தனுசு (சோதிடம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வார்ப்புரு:ZodiacSign

சிலை (இராசியின் குறியீடு: , சமஸ்கிருதம்: தனுசு) என்பது வில் மற்றும் அம்பு சேர்ந்திருக்கும் ஒரு சிலை என்ற பொருள் கொண்டு 12 இராசிகளில் ஒன்பதாவது இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 240 முதல் 270 பாகைகளை குறிக்கும் (240°≤ λ <270º)[1].

தனுசு ( ) என்பது தனுசு விண்மீன் தொகுப்பில் இருந்து தோற்றுவிக்கப்பட்ட இராசி மண்டலத்தின் ஒன்பதாவது சோதிட இராசி ஆகும். மேற்கத்திய சோதிடத்தில் சூரியன் நிலநடுக்கோட்டை கடந்துச் செல்லும் காலத்தின் அச்சு சுழற்சியின் விளைவாக விண்மீன் தொகுப்புடன் இந்த இராசி வரிசைப்படுத்தப்படவில்லை. தனுசு இராசியானது "ஆண் தன்மை" கொண்ட நேர்மறையான (பரந்த மனப்பான்மை கொண்ட) இராசியாகக் கருதப்படுகிறது.[2] தனுசானது வியாழன் கோளினால் ஆளப்படுகிறது. இராசி மண்டலத்தின் ஒன்பதாவது இராசியாக இருப்பதால், தனுசு, சோதிடத்தின் ஒன்பதாவது வீட்டுடன் தொடர்புடையதாக இருக்கிறது

சூரியன் இந்த இராசியில் இருக்கும்போது பிறந்தவர்கள், தனுசு இராசியில் பிறந்தவர்கள் எனக் கருதப்படுவர். வெப்பமண்டல இராசி மண்டலத்தின் கீழ், நவம்பர் 22 ஆம் தேதியன்று சூரியன் தனுசுக்குள் நுழைந்து, வரையறையின்படி டிசம்பர் 21 அன்று குளிர்கால சூரியகணநிலை நேரத்தில் வெளியேறுகிறது.

மீன்வழி இராசிமண்டலத்தின் கீழ், தற்போது அது தோராயமாக டிசம்பர் 16 ஆம் தேதி முதல் ஜனவரி 14 ஆம் தேதி வரை இருக்கிறது. இந்து சோதிடத்தில் தனுசு இராசியின் சமஸ்கிருதப் பெயர் தானு என்பதாகும்.

மாதம்[தொகு]

ஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் மார்கழி மாதம் சிலைக்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் டிசம்பர் மாத பிற்பாதியும், சனவரி மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது

மேற்கத்திய சோதிடம்[தொகு]

மேற்கத்திய சோதிட நூல்கள் படி நவம்பர் 22 முதல் டிசம்பர் 21 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை சிலை ராசியினர் என்று அழைப்பர்[3].

கோள்[தொகு]

இந்த இராசிக்கான அதிபதி வியாழன் என்றும் உரைப்பர்[4].

பொருந்தும் பண்புகள்[தொகு]

பொதுவாக, தனுசு இராசியானது மேஷம், சிம்மம் மற்றும் அதே தனுசு ஆகிய ஒரே அடிப்படைக் கூறு இராசிகளுடன் பொருந்தும் பண்புடையதாகக் கருதப்படுகிறது.[5] இந்த இராசிகள் நெருப்பு உமிழும் பண்பினைப் பங்கிட்டுக் கொள்வதால், அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகக் கருதப்படுகின்றன.

சோதிடத்தில் பொருந்தும் பண்புகளை பிறந்த தேதிகள், பிறந்த மாதங்கள், பிறந்த ஆண்டுகள், சூரியன் இராசியில் வீற்றிருக்கும் நிலை, நிலா, நட்சத்திரங்கள் மற்றும் பல காரணிகள் தீர்மானிக்கின்றன. தனுசு இராசியுடன் பொருந்துவதாகப் பட்டியலிடப்பட்ட இராசிகள் சோதிடத்தினுள் புரிந்துகொள்ளப்படும் விதத்தில் தனிநபர் சார்ந்த விவரம் அல்லது தனிநபர் வாசிப்பில் அமைந்தவை அல்ல. மாறாக, இராசி மண்டலத்தினுள் தன்மைகள் மற்றும் அடிப்படைக்கூறுகள் போன்ற மாறிகள் மூலமாக ஆணையிடுவதாக, பொருந்தும் தன்மைக்கு பொதுவான வழிகாட்டி மற்றும் குறிப்புதவி ஆகியவற்றைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது.[5] தனிமனிதன் அல்லாத பொருந்தும் பண்புகளைப் பற்றிய சோதிடத்தின் பிரிவானது சைனஸ்ட்ரி என அழைக்கப்படுகிறது.

தொன்மவியல்[தொகு]

வில்லுடன் கூடிய மனிதராக தனுசு

கிரேக்கத் தொன்மவியலில், தனுசு என்பது பாதி மனிதன், பாதிக் குதிரையாக இருக்கும் செண்ட்டாராக அடையாளம் காணப்படுகிறது. பாபிலோனியர்கள், தனுசை இறக்கைகள் மற்றும் சிங்கத்தின் தலையுடன் கூடிய கடவுள் பாலில்சாகாக அடையாளப்படுத்துகின்றனர்.

உசாத்துணை[தொகு]

  1. Greenwich, Royal Observatory. "Equinoxes and solstices". ROG learning team. பார்த்த நாள் 4 டிசம்பர் 2012.
  2. ஜெஃப் மேயோ, டீச் யுவர்செல்ஃப் ஆஸ்ட்ராலஜி , பக் 38-41, ஹோல்டர் அண்ட் ஸ்டஃப்டன், லண்டன், 1979
  3. Oxford Dictionaries. "Saggitarian". Definition. Retrieved on: 17 ஆகஸ்ட் 2011.
  4. Heindel, பக். 81.
  5. 5.0 5.1 த டயகிராம் க்ரூப், த லிட்டில் ஜெயண்ட் என்சைக்ளோபீடுயா ஆஃப் த சோடியாக் , ப 171, ஸ்டெர்லிங் பப்ளிஷிங் கம்பெனி, நியூயார்க், 1997

மூலம்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]


தமிழ் மாதங்கள்
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனுசு_(சோதிடம்)&oldid=1717901" இருந்து மீள்விக்கப்பட்டது