பாரதிய ஆய்வு மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாரதிய ஆய்வு மையம் (Bharatiya Vichara Kendra), இந்துத்துவா கருத்தியல் கொண்ட சங்கப் பரிவாரின் ஒரு அமைப்பாகும். இந்திய நாட்டின் மறு கட்டமைப்புக்கான ஆய்வு மையமாக பாரதிய ஆய்வு கேந்திரத்தை பி. பரமேஸ்வரன் தலைமையில் 1982இல் திருவனந்தபுரத்தில் தத்தோபந்த் பாபுராவ் தெங்காடியால் துவக்கி வைக்கப்பட்டது. இவ்வமைப்பு 13 நவம்பர் 1991ஆம் ஆண்டில் அரசிடம் பதிவு செய்துள்ளது.[1]

பணிகள்[தொகு]

மாநில மற்றும் தேசிய அளவிலான முக்கிய பிரச்சனைகள் குறித்து, பலதரப்பட்ட அறிஞர்களின் தலைமையில், பல தலைப்புகளில் கருத்துப் பட்டறைகளும், சொற்பொழிவுகளும் தொடர்ந்து நடத்தி வருகிறது.

சமசுகிருதம், யோகா மற்றும் பகவத் கீதை போன்றவற்றை மக்களிடையே பரப்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது..

அங்கீகாரம் மற்றும் இணைப்புகளும்[தொகு]

பாரதிய ஆய்வு மையத்தில் செயல்படும் பாரதீய சிறப்பு ஆய்வு நிறுவனத்தை[2] மகரிஷி தயானந்த சரசுவதி பல்கலைக்கழகம் மற்றும் அஜ்மீர் பல்கலைக்கழகம், இதனை ஒரு ஆய்வு மையமாக அங்கீகரித்ததுடன், தங்களின் ஒரு இணைப்பு மையமாக கொண்டுள்ளது. மேலும் இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக் கழகம், தனது கிளையை பாரதிய சிறப்பு ஆய்வு மையத்தில் 2007ஆம் ஆண்டில் தொடங்கியுள்ளது. இவ்வாய்வு மையத்தில் முதுநிலை வணிக நிர்வாகவியல் மற்றும் வணிக நிதி நிர்வாகம் படிப்புகள் தொடங்கியுள்ளது.

வெளியீடுகள்[தொகு]

மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் பிரகதி எனும் காலாண்டு ஆய்வு இதழை 1979 முதல் வெளியிட்டு வருவதுடன் பல நூல்களையும் வெளியிட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரதிய_ஆய்வு_மையம்&oldid=3220480" இருந்து மீள்விக்கப்பட்டது