இராசி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பூமிக்குச் சார்பான சூரியனுடைய சுற்றுப்பாதையின் தளத்தில், பூமியைச் சுற்றியுள்ள வெளி 12 சமமான கோணத் துண்டுகளாகப் பிரிக்கப்படுகின்றன. இந்திய வானியல், சோதிடம் ஆகிய துறைகளில், 30 பாகை அளவு கொண்ட துண்டு ஒவ்வொன்றும் ஓர் இராசி (ஒலிப்பு (உதவி·தகவல்)) என அழைக்கப்படுகின்றது. பன்னிரண்டு இராசிகளும் சேர்ந்தது இராசிச் சக்கரம் ஆகும். இச் சக்கரத்தில், பூமியையும், அதற்கு வெளியிலுள்ள ஒரு குறிப்பிட்ட புள்ளியையும் இணைக்கும் கோட்டை தொடக்கமாகக் கொண்டு இந்த இராசிப்பகுப்புச் செய்யப்பட்டுள்ளது. இக் கோட்டிலிருந்து அளக்கப்படும் முதல் 30 பாகை கோண அளவு மேட இராசியாகும்.
இந்திய இராசிகள்[தொகு]
இந்து அல்லது இந்திய முறைப்படி பன்னிரண்டு இராசிகள் பின்வருமாறு:
இராசி | உருவகம் |
---|---|
மேஷம் | ஆடு |
ரிஷபம் | எருது |
மிதுனம் | இரட்டையர் |
கடகம் | நண்டு |
சிம்மம் | சிங்கம் |
கன்னி | கல்யாணமாகாத பெண் |
துலாம் | தராசு |
விருச்சகம் | தேள் |
தனுசு | வில் |
மகரம் | மகரம் (தொன்மம்சார் விலங்கு) |
கும்பம் | குடம் |
மீனம் | மீன் |
மேற்கத்தைய இராசிகள்[தொகு]
Sign | மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம் |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வான நெட்டாங்கு (a ≤ λ < b) |
0° to 30° | 30° to 60° | 60° to 90° | 90° to 120° | 120° to 150° | 150° to 180° | 180° to 210° | 210° to 240° | 240° to 270° | 270° to 300° | 300° to 330° | 330° to 360° |
அடையாளம் | ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
உருவம் | ஆடு | எருது | இரட்டையர் | நண்டு | சிங்கம் | பெண் | தராசு | தேள் | வில் | மகரம் | குடம் | மீன் |
12 இராசிகள் அமையும் நாட்கள்
மேஷம்: மார்ச் 22 - ஏப்ரல் 21
ரிஷபம் : ஏப்ரல் 22 - மே 21
மிதுனம் : மே 22 - ஜூன் 21
கடகம் : ஜூன் 22 - ஜூலை 22
சிம்மம் : ஜூலை 23 - ஆகஸ்ட் 22
கன்னி : ஆகஸ்ட் 23 - செப்டெம்பர் 21
துலாம் : செப்டெம்பர் 22 - அக்டோபர் 22
விருச்சிகம் : அக்டோபர் 23 - நவம்பர் 21
தனுசு : நவம்பர் 22 - டிசம்பர் 21
மகரம் : டிசம்பர் 22 - ஜனவரி 20
கும்பம்: ஜனவரி 21 - பெப்ரவரி 21
மீனம் : பெப்ரவரி 22 - மார்ச் 21 (நெட்டாண்டு எனின் மார்ச் 20 முடிவு)
சீன சோதிடம்[தொகு]
சீன சோதிடம் குறிப்பிடும் ராசிகள் பின்வருமாறு.
அடையாளம் | நேர்/மறை | திசை | காலம் | ஐம்பூதம் | பாகை |
---|---|---|---|---|---|
எலி | மறை | North | Mid-Winter | Water | 1st |
எருது | நேர் | North | Late Winter | Earth | 2nd |
புலி | மறை | East | Early Spring | Wood | 3rd |
முயல் | நேர் | East | Mid-Spring | Wood | 4th |
டிராகன் | மறை | East | Late Spring | Earth | 1st |
பாம்பு | நேர் | South | Early Summer | Fire | 2nd |
குதிரை | மறை | South | Mid-Summer | Fire | 3rd |
ஆடு | நேர் | South | Late Summer | Earth | 4th |
குரங்கு | மறை | West | Early Autumn | Metal | 1st |
சேவல் | நேர் | West | Mid-Autumn | Metal | 2nd |
நாய் | மறை | West | Late Autumn | Earth | 3rd |
பன்றி | நேர் | North | Early Winter | Water | 4th |