உள்ளடக்கத்துக்குச் செல்

தனுசு (இராசி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிலை (இராசி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Sagittarius
சோதிட குறியீடுArcher
விண்மீன் குழாம்Sagittarius
பஞ்சபூதம்Fire
சோதிட குணம்Mutable
ஆட்சிJupiter
பகைMercury
உச்சம்South Node, Chiron (questionable)
நீசம்North Node, Ceres (questionable)
AriesTaurusGeminiCancerLeoVirgoLibraScorpioSagittariusCapricornAquariusPisces

தனுசு (Sagittarius; ) என்பது தனுசு விண்மீன் தொகுப்பில் இருந்து தோற்றுவிக்கப்பட்ட இராசி மண்டலத்தின் ஒன்பதாவது சோதிட இராசி ஆகும். இது விண்ணின் 240 முதல் 270 பாகைகளை குறிக்கும் (240°≤ λ <270º).[1]

மேற்கத்திய சோதிடத்தில் சூரியன் நிலநடுக்கோட்டை கடந்துச் செல்லும் காலத்தின் அச்சு சுழற்சியின் விளைவாக விண்மீன் தொகுப்புடன் இந்த இராசி வரிசைப்படுத்தப்படவில்லை. தனுசு இராசியானது "ஆண் தன்மை" கொண்ட நேர்மறையான (பரந்த மனப்பான்மை கொண்ட) இராசியாகக் கருதப்படுகிறது. தனுசானது வியாழன் கோளினால் ஆளப்படுகிறது. இராசி மண்டலத்தின் ஒன்பதாவது இராசியாக இருப்பதால் இது சோதிடத்தின் ஒன்பதாவது வீட்டுடன் தொடர்புடையதாக இருக்கிறது. சூரியன் இந்த இராசியில் இருக்கும்போது பிறந்தவர்கள், தனுசு இராசியில் பிறந்தவர்கள் எனக் கருதப்படுவர்.

மாதம்

மார்கழி மாதம் தனுசுக்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் திசம்பர் மாத பிற்பாதியும், சனவரி மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது.

மேற்கத்திய சோதிடம்

மேற்கத்திய சோதிட நூல்களின்படி நவம்பர் 22 முதல் திசம்பர் 21 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை சிலை இராசியினர் என்று அழைப்பர்.[2]

கோள்

இந்த இராசிக்கான அதிபதி வியாழன் என்றும் உரைப்பர்.[3]

இராசிகள்

இந்து அல்லது இந்திய முறைப்படி பன்னிரண்டு இராசிகள் பின்வருமாறு:

எண் தமிழில் / சமஸ்கிருத ராசி ராசி அதிபதி (கிரகம்) தமிழ் மாதம் தமிழ் மாதம் (ஆங்கிலம்) இராசிக்கான சந்திர மாதம் (சமஸ்கிருதம்) உருவகம் சமஸ்கிருத மாதம் / ராசி ஆங்கில ராசி இந்திய / வேத முறை / (விண்மீன் ஆண்டு) Sidereal மேற்கத்திய சோதிடம் / (வெப்பமண்டல ஆண்டு) / Tropical
1 மேழம் (மேஷம்) செவ்வாய் சித்திரை Chithirai சைத்ர ஆடு Meṣa (मेष) Aries ஏப் 14 –
மே 14
மா 21 –
ஏப் 19
2 விடை (ரிஷபம்) சுக்கிரன் வைகாசி Vaikasi வைசாக எருது Vṛṣabha (वृषभ) Taurus மே 15 –
ஜூன் 14
ஏப் 20 –
மே 20
3 ஆடவை (மிதுனம்) புதன் ஆனி Aani ஜ்யேஷ்ட இரட்டையர் Mithuna (मिथुन) Gemini ஜூன் 15 –
ஜூலை 16
மே 21 –
ஜூன் 20
4 கடகம் சந்திரன் ஆடி Aadi ஆஷாட நண்டு Karkaṭa (कर्क) Cancer ஜூலை 17 -
ஆக 16
ஜூன் 21 -
ஜூலை 22
5 சிங்கம் / மடங்கல் (சிம்மம்) சூரியன் ஆவணி Avani ஷ்ராவண சிங்கம் Simha (सिंह) Leo ஆக 17 –
செப் 16
ஜூலை 23 –
ஆக 22
6 கன்னி புதன் புரட்டாதி Purattasi பத்ரபாத திருமணமாகாத பெண் Kanya (कन्या) Virgo செப் 17 –
அக் 17
ஆக 23 –
செப் 22
7 துலை (துலாம்) சுக்கிரன் ஐப்பசி Aippasi அஸ்வின தராசு Tulā (तुला) Libra அக் 18 –
நவ 16
செப் 23 –
அக் 22
8 நளி (விருச்சிகம்) செவ்வாய் கார்த்திகை Karthikai கார்திக தேள் Vṛścika (वृश्चिक) Scorpio நவ 17 –
டிச 15
அக் 23 –
நவ 21
9 தனுசு குரு மார்கழி Margazhi மார்கஷீர்ஷ வில் Dhanus (धनुष) Sagittarius டிச 16 –
ஜன 13
நவ 22 –
டிச 21
10 சுறவம் (மகரம்) சனி தை Thai பௌஷ மகரம் Makara (मकर) Capricorn ஜன 14 –
பிப் 12
டிச 22 –
ஜன 19
11 குடம் (கும்பம்) சனி மாசி Masi மக குடம் Kumbha (कुंभ) Aquarius பிப் 13 –
மா 13
ஜன 20 –
பிப் 18
12 மீனம் குரு பங்குனி Panguni பல்குண மீன் Meena (मीन) Pisces மா 14 –
ஏப் 13
பிப் 19 –
மா 20

உசாத்துணை

  1. Greenwich, Royal Observatory. "Equinoxes and solstices". ROG learning team. Archived from the original on 2013-01-14. Retrieved 4 திசம்பர் 2012.
  2. Oxford Dictionaries. "Saggitarian" [தொடர்பிழந்த இணைப்பு]. Definition. Retrieved on: 17 ஆகஸ்ட் 2011.
  3. Heindel, ப. 81.

மூலம்

புற இணைப்புகள்


தமிழ் மாதங்கள்
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனுசு_(இராசி)&oldid=4472859" இலிருந்து மீள்விக்கப்பட்டது