ராஜேந்திர சிங் (ஆர் எஸ் எஸ்)
Prof. ராஜேந்திர சிங் | |
---|---|
பிறப்பு | 29 சனவரி 1922 ஷாஜகான்பூர், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 14 சூலை 2003 புனே, மகாராஷ்டிரம் |
மற்ற பெயர்கள் | ராஜூ பையா |
படித்த கல்வி நிறுவனங்கள் | அலகாபாத் பல்கலைக்கழகம் |
சமயம் | இந்து |
பேராசிரியர் ராஜேந்திர சிங் (Prof. Rajendra Singh) (29 சனவரி 1922 – 14 சூலை 2003 ), ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் நான்காம் அகில இந்தியத் தலைவராக 1994 முதல் 2000 வரை செயல்பட்டவர். இவரை பொதுவாக ராஜூ பையா என்று அழைப்பர்.[1]இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கெடுத்து, 1942இல் ஆங்கிலேயர்க்கு எதிராக வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கெடுத்தவர்.
இந்துத்துவா கருத்தியல் கொண்ட ராஜேந்திர சிங் பிராமணர் அல்லாத மற்றும் மராத்தியர் அல்லாத முதல் ஆர் எஸ் எஸ் அகில இந்தியத் தலைவராவார்.[2]
அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை பேராசிரியராக இருந்த ராஜேந்திர சிங் தன் வாழ்வை ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்திற்கு அர்பணிக்க, 1960ஆண்டில் ஆசிரியர் பணியை துறந்து ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் முழுநேர பிரச்சாரகராக இணைந்து கொண்டார்.
1980ஆம் ஆண்டில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சங்கத்தின் மூன்றாம் தலைவரான மதுகர் தத்ரேய தேவ்ரஸ், ராஜேந்திர சிங்கை 1994ஆம் ஆண்டில் தலைவராக நியமித்தார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rajju Bhaiyya was a father figure to Parivar
- ↑ "RSS conclave ends with a resolve to transcend caste divisions in Hindu society". http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/rss-conclave-ends-with-a-resolve-to-transcend-caste-divisions-in-hindu-society/articleshow/46590342.cms.
- ↑ "He was the final word for the Parivar". Rediff.com. http://in.rediff.com/news/2003/jul/15guest.htm.