உள்ளடக்கத்துக்குச் செல்

ஏகலைவன் கல்வி அறக்கட்டளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏகலைவன் கல்வி அறக்கட்டளை
சுருக்கம்EVF
உருவாக்கம்1986
நிறுவனர்பாபுராவ் தேவ்ரஸ்
சியாம் குப்தா
தலைமையகம்
வலைத்தளம்www.ekal.org

ஏகலைவன் கல்வி அறக்கட்டளை (Ekal Vidyalaya Foundation), மலைவாழ் பழங்குடியின மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக செயல்படும் தொண்டு நிறுவனம் ஆகும்.[1][2] 1999-2020ஆம் ஆண்டு முதல் ஏகலைவன் கல்வி அறக்கட்டளை இந்திய அரசு நிதியுதவி செய்கிறது.[3][4]மகாபாரதம் காப்பியத்தில் வரும் வேட்டுவ சமூக மாணவரான ஏகலைவன் பெயரால் இந்த அறக்கட்டளை இயங்குகிறது. ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் நான்காவது தலைவராக செயல்பட்ட மதுகர் தத்தாத்திரேய தேவ்ரசின் இளைய சகோதரர் பாபுராவ் தேவ்ரஸ் மற்றும் சியாம் குப்தா ஆகியோரால் இந்த அறக்கட்டளை 1986ம் ஆண்டில் இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் கும்லா மாவட்டத்தில் நிறுவப்பட்டது.[5] இந்த அமைப்பு மலைவாழ் பழங்குடிகள் வாழும் இடங்களில் ஓராசிரியர் பள்ளிக்கூடங்கள் நடத்துகிறது.

ஏகலைவன் அறக்கட்டளை சார்பில் ஆகஸ்டு 2020 வரை இந்தியா முழுவதும் 102753 பள்ளிக்கூடங்கள் இயங்குகிறது. அதில் 2100 பள்ளிகள் வடகிழக்கு இந்தியாவில் செயல்படுகிறது.[6] 2020ஆம் ஆண்டில் ஏகலைவன் கல்வி அறக்கட்டளை சார்பில் இந்தியாவில் 1,02,753 பள்ளிக்கூடங்கள் இயங்குகிறது.[7][8] ஏகலைவன் கல்வி அறக்கட்டளை நோக்கம் 2030ம் ஆண்டிற்குள் இந்தியா முழுவதும் 2 இலட்சம் கிராமங்களில் துவக்கப் பள்ளிக்கூடங்கள் நிறுவதாகும்.

1996ம் ஆண்டில் நேபாள நாட்டின் 54 மலை மாவட்டங்களில் ஏகலைவன் கல்வி அறக்கட்டளை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது நேபாளத்தில் மலைப்பகுதிகளில் 2,310 துவக்கப் பள்ளிக்கூடங்களில் 60,995 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள்.[9]

செயற்பாடுகள்[தொகு]

கல்வி[தொகு]

ஏகலைவன் கல்வி அறக்கட்டளை 6 முதல் 14 வரையான பழங்குடியின குழந்தைகளுக்கு ஐந்தாண்டு முறை-சாராத இலவசக் கல்வி வழங்குகிறது.[10][11] மேலும் இந்த அறக்கட்டளை மாதந்தோறும் மலைவாழ் மக்களுக்கு ஊரக வளர்ச்சி, உள்ளூர் பிரச்சனைகள் மற்றும் உடல் நலம் குறித்து விழிப்புணர்வு ஊட்டுகிறது.[10]

விருது[தொகு]

ஏகலைவன் கல்வி அறக்கட்டளைக்கு இந்திய அரசு 2017ம் ஆண்டில் காந்தி அமைதிப் பரிசு வழங்கப்பட்டது.[12]

மேற்கோள்கள்[தொகு]

 1. owns one of the fastest growing education projects|url=http://www.tehelka.com/story_main49.asp?filename=Ws200411HINDUTVA.asp%7Caccess-date=23 August 2011|newspaper=Tehelka|date=20 April 2011|archive-url=https://web.archive.org/web/20110530143356/http://www.tehelka.com/story_main49.asp?filename=Ws200411HINDUTVA.asp%7Carchive-date=30 May 2011|url-status=dead}}
 2. Dhar, Aarti (18 March 2004). "Making inroads into the tribal belt". தி இந்து (Chennai, India) இம் மூலத்தில் இருந்து 4 February 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090204214225/http://www.hinduonnet.com/thehindu/2004/03/18/stories/2004031803181300.htm. 
 3. "Schooling at a different level". The Daily Telegraph (Calcutta, India). 18 August 2005 இம் மூலத்தில் இருந்து 6 October 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141006164336/http://www.telegraphindia.com/1050818/asp/jharkhand/story_5121483.asp. 
 4. Vishnu, G (20 April 2011). "Sangh owns one of the fastest growing education projects". Tehelka இம் மூலத்தில் இருந்து 30 May 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110530143356/http://www.tehelka.com/story_main49.asp?filename=Ws200411HINDUTVA.asp. 
 5. Bhattacharya, Snigdhendu (10 October 2020). "How one-teacher Ekal schools helped the spread of Hindutva in rural West Bengal". The Caravan (in ஆங்கிலம்). Archived from the original on 12 October 2020. பார்க்கப்பட்ட நாள் 2021-06-21.
 6. "Urban-rural exchange in Ekal conference". The Telegraph (Calcutta, India). 7 April 2008 இம் மூலத்தில் இருந்து 24 October 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121024110908/http://www.telegraphindia.com/1080407/jsp/northeast/story_9103098.jsp. 
 7. "Galveston celebrates 'Enchantment of India'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 21 February 2011 இம் மூலத்தில் இருந்து 26 September 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120926001337/http://articles.timesofindia.indiatimes.com/2011-02-21/art-culture/28618666_1_celebration-mardi-gras-parade-guests. 
 8. "Ekal collects 20,000 for tribal schools". Rediff News. 11 June 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-07-24.
 9. Nepal, Nribesh (2022-07-23). "Ekal Vidyalaya: A power to change pace of life". CEO (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-15.
 10. 10.0 10.1 Correspondent, Navada. "अब आयी एकल विद्यालय की अवधारणा" (in hi). Prabhat Khabar. http://www.prabhatkhabar.com/node/31458. [தொடர்பிழந்த இணைப்பு]
 11. "Ekal Vidyalaya aims at taking the school to the children". தி இந்து (Chennai, India). 16 July 2007 இம் மூலத்தில் இருந்து 8 December 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071208135317/http://www.hindu.com/2007/07/16/stories/2007071658640400.htm. 
 12. Gandhi Peace Prize conferred on Ekal Vidyalaya Foundation
ஆதாரங்கள்