மகம் (பஞ்சாங்கம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 10 ஆவது பிரிவு ஆகும். சிங்கராசியில் அமைந்துள்ள நட்சத்திரங்களில் இதுவும் ஒன்று. இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது மக நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் மக நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும். இந்திய சோதிடத்தின்படி, இந்தக் காலப் பகுதியில் பிறக்கும் ஒருவருடைய "பிறந்த நட்சத்திரம்" அல்லது "ஜன்ம நட்சத்திரம்" மகம் ஆகும்.

ஒவ்வொரு நட்சத்திரப் பிரிவும் 13° 20' அளவு கொண்டதாக இருப்பதால், பத்தாவது நட்சத்திரமாகிய மகம் 120° 00'க்கும் 133° 20'க்கும் இடையில் அமைந்துள்ளது.[1] இந்தப் பிரிவு 3° 20' அளவு கொண்ட நான்கு சமமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் மகத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் எனப்படுகின்றன.

பெயரும் அடையாளக் குறியீடும்[தொகு]

லியோ விண்மீன் கூட்டம்

இந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி மக நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் லியோ விண்மீன் கூட்டத்தில் உள்ள மக நட்சத்திரத்தின் (Regulus) பெயரைத் தழுவியது. மகத்தின் சமசுக்கிருதப் பெயரான மகா (Magha) என்பது "மகத்துவமான ஒன்று" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு சிம்மாசனம் அல்லது பல்லக்கு ஆகும்.

சோதிடத்தில் மகம்[தொகு]

இயல்புகள்[தொகு]

இந்தியச் சோதிட நூல்கள் நட்சத்திரங்களோடு தொடர்புடையவையாகக் கருதப்படும் இயல்புகளைத் தேவதைகள், கோள்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், இயற்கை மூலங்கள், சாதி, பால் போன்றவற்றின் மூலம் குறித்துக் காட்டுகின்றன. மக நட்சத்திரத்துக்குரிய மேற்படி இயல்புகள் பின்வருமாறு:[2][3]

கோள் கேது
தேவதை பிதிர்கள்
தன்மை உக்கிரம்
சாதி சூத்திர சாதி
கோத்திரம் வசிட்டர்
பால் பெண்
குணம் இராட்சத குணம்
இயற்கை மூலம் நீர்
விலங்கு ஆண் எலி
பறவை ஆண் கழுகு
மரம் ஆல்
நாடி பிங்கலை

குறிப்புக்கள்[தொகு]

  1. Raman, B. V., 1992. பக். 40.
  2. வெங்கடேச ஐயர், இ., 2012. பக். 24.
  3. Harness, Dennis M., Masco, Maire M., The Nakshatras of Vedic Astrology: Ancient & Contemporary Usage பரணிடப்பட்டது 2012-05-26 at the வந்தவழி இயந்திரம்.

உசாத்துணைகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகம்_(பஞ்சாங்கம்)&oldid=3223251" இலிருந்து மீள்விக்கப்பட்டது