சூரிய மணிகாட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
SSW facing, vertical declining sundial on Moot Hall, Aldeburgh, Suffolk, England.

சூரிய மணி காட்டி அல்லது சூரிய கடிகாரம் என்பது சூரியனின் நிலையை பொறுத்து நாளின் நேரத்தை கணக்கிட உதவும் கருவி ஆகும். பொதுவாக கிடைமட்ட சூரிய மணி காட்டி வடிமைப்பில் சூரியனின் நிழல் ஆனது, அதில் குறிக்கப்பட்டுள்ள நேரத்தை குறிக்கும் கோடுகளின் மீது விழும். நேரம் குறிப்பிடும் அமைப்பான க்னோம் (gnomon)ஆனது பொதுவாக மெல்லிய கம்பியாகவோ அல்லது கூர்மையான அல்லது நேரான விளிம்பைக் கொண்ட அமைப்பாக இருக்கும். சூரியன் நகரும்போது இந்த அமைப்பின் முனையின் நிழலானது வேறுபட்ட நேரத்தை குறிக்கும் கோடுகளின் மீது விழும். சரியான நேரத்தைக் காட்ட அனைத்து சூரிய மணி காட்டிகளும் பூமியின் சுழல் அச்சுடன் ஒத்துப்போகுமாறு அமைக்கப்பட வேண்டும்.

சூரிய மணி காட்டியில் பல்வேறு வகைகள் உள்ளன. சில சூரிய மணி காட்டிகள் ஒரு ஒளிக் கோட்டை நேரத்தை காட்ட பயன்படுத்துகின்றன. மற்றைவைகள் நிழலின் முனைகளை பயன்படுத்துகின்றன. ஒளிப் புள்ளிகளானது சூரியனின் ஒளிக்கதிர்களை ஒரு சிறிய துளையின் வழியாக அனுப்புவதன் மூலமாகவோ அல்லது ஒரு சிறிய வட்ட வடிவ கண்ணாடியில் பிரதிபலிக்கச் செய்வதன் மூலமாகவோ உருவாக்கப்படுகிறது. ஒளிக் கோடானது ஒரு சிறிய பிளவின் வழியாக சூரிய ஒளிக் கதிர்களை அனுப்புவதன் மூலமாகவோ, அல்லது வட்ட வடிவ ஆடியில் குவிப்பதன் மூலமாகவோ உருவாக்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரிய_மணிகாட்டி&oldid=1994007" இருந்து மீள்விக்கப்பட்டது