உள்ளடக்கத்துக்குச் செல்

ஆவணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆவணி மாதத்தில் சூரியனின் நிலை.

காலக்கணிப்பில் தமிழர் வழக்கப்படி, ஆண்டின் ஐந்தாவது மாதம் ஆவணி (ஒலிப்பு) ஆகும். இம்மாதத்தை தமிழில் மடங்கல், கார் என்ற பெயர்களாலும் அழைப்பர். சூரியன் சிங்க இராசியுட் புகுந்து அங்கே வலம் வரும் காலமான 31 நாள், 02 நாடி, 10 விநாடிகளைக் கொண்டதே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 31 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.

ஆவணி மாதங்களில் மாரியம்மனுக்கு ஆவணி விரதம் இருக்கும் பழக்கம் தமிழ்நாட்டில் உள்ளது. ஆன்மீக ரீதியாக ஆவணி மாதம் பல்வேறு முக்கியப் பண்டிகைகளைக் கொண்டுள்ளது. உலகெங்கும் வாழும் இந்துக்களால் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி இம்மாதத்தில்தான் வருகிறது. களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலைகளை இல்லங்களில் வைத்து வழிபட்டு, நீர் நிலைகளில் கரைக்கும் வழக்கம் தொன்றுதொட்டு உள்ளது. மேலும், மகாவிஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணர் பிறந்த தினமான கோகுலாஷ்டமி அல்லது ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி இம்மாதத்தில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பிராமணர்கள் மற்றும் பூணூல் அணியும் பழக்கம் உள்ளவர்கள் தங்கள் பூணூலை மாற்றிக்கொள்ளும் ஆவணி அவிட்டம் எனும் சடங்கும், அதன் தொடர்ச்சியாகச் செய்யப்படும் காயத்ரி ஜபமும் இம்மாதத்தின் பௌர்ணமி காலத்தில் நிகழ்கின்றன. கேரள மக்களின் அறுவடைத் திருவிழாவான ஓணம் பண்டிகையும் பெரும்பாலும் ஆவணி மாதத்திலேயே அமைகிறது.

இலக்கியம் மற்றும் வரலாற்றில் ஆவணி மாதம் கலைகளின் மாதமாகப் போற்றப்படுகிறது. மதுரையில் சொக்கநாதப் பெருமான் நிகழ்த்திய அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் சில முக்கிய நிகழ்வுகள் ஆவணி மூலத் திருவிழாவாக மதுரையில் கொண்டாடப்படுகின்றன. சிவனின் திருவிளையாடல்களில் ஒன்றான பிட்டுக்கு மண் சுமந்த கதை ஆவணி மாதத்தில் விழாவாக கொண்டாடப்படுகிறது.[1]

தமிழ் மாதங்கள்

[தொகு]
வரிசை எண் தமிழ் சூரிய மாதம் ஆங்கில தேதிகள் தமிழ் மாதம் (ஆங்கிலம்) சந்திர மாதம் (சமஸ்கிருதம்) சூரிய மாதம் (இராசி) இராசி அடையாளம் முக்கிய நட்சத்திரம் சூரிய அடிப்படையிலான திருவிழாக்கள் சந்திர அடிப்படையிலான திருவிழாக்கள்
1 சித்திரை ஏப் 14 –
மே 14
Chithirai சைத்ர மேழம் (மேஷம்) வருடை (ஒரு வகை ஆடு) சித்திரை நட்சத்திரம் தமிழ்ப் புத்தாண்டு, சித்திரைத் திருவிழா இராம நவமி, சித்திரா பௌர்ணமி
2 வைகாசி மே 15 – ஜூன் 14 Vaikasi வைசாக விடை (ரிஷபம்) காளை அல்லது ஆண் மாடு விசாகம் நட்சத்திரம் வைகாசி விசாகம் நரசிம்ம ஜெயந்தி
3 ஆனி ஜூன் 15 – ஜூலை 16 Aani ஜ்யேஷ்ட ஆடவை (மிதுனம்) இரட்டைகள் அனுசம் ஆனி திருமஞ்சனம் குரு பூர்ணிமா
4 ஆடி ஜூலை 17–
ஆக 16
Aadi ஆஷாட கடகம் நண்டு பூராடம் / உத்திராடம் ஆடிப்பெருக்கு ஆடி அமாவாசை, வரலட்சுமி நோன்பு
5 ஆவணி ஆக 17 – செப் 16 Avani ஷ்ராவண சிங்கம் / மடங்கல் (சிம்மம்) சிங்கம் திருவோணம் ஆவணி அவிட்டம் கிருஷ்ண ஜெயந்தி, விநாயக சதுர்த்தி
6 புரட்டாசி செப் 17 – அக் 17 Purattasi பத்ரபாத கன்னி கன்னிப்பெண் பூரட்டாதி / உத்திரட்டாதி புரட்டாசி சனிக்கிழமை விரதம் நவராத்திரி நோன்பு, விஜயதசமி
7 ஐப்பசி அக் 18 – நவ 16 Aippasi அஸ்வின துலை (துலாம்) இருபக்கத்திற்கும் நடுநிலையில் இருக்கும் துலாபாரம் அச்சுவினி அன்னாபிசேகம் தீபாவளி, கந்த சஷ்டி
8 கார்த்திகை நவ 17 –
டிச 15
Karthikai கார்திக நளி (விருச்சிகம்) தேள் கிருத்திகை கார்த்திகை விளக்கீடு கார்த்திகை பூர்ணிமா
9 மார்கழி டிச 16 – ஜன 13 Margazhi மார்கஷீர்ஷ தனுசு வில் மற்றும் அம்பு சேர்ந்திருக்கும் ஒரு சிலை மிருகசீரிடம் வைகுண்ட ஏகாதசி திருவாதிரை நோன்பு
10 தை ஜன 14 – பிப் 12 Thai பௌஷ சுறவம் (மகரம்) ஆடு பூசம் தைப்பொங்கல் ரத சப்தமி
11 மாசி பிப் 13 –
மா 13
Masi மக குடம் (கும்பம்) ஒரு பானையிலிருந்து பெருகியோடும் நீர் மகம் மாசி மகம் மகா சிவராத்திரி
12 பங்குனி மா 14 –
ஏப் 13
Panguni பல்குண மீனம் இரு மீன்கள் உத்தரம் பங்குனி உத்திரம் ஹோலிகா தகனம்

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ஆவணியின் சிறப்பு: ஆவணி அழகன்". Hindu Tamil Thisai. 2024-09-05. Retrieved 2024-10-05.

வெளியிணைப்புகள்

[தொகு]


தமிழ் மாதங்கள்
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவணி&oldid=4472932" இலிருந்து மீள்விக்கப்பட்டது