கேசவ பலிராம் ஹெட்கேவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


கேசவ பலிராம் ஹெட்கேவர்
Dr. Hedgevar.jpg
பிறப்பு கேசவ பலிராம்
ஏப்ரல் 1, 1889(1889-04-01)
நாக்பூர், பிரித்தானிய இந்தியா
இறப்பு 21 சூன் 1940(1940-06-21) (அகவை 51)
நாக்பூர், பிரித்தானிய இந்தியா
மற்ற பெயர்கள் ஹெட்கேவர், டாக்டர்ஜி
பணி மருத்துவர், அரசியல்வாதி
அறியப்படுவது நிறுவனத்தலைவர், ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்
சமயம் இந்து சமயம்

கே. பி. ஹெட்கேவர் அல்லது கேசவ பலிராம் ஹெட்கேவர் (Keshav Baliram Hedgewar) (1 ஏப்ரல் 1889 – 21 சூன் 1940), இந்துத்துவம், இந்து தேசியம் எனும் இந்துத்துவா கொள்கையை நிலைநாட்ட, ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தை, நாக்பூரில் 1925ஆம் ஆண்டில் நிறுவியவர் [1]. சுவாமி விவேகானந்தர், அரவிந்தர் மற்றும் வினாயக் தாமோதர் சாவர்க்கர் ஆகியவர்களின் இந்து சமுக மற்றும் ஆன்மிகச் சிந்தனைகளால் கவரப்பட்டவர்.[2]

இளமை வாழ்க்கை[தொகு]

பலிராம் பந்த் ஹெட்கேவர் – ரேவதி தம்பதியருக்கு 1 ஏப்ரல் 1889இல் நாக்பூரில் பிறந்தவர் கேச்வ பலிராம் ஹெட்கேவர். தனது 13வது வயதில் பிளேக் நோயால் பெற்றோரை இழந்தவர். தன் மூத்த சகோதரர்களான மகாதேவ பந்த் மற்றும் சீதாராம் பந்த் ஆதரவுடன் பள்ளிப்படிப்பை நாக்பூரிலும், புனேவிலும் முடித்தார்.

1914இல் மருத்துவப் படிப்பை கல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரியில் முடித்து, 1915இல் நாக்பூருக்கு மருத்துவராகத் திரும்பினார்.[3]

இந்திய விடுதலை இயக்கத்தில்[தொகு]

நாக்பூரில் மருத்துவ சேவை செய்தாலும், இந்திய விடுதலை இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டார். பால கங்காதர திலகர் போன்றவர்களுடன் சேர்ந்து சமுகப் பணியில் ஈடுபட்டார். பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிர பங்கெடுத்து ஒராண்டு சிறை சென்றார்.

இந்திய தேசிய காங்கிரசு கட்சியுடன் கருத்து வேறுபாடு கொண்ட ஹெட்கேவர், ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தை 1925ஆம் ஆண்டில் விஜயதசமி அன்று தோற்றுவித்தார்.

மரணம்[தொகு]

நாக்பூர்,ஆர் எஸ் எஸ் தலைமை அலுவலகத்தில் ஹெட்கேவரின் சிலை

இறுதியாக 1940ஆம் ஆண்டில் ராஷ்ட்டிரிய சுயம்சேவக் சங்க மாநாட்டில் உரையாற்றினார். பின்னர் கடுமையான நோயின் காரணமாக, ராஷ்டிரிய சுயக்சேவக் சங்கத்தின் தலைமைப் பொறுப்புபை எம். எஸ். கோல்வால்கரிடம் ஒப்படைத்து, 21 சூன் 1940இல் மரணமடைந்தார்.

ஹெட்கேவர் நினவு நிறுவனங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Taneja, S. P.(2009). Society and politics in India.Delhi, India:Swastik Publishers & Distributors, 332. ISBN 978-81-89981-29-7. 
 2. http://www.newsinsight.net/Allinthefamily..aspx#page=page-1
 3. Kelkar, D. V. (4 February 1950). "The R.S.S.". Economic Weekly. http://www.epw.in/system/files/pdf/1950_2/4/the_rss.pdf. பார்த்த நாள்: 5 November 2014. 
 4. "Dr.Hedgewar Institute Of Medical Sciences & Research, Amravati".
 5. "Dr.Hedgewar Shikshan Pratishthan, Ahmednagar.".

மேலும் படிக்க[தொகு]

 • Sinha, Rakesh (2003) (in Hindi). Dr. Keshav Baliram Hedgewar. New Delhi: Publication Division, Ministry of Information & Broadcasting, Government of India. 
 • Bapu, Prabhu (2013). Hindu Mahasabha in Colonial North India, 1915-1930: Construction Nation and History. Routledge. ISBN 0415671655. 
 • Basu, Tapan; Sarkar, Tanika (1993). Khaki Shorts and Saffron Flags: A Critique of the Hindu Right. Orient Longman. ISBN 0863113834. 
 • Bhishikar, C. P. (2014) [First published in 1979] (in Hindi). Keshav: Sangh Nirmata. New Delhi: Suruchi Sahitya Prakashan. ISBN 9381500185. 
 • Chitkara, M. G. (2004). Rashtriya Swayamsevak Sangh: National Upsurge. APH Publishing. ISBN 8176484652. 
 • Curran, Jean Alonzo (1951). Militant Hinduism in Indian Politics: A Study of the R.S.S.. International Secretariat, Institute of Pacific Relations. http://catalog.hathitrust.org/Record/001157509. பார்த்த நாள்: 2014-10-27. 
 • Frykenberg, Robert Eric (1996). "Hindu fundamentalism and the structural stability of India". Fundamentalisms and the State: Remaking Polities, Economies and Militance. University of Chicago Press. ISBN 0226508846. 
 • Golwalkar, M. S. (1980). Bunch of thoughts. Bangalore: Jagarana Prakashana. 
 • Goodrick-Clarke, Nicholas (1998). Hitler's Priestess: Savithri Devi, the Hindu-Aryan Myth and the Neo-Nazism. New York University. ISBN 0-8147-3110-4. 
 • Goyal, Des Raj (1979). Rashtriya Swayamsevak Sangh. Delhi: Radha Krishna Prakashan. ISBN 0836405668. 
 • Jaffrelot, Christophe (1996). The Hindu Nationalist Movement and Indian Politics. C. Hurst & Co. Publishers. ISBN 978-1850653011. 
 • Kelkar, D. V. (4 February 1950). "The R.S.S.". Economic Weekly. http://www.epw.in/system/files/pdf/1950_2/4/the_rss.pdf. பார்த்த நாள்: 2014-10-26. 
 • Kelkar, Sanjeev (2011). Lost Years of the RSS. SAGE. ISBN 978-81-321-0590-9. 
 • Sirsikar, V. M. (1988). "My Years in the RSS". The Experience of Hinduism: Essays on Religion in Maharastra. SUNY Press. ISBN 0887066623. 

வெளி இணைப்புகள்[தொகு]