திதி, பஞ்சாங்கம்
இந்து சமயம் தொடர்பான கட்டுரை |
இந்து சமயம் |
---|
![]() |
![]() |
திதி என்பது "பூமியிலிருந்து கவனிக்கப்படும் சந்திரனின் இரண்டு முகங்களின் கால அளவு" ஆகும். இது சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையிலான நீளமான கோணம் 12° (பாகை) ஆக அதிகரிக்க எடுக்கும் நேரம். திதிகள் நாளின் வெவ்வேறு நேரங்களில் தொடங்கி தோராயமாக 19 முதல் 26 மணி நேரம் வரை கால அளவில் மாறுபடும். சந்திர மாதத்தின் ஒவ்வொரு நாளும் திதி என்று அழைக்கப்படுகிறது.
அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்திருப்பார்கள். அதன் பின் சந்திரன் சூரியனிடம் இருந்து விலகி செல்வார். ஒவ்வொரு திதியும் சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையிலான 12 பாகை கோணப் பிரிவைக் குறிக்கிறது. திதி எனப்படுவது பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.
இந்துக்களின் தமிழ் நாட்காட்டியின்படி ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. அதில் இரண்டு பட்சங்கள் உள்ளன. அவை கிருஷ்ண பட்சம்(தேய்பிறை) மற்றும் சுக்கில பட்சம்(வளர்பிறை) ஆகும்.
முழு சுழற்சி: சந்திரன் பூமியைச் சுற்றி அதன் சுற்றுப்பாதையை முடிக்கும்போது, அது 360 பாகை (30 திதி x 12 பாகை) உள்ளடக்கியது. 15 கிருஷ்ண பட்சம் + 15 சுக்கில பட்சம் = 30 பட்சம் = 30 திதி.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான நீளமான கோணம் 12° இன், முழு எண் பெருக்கமாக இருக்கும்போது தொடர்புடைய தொடர்ச்சியான சகாப்தங்களுக்கு இடையிலான கால அளவு.
எண் | கிருஷ்ண பட்சம் | சுக்கில பட்சம் | தெய்வம் மற்றும் செய்ய வேண்டியவை! |
---|---|---|---|
1 | பிரதமை | பிரதமை | முதல் சந்திர நாள் முக்கிய தெய்வம் அக்னி ஆகும். பூஜைகள் மற்றும் மங்கல காரியங்கள் செய்ய உகந்த நாள். |
2 | துவிதியை | துவிதியை | இது ப்ரம்மாவுக்கு உரிய நாள் இன்று கட்டிடம் கட்டுவதற்கான அஸ்திவாரம் அமைத்தல் மற்றும் நிலைத்தன்மை கொண்டவை உருவாக்குதல் நன்மை தரும். |
3 | திருதியை | திருதியை | கெளரிமாதாவுக்கு உகந்த நாள். சிகை திருத்தம் செய்தல், முகசவரம், நகம் வெட்டுதல் முதலியன நன்மை தரும். |
4 | சதுர்த்தி | சதுர்த்தி | நான்காம் நாள் எமன் மற்றும் வினாயகருக்குரிய நாள். எதிரிகளை வீழ்த்துதல், தடை தகர்த்தல் முதலிய போர் காரியங்கள் வெற்றி தரும். |
5 | பஞ்சமி | பஞ்சமி | இது நாகதேவனின் நாள், விஷம் முறித்தல், மருத்துவம் செய்தல் அறுவை சிகிச்சை முதலியன பலன் தரும். |
6 | சஷ்டி | சஷ்டி | நாளின் தெய்வம் முருகன். புதிய நண்பர்களை சந்தித்தல், கொண்டாட்டம் கேளிக்கை முதலியன சிறப்பு. |
7 | சப்தமி | சப்தமி | சூரியனின் நாள். பிரயாணம் தொடங்குதல், பிரயாண படி கேட்டல், முதலிய நகர்தல் சம்பந்தமான காரியங்கள் கைகூடும். |
8 | அஷ்டமி | அஷ்டமி | இன்னாளின் கடவுள் மஹாருத்ரன் ஆவார். ஆயுதம் எடுத்தல், அரண் அமைத்தல், போர் மற்றும் தற்காப்பு கலை கற்றல் ஆகியவை உகந்தது |
9 | நவமி | நவமி | அம்பிகையின் நாள். எதிரிகளை கொல்லுதல், வினாசம் செய்தல். |
10 | தசமி | தசமி | தர்மராஜாவின் நாள். மதவிழாக்கள், ஆன்மீக செயல்கள் நன்மை தரும். |
11 | ஏகாதசி | ஏகாதசி | மஹாருத்ரனின் நாள். இன்னாளில் விரதம் மேற்கொள்ளுதல் மற்றும் பரமாத்வாவை தியானித்தல் சிறப்பு. |
12 | துவாதசி | துவாதசி | மஹாவிஷ்ணுவின் ஆதிக்கமுடைய நாள். விளக்கு ஏற்றுதல், மதவிழாக்கள், பணிகள் செய்தல். |
13 | திரயோதசி | திரயோதசி | மன்மதனின் நாள். அன்பு செலுத்துதல், நட்பு வளர்த்தல். |
14 | சதுர்த்தசி | சதுர்த்தசி | காளியின் ஆதிக்கமுடைய நாள். விஷத்தை கையாளுதல், தேவதைகளை அழைத்தல். |
15 | அமாவாசை | பௌர்ணமி | அமாவாசை பித்ருகளுக்கு காரியங்கள் செய்யவும். பௌர்ணமி அன்று அக்னிக்கு ஆஹுதி கொடுத்தல் முதலியன நலம் தரும். |
வளர்பிறைத் திதிகள்
[தொகு]அமாவாசை நாளன்று சூரியனும் சந்திரனும் 0° (0 பாகையில்) காணப்படுவார்கள். அதனால் பூமியில் இருப்போருக்கு சந்திரனைப் பார்க்கமுடியாது. அதற்குப்பின் சந்திரன் தினமும் ஏறத்தாழ 12° சூரியனின் பார்வையில் இருந்து விலகிச் சென்று கொண்டிருக்கும். 15 ஆம் நாளான பௌர்ணமி அன்று சூரியனில் இருந்து 180° தூரத்தில் இருக்கும். அப்போது சூரியனின் முழுப்பார்வையும் சந்திரனின் மேல் விழுகின்றது. அதாவது இராசிச் சக்கரத்தில் சூரியனில் இருந்து 7-வது ராசியில் இருக்கும்.
அமாவாசைக்கு மறுநாள் அன்று சந்திரன் 12° தூரம் விலகி இருக்கும். அந்நாள் பிரதமை எனப்படும். அதற்கு மறுநாள் மேலும் ஒரு 12° விலகியிருக்கும். அந்நாள் துதியை எனப்படும். மூன்றாம் நாள் திருதியை, 4-ம் நாள் சதுர்த்தி, 5-ம் நாள் பஞ்சமி, 6-ம் நாள் சஷ்டி,7-ம் நாள் சப்தமி. 8-ம் நாள் அஷ்டமி. 9-ம் நாள் நவமி. 10-ம் நாள்தசமி. 11-ம் நாள் ஏகாதசி. 12-ம் நாள் துவாதசி. 13-ம் நாள்திரயோதசி. 14-ம் நாள் சதுர்தசி. 15-ம் நாள் பெர்ணமி.
சந்திரன் அமாவாசையில் இருந்து சிறிது, சிறிதாக வளர்வதால் இவைகள் எல்லாம் வளர் பிறைத் திதிகள் அல்லது சுக்கில பட்சம் என்பார்கள்.
தேய்பிறைத் திதிகள்
[தொகு]அதே போல் பௌர்ணமியில் இருந்து சந்திரன் தினமும் சிறிது, சிறிதாக தேய்வது தேய்பிறை எனப்படும். முதல் நாள் பெயர் பிரதமை. 2-ம் நாள் துதியை, 3-ம் நாள் திருதியை, பின்பு சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, எனச் சென்று அமாவாசையில் முடியும்.
இந்தக் காலத்தில் சந்திரன் தேய்வதால் இவை கிருஷ்ணபட்சம் அல்லது தேய்பிறைத் திதிகள் என அழைக்கப்படும்.
இவைகள் அனைத்தும் சோதிடத்தில் நல்ல நாட்கள் பார்க்க உதவுகின்றன. பொதுவாக அட்டமி, நவமித் திதிகளில் நல்ல காரியங்கள் செய்வதை எல்லோரும் தவிர்த்துக் கொள்கின்றனர்.
பிறையின் கட்டங்கள் (Phases in Moon)
[தொகு]எண் | தமிழ் பெயர் | ஆங்கிலப் பெயர் |
---|---|---|
1 | அமாவாசை | New Moon |
2 | வளரும் இளஞ்சந்திர நிலை | Waxing Crescent |
3 | முதல் பாதி நிலவு | First Quarter |
4 | வளரும் அகன்ற நிலவு | Waxing Gibbous |
5 | பூரண நிலவு (பௌர்ணமி) | Full Moon |
6 | குறையும் அகன்ற நிலவு | Waning Gibbous |
7 | கடைசி பாதி நிலவு | Last Quarter |
8 | குறையும் இளஞ்சந்திர நிலை | Waning Crescent |
திதி பற்றிய பொதுவான தவறான கருத்துக்கள்
[தொகு]அதன் முக்கியத்துவம் இருந்தபோதிலும், திதி பற்றிய பல தவறான கருத்துக்கள் கவனிக்கத்தக்கவை:
- திதி vs. சூரிய நாள்: பலர் திதியை வழக்கமான 24 மணி நேர நாளுடன் குழப்புகிறார்கள். உண்மையில், ஒரு திதியின் கால அளவு கணிசமாக மாறுபடும்.
- நிலையான தொடக்க நேரங்கள்: திதிகள் எப்போதும் நள்ளிரவு அல்லது சூரிய உதயத்தில் தொடங்குவதில்லை. அவை பகல் அல்லது இரவின் எந்த நேரத்திலும் தொடங்கலாம்.
- உலகளாவிய பயன்பாடு: ஒரு திதியின் சரியான நேரம் புவியியல் இருப்பிடத்தின் அடிப்படையில் மாறுபடும், ஏனெனில் அது பூமியில் பார்வையாளரின் நிலையைப் பொறுத்தது.
- மாதங்கள் முழுவதும் நிலைத்தன்மை: ஒரு குறிப்பிட்ட திதியின் நேரம் (எ.கா., ஏகாதசி) ஒரு சந்திர மாதத்திலிருந்து அடுத்த மாதத்திற்கு நிலையானதாக இருக்காது.
- கணக்கீட்டின் எளிமை: ஒரு திதியின் துல்லியமான தொடக்க மற்றும் முடிவு நேரங்களைத் தீர்மானிப்பது சிக்கலான வானியல் கணக்கீடுகளை உள்ளடக்கியது.
இந்த நுணுக்கங்களைப் புரிந்துகொள்வது இந்து நாட்காட்டி அமைப்பின் ஆழத்தையும் சிக்கலையும் பாராட்ட உதவுகிறது.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]- இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
- இராசி
- இராசிச் சக்கரம்
- தமிழ் மாதங்கள்
- பஞ்சாங்கம்
- தமிழ்ப் புத்தாண்டு
- அறுபது ஆண்டுகள்