கே. எஸ். சுதர்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குப்பள்ளி சீதாராம் சுதர்சன்
பிறப்பு18 சூன் 1931 ராய்பூர்
ராய்பூர், மத்தியப்பிரதேசம் (தற்போதைய சத்தீஸ்கர்), இந்தியா
இறப்பு15 செப்டம்பர் 2012, ராய்பூர்
படித்த கல்வி நிறுவனங்கள்ஜபல்பூர் அரசு பொறியியல் கல்லூரி
சமயம்இந்து

கே. எஸ். சுதர்சன் (KuppalliSitaramayyaSudarshan), (18 சூன் 1931 - 15 செப்டம்பர் 2012), ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் 2000 முதல் 2009 முடிய, ஐந்தாவது அகில இந்திய தலைவராவராக பணியாற்றியவர்.

வரலாறு[தொகு]

தற்போதைய சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்பூரில் பிறந்தவர். ஜபல்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் தொலைத்தொடர்பு பொறியியல் படிப்பு பயின்றவர். இந்துத்துவா கருத்தியல் கொண்ட சுதர்சன், 1954ஆம் ஆண்டில் ஆர் எஸ் எஸ் பிரச்சாரகராக ராய்கர் மாவட்டத்தில் தொண்டு செய்தார். 1964இல் மத்திய இந்தியப் பகுதியின் மண்டலச் செயலராக பொறுப்பேற்றார். 10 மார்ச் 2000ஆம் ஆண்டில் ராஜேந்திர சிங்கிற்கு பின்னர் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் அகில இந்திய தலைவராக விளங்கியவர். [1].[2]

மேற்கோள்கள்[தொகு]

முன்னர்
ராஜேந்திர சிங்
அகில இந்தியத் தலைவர்
2000 – 2009
பின்னர்
மோகன் பாகவத்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எஸ்._சுதர்சன்&oldid=3796993" இருந்து மீள்விக்கப்பட்டது