சுனில் அம்பேத்கர்
சுனில் அம்பேத்கர் (Sunil Ambekar) (பிறப்பு:26 டிசம்பர் 1967) மார்ச் 2020 முதல் இராஷ்டிரிய சுயம் சேவாக் சங்கத்தின் ஊடகம் மற்றும் விளம்பரப் பிரிவின் கூட்டுத் தலைவராக நியமிக்கப்பட்டவர்.[1]இப்பொறுப்பு வகிக்கும் முன்னர் சுனில்அம்பேத்கர், 2003-ஆம் ஆண்டு முதல் மாணவர் அணியான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ஏபிவிபி) தேசிய அமைப்புச் செயலாளராக இருந்தார். இவர் The RSS: Roadmaps 21st Century (ஆர்எஸ்எஸ்: 21வது நூற்றாண்டிற்கான சாலை வரைபடங்கள்) எனும் ஆங்கில நூலை எழுதியுள்ளார்.[2]
நாக்பூரில் பிறந்த சுனில் அம்பேகர், விலங்கியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். துவக்கத்தில் விதர்பா பிரதேசத்தின் ஏபிவிபியின் அமைப்புச் செயலாளராக இருந்தார். சீனப் பொதுவுடமைக் கட்சியின் சர்வதேசத் துறையின் கீழ் சர்வதேச நட்பு தொடர்புக்கான சீன சங்கத்தின் (CAIFC) அழைப்பின் பேரில், அவர் சீனாவிற்கு மூன்று பேர் கொண்ட தூதுக்குழுவில் சீனாவிற்கு சென்றார். 2018-ஆம் ஆண்டில் உருசியாவின் அதிபர் தேர்தலின் போது சர்வதேச பார்வையாளராக செயல்பட்டார்.