர், படைத்தலைவர் அமரிந்தர் சிங்கிடம் தோற்றார்.

தனி வாழ்வு[தொகு]

பஞ்சாபி இந்து பிராமணக் குடும்பத்தில் வழக்கறிஞர் மகராசு கிசன் ஜெட்லிக்கும் இரத்தன் பிரபா ஜெட்லிக்கும் மகனாகப் பிறந்தார்.[4][5] தமது பள்ளிக்கல்வியை தில்லியின் புனித சேவியர் பள்ளியில் 1957 முதல் 69 வரை பயின்றார்.[6] பொருளியல் இளங்கலைப் பட்டத்தை சிறீராம் பொருளியல் கல்லூரியில் 1973இல் பெற்றார். 1997இல் சட்டப்படிப்பை தில்லி பல்கலைக்கழகத்தில் முடித்தார்.[7] தமது மாணவப் பருவத்தில் கல்வித்திறன் மற்றும் பிற கல்விசாரா செயற்பாடுகளுக்காக பாராட்டுக்கள் பெற்றுள்ளார். 1974இல் தில்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத் தலைவராக இருந்துள்ளார்.[8]

ஜெட்லி மே 24, 1982இல் சங்கீதாவைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ரோகன் என்ற மகனும்[9] சோனாலி என்ற மகளும் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Full minister defence minister in a few weeks: Arun Jaitley". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (28 May 2014).
  2. "Stint as defence minister will be short-term". டெக்கன் ஹெரால்டு (28 May 2014).
  3. "Modi ministry to be expanded before Budget session". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (28 May 2014).
  4. Arun Jaitley is no ‘outsider’ to Amritsar – Niticentral
  5. "Sorry". The Indian Express. பார்த்த நாள் 25 October 2012.
  6. "My memorable School days at St. Xaviers". Arun Jaitley. பார்த்த நாள் 17 February 2013.
  7. "Member Profile: Arun Jeitley". Rajya Sabha. பார்த்த நாள் 17 February 2013.
  8. http://pib.myiris.com/profile/article.php3?fl=D20166
  9. "Knot for everybody's eyes". The Times of India. 24 April 2004. http://timesofindia.indiatimes.com/delhi-times/knot-for-everybodys-eyes/articleshow/636819.cms. பார்த்த நாள்: 25 October 2012. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருண்_ஜெட்லி&oldid=2748584" இருந்து மீள்விக்கப்பட்டது