ஆடி (மாதம்)
தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டின் நான்காவது மாதம் ஆடி (ஒலிப்பு (உதவி·தகவல்)) ஆகும். சூரியன் கடக இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 28 நாடி, 12 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 30 அல்லது 31 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும். முற்காலத்தில் தமிழர் ஆடிப்பிறப்பைச் சிறப்பாகக் கொண்டாடுவர். தற்காலத்தில் இவ்வழக்கம் அருகிவிட்டது. இம்மாதத்தில் வரும் புதுநிலவு மறைந்த குடும்ப முன்னோர்களுக்கு ஆற்றங்கரை அல்லது கடற்கரையில் திதிக் கொடுக்கும் ஆடி அமாவாசை மற்றும் ஆறுகளில் புனல் பொங்கிவந்து ஆடிப்பட்டம் தேடி விதை விதைக்கும் திருநாளான ஆடி மாத பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு ஆகியன கொண்டாடப்படுகின்றன.
இந்த மாதத்தினோடு தொடர்புள்ள பழமொழிகள்:
- ஆடிப்பட்டம் தேடிவிதை
- ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்
ஆடி மாதம் தட்சிணாயனம் (தென்திசையேகல்) ஆரம்பமாகிறது. ஆண்டினை இரண்டு அயனங்களாக (கதிர் நகர்வு) பிரிப்பர். ஆடி முதல் மார்கழி வரையிலான தட்சிணாயனமும், தை முதல் ஆனி வரை உத்திராயனமும் (வடதிசை நகர்தல்) ஆகும். காலை வேளையில் கதிரவன் வடகிழக்கு நோக்கி நகர்தலை விட்டு தென்கிழக்கு திசை ஏகுவான். இந்து தொன்மவியலில் இது சூரியனின் தேர் திசை திரும்புவதாக குறிப்பிடப்படுகிறது.
ஒன்று மழைக் காலத்தின் துவக்கத்தையும், மற்றொன்று கோடைக் காலத்தின் துவக்கத்தையும் குறிக்கிறது.
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
வெளியிணைப்புக்கள்[தொகு]
- ஆங்கில தேதியிலிருந்து தமிழ் தேதி வருவித்தல்
- தமிழ் நாட்காட்டி பரணிடப்பட்டது 2006-12-14 at the வந்தவழி இயந்திரம்
தமிழ் மாதங்கள் |
---|
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி |