காந்தி அமைதிப் பரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பன்னாட்டு காந்தி அமைதிப் பரிசின் சின்னம்

பன்னாட்டு காந்தி அமைதிப் பரிசு(International Gandhi Peace Prize): மகாத்மா காந்தியின் நினைவாக பெயரிடப்பட்டுள்ள இந்த பரிசு இந்திய அரசினால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

அமைதியை விரும்பிய காந்தியின் கொள்கைகளை பரப்பும் எண்ணத்துடன் இந்திய அரசு 1995ஆம் ஆண்டு,காந்தியின் 125ஆவது பிறந்தநாளை ஒட்டி, இந்த பன்னாட்டு காந்தி அமைதிப்பரிசை உருவாக்கியது. ஆண்டுதோறும் வழங்கப்படும் இப்பரிசு சமூக,பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களை அஹிம்சை மற்றும் காந்தியக் கொள்கைகள் மூலம் உருவாக்க பங்கெடுக்கும் தனிநபர் அல்லது நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது. இவ்விருது எந்த உலகநாணயத்திற்கும் மாற்றக்கூடிய இந்திய ரூபாய் 10 மில்லியன்,ஒரு கோப்பை மற்றும் ஒரு சான்றிதழ் கொண்டது.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய பிரதமர், மக்களவை எதிர்கட்சி தலைவர், இந்திய தலைமை நீதிபதி மற்றும் இரு சிறப்பு உறுப்பினர்கள் கொண்ட குழு இந்த பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கின்றது.

காந்தி பரிசு பெற்றவர்கள்[தொகு]

எண் ஆண்டு பெயர் விவரம்
1. 1995 ஜூலியஸ் நைரேரே முதல் டான்சானியா குடியரசு தலைவர்
2. 1996 A. T. ஆரியரத்னே சர்வோதயா சிரமதான இயக்கம் நிறுவியவர்
3. 1997[1] கெர்ஹார்ட் ஃபிஷர்[2] ஜெர்மன் தூதர், போலியோ மற்றும் வெண்குட்ட நோய்களுக்கெதிரான அவர் பணியை பாராட்டி
4. 1998 ராமகிருஷ்ண மிசன் சுவாமி விவேகாநந்தர் நிறுவியது
5. 1999[3] பாபா ஆம்தே சமூகப் பணியாளர்
6. 2000 நெல்சன் மண்டேலா (கூட்டாக) முன்னாள் தென்னாப்பிரிக்கா அதிபர்
7. 2000 கிராமின் வங்கி (கூட்டாக) முகமது யூனுஸ் நிறுவியது
8. 2001[4] ஜான் ஹூம் வட அயர்லாந்து அரசியலாளர்
9. 2002 பாரதிய வித்தியா பவன்
10. 2003 வாக்லாவ் ஹவேல் செக்கோஸ்லோவேகியாவின் கடைசி அதிபரும் செக் குடியரசின் முதல் அதிபரும்
11. 2004 கொரெட்டா ஸ்காட் கிங் மார்ட்டின் லூதர் கிங்கின் மனைவி
12. 2005[5] டெசுமான்ட் டுட்டு தென்னாப்பிரிக்க பாதிரியார் மற்றும் செயல்திறனாளர்
13. 2013[6] சாந்திபிரசாத் பட் (Chandi Prasad Bhatt) சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்

மேற்கோள்கள்[தொகு]

  1. "President Confers Gandhi Peace Prize 1997 on Dr.Gerhard Fischer of Germany". Press Information Bureau, Government of India (5 January 1998). பார்த்த நாள் 2009-02-24.
  2. Radhakrishnan, R.K. (5 July 2006). "Gerhard Fischer passes away". தி இந்து. பார்த்த நாள் 2009-02-24.
  3. நர்மதா தளம் பார்த்தது Nov 4, 2006.
  4. Press Information Bureau Website accessed Nov 4, 2006.
  5. Tutu to be honoured with Gandhi Peace Award accessed Nov 11, 2008.
  6. http://timesofindia.indiatimes.com/city/lucknow/Chandi-Prasad-Bhatt-wins-Gandhi-Peace-Prize-for-2013/articleshow/31185281.cms

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்தி_அமைதிப்_பரிசு&oldid=2665292" இருந்து மீள்விக்கப்பட்டது