நொடி (கால அளவு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விநாடி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நொடி (அல்லது வினாடி) என்பது காலத்தை அளவிடப் பயன்படும் அடிப்படை அலகு.[1] 60 நொடிகள் = 1 நிமிடம் (மணித்துளி) ஆகும்.[2] நொடி என்பது அனைத்துலக முறை அலகில் second (செக்கன்) என்னும் பெயரால் குறிப்பிடப்படுகின்றது.[3] ஆங்கில எழுத்துக் குறியீடு s என்பதாகும். தமிழில் நொ (அல்லது) செக் என்று சுருக்கமாகக் குறிக்கப்படும்.

ஒரு நொடி என்பது துல்லியமான நிலைநாட்டலின் படி கீழ்க்காணுமாறு குறிப்பிடப்படும். சீசியம்-133 என்னும் அணு, தன் அடி நிலையில் இருக்கும் பொழுது அதன் அணுக்கருவில் உள்ள காந்தப்புலனின் விளைவால் நிகழும் மிகநுண் ஆற்றல் வேறுபாடுகளின் அடிப்படையில் ஒரு நொடி என்பது விளக்கபடுகின்றது. ஒரு நொடி என்பது அசையாது 0 K (கெல்வின்) வெப்பநிலையில் இருக்கும் ஒரு சீசியம்-133அணுவின் அடி நிலையில் உள்ள இரு வேறு மிக நுண்ணிய ஆற்றல் இடைவெளிகளுக்கிடையே நிகழும் 192 631 770 அலைவுகளின் கால அளவு ஆகும்.

ஒரு நாளில் 3600 விநாடிகள் உள்ளன. ஒரு நாளில் 24 மணி நேரமும், ஒரு மணி நேரத்தில் 60 நிமிடங்களும், ஒரு நிமிடத்தில் 60 செக்கன்களும் உள்ளன. எனவே ஒரு விநாடி 24 செக்கன்களுக்குச் சமமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "அனைத்துலக முறை அலகுகள் (அனைத்துலக முறை அலகுகள்) (ஆங்கிலத்தில்)". தரங்கள், தொழினுட்பத்துக்கான தேசிய நிறுவனம். பார்த்த நாள் அக்டோபர் 18, 2012.
  2. "நேர அலகு மாற்றி (ஆங்கிலத்தில்)". ஈசி யுனிட்டுக் கன்வட்டர். பார்த்த நாள் அக்டோபர் 18, 2012.
  3. "நேரம் (ஆங்கிலத்தில்)". எசு. ஐ. யுனிட்சு எச்சுப்பிளெயிண்டு. பார்த்த நாள் அக்டோபர் 18, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நொடி_(கால_அளவு)&oldid=1362220" இருந்து மீள்விக்கப்பட்டது