துலை (இராசி)
துலா | |
---|---|
சோதிட குறியீடு | தராசு |
விண்மீன் குழாம் | துலா |
பஞ்சபூதம் | வாயு |
சோதிட குணம் | Cardinal |
ஆட்சி | வெள்ளி |
பகை | செவ்வாய் |
உச்சம் | சனி |
நீசம் | ஞாயிறு |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
துலை (இராசியின் குறியீடு: ♎, சமசுகிருதம்: துலாம்) என்பது இருபக்கத்திற்கும் நடுநிலையில் இருக்கும் துலாபாரம் என்ற பொருள் கொண்டு 12 இராசிகளில் ஏழாவது இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 180 முதல் 210 பாகைகளை குறிக்கும் (180°≤ λ <210º)[1].
மாதம்
ஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் ஐப்பசி மாதம் துலைக்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் அக்டோபர் மாத பிற்பாதியும், நவம்பர் மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது
மேற்கத்திய சோதிடம்
மேற்கத்திய சோதிட நூல்கள் படி செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 22 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை துலை அல்லது துலா இராசியினர் என்று அழைப்பர்[2].
கோள்
இந்த இராசிக்கான அதிபதி வெள்ளி என்றும் உரைப்பர்[3].
உசாத்துணை
- ↑ Greenwich, Royal Observatory. "Equinoxes and solstices". ROG learning team. 2013-01-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 டிசம்பர் 2012 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|accessdate=
(உதவி) - ↑ Oxford Dictionaries. "libran"[தொடர்பிழந்த இணைப்பு]. Definition. Retrieved on: 17 ஆகஸ்ட் 2011.
- ↑ Heindel, ப. 81.
மூலம்
- Heindel, Max (1919), Simplified Scientific Astrology: A Complete Textbook on the Art of Erecting a Horoscope, with Philosophic Encyclopedia and Tables of Planetary Hours (4 ed.), Rosicrucian Fellowship, OCLC 36106074
புற இணைப்புகள்
பொதுவகத்தில் libra தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
தமிழ் மாதங்கள் |
---|
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி |