புதன் (கிழமை)
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
புதன்கிழமை (Wednesday) என்பது ஏழு நாட்கள் கொண்ட ஒரு கிழமையில் (வாரத்தில்) ஒரு நாள். செவ்வாய்க்கிழமைக்கும் வியாழக்கிழமைக்கும் இடையில் இந்நாள் வரும். இந்துக் காலக்கணிப்பின்படி புதன் என்னும் கோளுக்கு உரிய நாளாக இது பெயரிடப்பட்டுள்ளது. கிழமை என்றால் உரிமை என்று பொருள்.
ஆங்கிலத்தில் இது இங்கிலாந்தில் 17ம் நூற்றாண்டு வரையில் ஆங்கிலோ-சாக்சன்களின் கடவுளாக இருந்த Wodnes dæg என்ற பெயரில் இருந்து மருவி Wednesday ஆகியது. ஜேர்மன் மொழியில் அதாவது நடு-வாரம் என்ற பொருளில் Mittwoch எனப்படுகிறது.
"பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது" என்பது தமிழ் பொன்மொழியாகும். அது நம்பிக்கை, ஐதீகத்திலானதாக இருக்கலாம்.
கிழமை நாட்கள் |
---|
ஞாயிறு | திங்கள் | செவ்வாய் | புதன் | வியாழன் | வெள்ளி | சனி |
}