கிரிராஜ் கிசோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆச்சாரிய கிரிராஜ் கிசோர் (Acharya Giriraj Kishore), (4 பிப்ரவரி 1920 - 13 சூலை 2014) இந்துத்துவா கருத்தியல் கொண்டவர். சங்கப்பரிவாரின்சமயப் பிரிவான விசுவ இந்து பரிசத்தின் மூத்த துணைத் தலைவராக செயல்பட்டவர்.

வாழ்க்கை[தொகு]

கிசோர், உத்திரப்பிரதேசம், ஈடா கிராமத்தில் பிறந்தவர். இந்தி மொழி, வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் ஆகியவற்றில் முதுநிலப் பட்டம் பெற்ற பள்ளி ஆசிரியர். பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான விஜயராஜே சிந்தியாவால் ஈர்க்கப்பட்ட கிசோர், அயோத்தியில் மீண்டும் இராமர் கோயில் கட்ட ராம ஜென்மபூமி இயக்கத்தில் கலந்து கொண்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Band of Brothers", by Pradeep Kaushal, The Indian Express பரணிடப்பட்டது 2007-06-22 at the வந்தவழி இயந்திரம், 17 March 2002

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிராஜ்_கிசோர்&oldid=3771543" இருந்து மீள்விக்கப்பட்டது