ஏக்நாத் ராமகிருஷ்ண ரானாடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏக்நாத் ராமகிருஷ்ண ரானாடே
பிறப்பு19 நவம்பர் 1914
மகாராஷ்டிரா
இறப்பு22 ஆகஸ்டு 1982
சென்னை, தமிழ்நாடு
தேசியம் இந்தியா
சமயம்இந்து

ஏக்நாத் ராமகிருஷ்ண ரானாடே (நவம்பர் 19, 1914 - ஆகஸ்ட் 22, 1982) ஒரு இந்திய சுதந்திர போராட்ட வீரர் மற்றும் சீர்திருத்தவாதி. நாக்பூர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ (தத்துவம்) பட்டமும், சாகர் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி. பட்டமும் பெற்றவர். விவேகனந்தரின் போதனைகளால் கவரப்பட்டு 1972ல் கன்னியாகுமாரியில் விவேகானந்த கேந்திரத்தை நிறுவினார். இளைஞர்களை நல்ல வழியில் வழிநடத்துவதாலும், அர்பணிப்புடன் கூடிய சேவையாலும் இந்தியாவை வலுவாக்கமுடியும் என்று நம்பினார். தொடர்ந்து தனது இறுதி மூச்சுள்ளவரை பாடுபட்டு அத்தகைய குறிக்கோளுடன் உழைத்தார்.

இளமைக் காலம்[தொகு]

19 நவம்பர் 1914ல் மகாராஷ்டிர அமராவதி மாவட்டத்தில் டிம்டலா என்ற கிராமத்தில் எதாவது குழந்தையாகப் பிறந்தார். இவரது தந்தை, ஸ்ரீ ராமகிருஷ்ணராவ் விநாயக் ரானடே மற்றும் தாய் ரமாபாய் ஆவார்கள். 1920, தனது இளமைக் கால பள்ளிப் படிப்பை நாக்பூரில் தொடர்ந்தார். தனது உறவினர் அண்ணாஜி மூலம் 1926 ல் தேசியத் தொண்டர் அணியில் (ஆர்.எஸ்.எஸ்.) சேர்ந்தார். 1938 ல் தத்துவத்தில் முதுநிலை பட்டமும், 1946 ல் சட்டப்படிப்பிலும் பட்டம் பெற்றார். ஆர்.எஸ்.எஸ் இல் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார்.

விவேகானந்த கேந்திரம்[தொகு]

விவேகானந்தரின் நினைவாக கன்னியாகுமரியில் நினைவு மண்டபம் எழுப்ப 18.08.1963 ல் விவேகானந்தர் நினைவு மண்டப கமிட்டியை உருவாக்கினார். இந்தியா முழுதும் சுற்றுப்பயணம் செய்து, நிதி திரட்டி 1970 ல் மண்டபத்தை கட்டிமுடிக்க பாடுபட்டார். நினைவு மண்டபத்துடன் விவேகானந்தரின் போதனைகளை வழிநடத்த விவேகானந்த கேந்திரத்தை 1972ல் நிறுவினார். ஆகஸ்ட் 22, 1982ல் இறந்தார்.

வெளி இணைப்புகள்[தொகு]