புத்லிபாய் காந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புத்லிபாய் காந்தி
பிறப்பு1844 (1844)[1]
தத்ரானா, ஜுனாகத், கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சி காலம்[2]
இறப்பு12 சூன் 1891(1891-06-12) (அகவை 46–47)
தேசியம்பிரித்தானிய இந்தியா
அறியப்படுவதுமகாத்மா காந்தியின் தாய்
வாழ்க்கைத்
துணை
பிள்ளைகள்

புத்லிபாய் கரம்சந்த் காந்தி (1844 - 12 ஜூன் 1891), விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை  என்று அழைக்கப்படும் இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரரான மகாத்மா காந்தியின் தாயார் ஆவார்.மேலும் இவர் முன்னாள் ராஜ்கோட் திவான் கரம்சந்த் காந்தியின் மூன்றாவது மனைவியுமாவார். அக்காலத்திய வழக்கப்படி இந்து மத பழக்கவழக்கங்களையும், வழிபாட்டு முறைகளையும் கடுமையாக எந்தவித சமரசமும் இல்லாமல் கடைபிடிக்கக்கூடியவரான புத்லிபாய், அப்போதைய ஜூனாகத் மாநிலத்தின் தந்த்ரானா என்ற கிராமத்தை சேர்ந்தவர். [3] புத்லிபாய் அவரது கணவரான கரம்சந்தை விட இருபத்தி இரண்டு வயது இளையவர் மேலும் கரம்சந்த்தின் முதல் இரண்டு மனைவிகள் சீக்கிரமே இறந்துவிட்டதாலும், அவர்கள் மூலம் அவருக்கு இருந்த இரண்டு மகள்களுக்காகவும் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.புத்லிபாய் கரம்சந்த்துடன் இணைந்து நான்கு குழந்தைகளை பெற்றெடுத்தார். அவர்களில் இளையவரும், அவரால் மோனியா என்று அன்புடன் அழைக்கப்பட்ட மோகன்தாஸ் அக்டோபர் 2, 1869 இல் பிறந்தார், அப்போது புத்லிபாய்க்கு முப்பது வயதாகும். மகாத்மா காந்தி அவரது சுயசரிதையான தி ஸ்டோரி ஆஃப் மை எக்ஸ்பெரிமெண்ட்ஸ் வித் ட்ரூத் என்ற புத்தகத்தில் தனது தாயார் மற்றும் அவரது நிலைமைகள் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.[4]


புத்திசாலி மற்றும் திறமையான, புத்லிபாய் அரச வட்டங்களில் நன்மதிப்பை பெற்றவராகவும் அனைவராலும் மதிக்கப்படுபவராகவும் இருந்துள்ளார். ஆயினும் குடும்பம் மற்றும் குழந்தைகளே புத்லிபாய்க்கு அதிக முன்னுரிமையாக இருந்தது. தனது குழந்தைகளை முழு அர்ப்பணிப்புடன் கவனித்துக்கொண்ட அர்ப்பணிப்பும், பக்தியும் மரியாதையும் உள்ள தாயாக அவர் விளங்கினார்,


கடவுள் மீது அதிக பக்தி கொண்ட புத்திலிபாய், அன்றாட பூஜைகள் முடித்த பின்னரே உணவை அருந்துவார். தொடர்ந்து கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்குவார். மாதந்தோறும் வரும் ஏகாதசி திதி அன்று ஒரு வேளை உணவு மட்டும் அருந்துவார்.

இந்துக்கள் புனிதமாகக் கருதும் நான்கு மாதங்களில், இறைவனிடம் மனமார்ந்த முழு ஈடுபாடுடையவராக பூஜைகள் செய்வதுடன், காலையில் சூரியனைப் பார்த்து வணங்கிய பின்னரே காலை உணவை உண்ணும் வழக்கத்தை தன் குழந்தைகளுடன் தானும் கடைப்பிடித்தவர். [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Putlibai Gandhi". geni_family_tree (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-01.
  2. Guha, Ramachandra (2014-10-15) (in en). Gandhi before India. Penguin Books Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-5118-322-8. https://books.google.com/books?id=XS7UAAAAQBAJ&dq=%22gandhi's+mother,+putlibai,+was+born+in+a+village+named+dantrana%22&pg=PP41. 
  3. "Putlibai | GANDHIJI". www.mkgandhi.org. பார்க்கப்பட்ட நாள் 2021-09-01.
  4. Guha 2015, p. 32
  5. 03. Putlibai
"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்லிபாய்_காந்தி&oldid=3676574" இலிருந்து மீள்விக்கப்பட்டது