தராசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேரரசர் சகான்கீர்( 1605 - 1627) தனது மகன் சாசகானை தராசில் நிறுப்பது போலான காட்சி. இது மனோகர் என்ற ஒவியரால் கி.மு 1615 இந்தியா,முகலாயப் பேரரசு ஆட்சியில் தீட்டப்பட்டது.

பொருட்களின் திணிவை அல்லது நிறையை அளவிடப் பயன்படும் கருவி தராசு ஆகும். வெவ்வேறுபட்ட நோக்கங்களுக்காக வேறுபட்ட தராசுகள் பயன்படுத்தப்படுகின்றன.

தராசுகளின் வகைகள்[தொகு]

தட்டுத் தராசு அல்லது புயத்தராசு[தொகு]

தட்டுத் தராசு

இருபுறமும் சமச்சீர் கொண்ட தட்டுக்கள் துலாக்கோல் மூலம் தாங்கப்படுவதாயமைந்த தராசுகள் இவை. ஒருபக்கம் மறுபக்கத்தால் சீர்செய்யப்படுவதால் புவியீர்ப்புக்கு எதிராக பொருள் இழுக்கப்படாது. எனவே அளக்கப்படுவது பொருளின் திணிவாக இருக்கும்.

விற்றராசு[தொகு]

சுருளி வில்லொன்றின் மீது பொருளில் புவியீர்ப்பு காரணமாக ஏற்படும் நிறை உஞற்றும் இழுவை அல்லது தள்ளுகை காரணமாக ஏற்படும் நீட்சி அளக்கப்படும்.

ஜொலியின் விற்றராசு - இது முனிச் பல்கலைக்கழக பேராசிரியரான பிலிப் வொன் ஜொலி(1809-1884) என்பவரால் 1874 இல் ஆக்கப்பட்டது. இதில் அறியப்பட்ட சுருளி மாறிலியை கொண்ட சுருள்கருவி மூலம் துல்லியமான நிறை அறியப்படும்.

இரசாயனத் தராசு[தொகு]

மும்மைக் கோல் தராசு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தராசு&oldid=3778365" இலிருந்து மீள்விக்கப்பட்டது