திணிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

திணிவு (தமிழக வழக்கு: நிறை[1], Mass) என்பது, இயற்பியலில் உள்ள அடிப்படைக் கருத்துருக்களில் ஒன்று. இது ஒரு பொருளில் எவ்வளவு பொருள் தன்மை இருக்கிறது என்பதைக் குறிக்கிறது. இது, மரபார்ந்த விசையியலுக்கும் அதனுடன் தொடர்புள்ள பிற துறைகளுக்கும் ஒரு மையக் கருத்துருவாக விளங்கியது. சார்பு இயங்கியலுள் திணிவுக்குப் பல வரைவிலக்கணங்கள் உள்ளன. சார்புக் கோட்பாட்டில், திணிவு பற்றிய மரபு சார்ந்த எண்ணக்கருவுக்கு நெருக்கமான மாறாத்திணிவு என்பது நோக்கர்களைப் பொறுத்து மாற்றம் அடைவதில்லை.

அன்றாடப் பொதுப் பயன்பாட்டில், திணிவு, எடை (weight) என்பவற்றுக்கு இடையில் வேறுபாடு காட்டப்படுவது இல்லை. ஆனால் இயற்பியல், பொறியியல் ஆகிய துறைகளில், எடை என்பது ஒரு பொருளில் தாக்குகின்ற புவியீர்ப்பு இழுவையின் அளவைக் குறிக்கும். பொதுவான நிலைமைகளில் ஒரு பொருளின் எடை அதன் திணிவுக்கு விகிதசமம். இதனால், இவ்வாறான நிலைமைகளில் இரண்டுக்கும் ஒரே சொல்லைப் பயன்படுத்துவதில் பிரச்சினைகள் எழுவதில்லை. இருப்பினும், புவியில் இடத்துக்கிடம் ஈர்ப்பு சக்தியில் சிறிதளவு வேறுபாடுகள் காணப்படுவதனால், துல்லியமான அளவீடுகள் தொடர்பிலும்; விண்வெளி, வேறு கோள்கள் போன்ற, புவி மேற்பரப்புக்குத் தொலைவில் உள்ள இடங்களிலும்; திணிவுக்கும், எடைக்கும் உள்ள வேறுபாடு முக்கியத்துவம் பெறுகின்றது.

வரையறை[தொகு]

ஒரு பொருளில் உள்ள பருப்பொருட்களின் எண்ணிக்கையே அப்பொருளின் திணிவு அல்லது நிறை எனப்படும்.

ஒரு பொருளில் உள்ள பருப்பொருட்களின் மீது செயல்படும் புவிஈர்ப்புவிசை எடை எனப்படும்.

திணிவின் அலகுகள்[தொகு]

திணிவை அளப்பதற்கான கருவி தராசு ஆகும். அனைத்துலக அலகு முறையில், திணிவு கிலோகிராமில் அளக்கப்படுகின்றது. இது தவிர வேறு அலகுகளும் உண்டு.

  • கிராம்: 1 கிராம் = 0.001 கிகி.
  • தொன் (டன்): 1000 கிலோகிராம்.
  • eV: இது அணுத் துகள்களின் திணிவுகளைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுகின்றது.

அனைத்துலக அலகு முறைக்கு வெளியே, தேவையைப் பொறுத்துப் பலவகையான அலகுகள் பயன்படுகின்றன. பின்வருவன இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள்:

சார்புக் கோட்பாட்டு அடிப்படையில் திணிவுக்கும், ஆற்றலுக்கும் இடையே தொடர்பு காரணமாக ஆற்றலுக்கான அலகு எதையும் திணிவுக்கான அலகாகவும் பயன்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக, eV ஆற்றல் அலகை திணிவுக்கான அலகாகவும் பயன்படுத்துவது உண்டு. இது ஏறத்தாழ 1.783 × 10-36 கிலோகிராமுக்குச் சமன்.

குறிப்புகள்[தொகு]

  1. திணிவு என்பது mass ஐக் குறிக்கும் ஈழத்து வழக்கு. இது நிறை என தமிழகத்தில் வழங்கப்படுகிறது. நிறை என்பதை எடை (weight) என்பதற்கு இணையாக ஈழத்தில் பயன்படுத்துகிறார்கள்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திணிவு&oldid=1830340" இருந்து மீள்விக்கப்பட்டது