உள்ளடக்கத்துக்குச் செல்

துகள் இயற்பியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துகள் இயற்பியல் (Particle physics) என்பது பொருள் அல்லது கதிர்வீச்சு என்று குறிப்பிடப்படும் அனைத்திலும் அங்கங்களாக உள்ள அணுத்துகள்களின் இருப்பையும் அவற்றிற்குள்ளேயான இடைவினைகளையும் ஆய்ந்தறியும் இயற்பியலின் ஒரு பாடப்பிரிவு ஆகும். தற்போதைய புரிதலின்படி, துணுக்க புலங்களின் தூண்டல்களே துகள்கள் ஆகும். தற்போதைய துகள்களும் அவற்றிற்கிடையேயான இடைவினைகளும் சீர்தரப் படிவம் என்ற கோட்பாட்டில் வரையறுக்கப்படுகின்றன. எனவே துகள் இயற்பியல் பெரும்பாலும் இந்தச் சீர்தர படிவத்தில் ஏற்கப்பட்டுள்ள துகள்களின் இயல்புகளையும் அவற்றின் விரிவாக்கங்களையும் ஆராய்கிறது.

அணுக்கருத் துகள்கள்

[தொகு]
இயற்பியலின் சீர்தரப் படிவம்.

அணுவின் அங்கங்களான இலத்திரன்கள், புரோத்தன்கள், மற்றும் நியூத்திரன்கள் (குவார்க்குகளாலான பாரியோன்களின் சேர்மத் துகள்களே புரோத்தன்களும் நியூத்திரன்களும்), கதிரியக்கம் மற்றும் சிதறல் நிகழ்முறைகளில் பெறப்படும் ஒளியணுக்கள், நுண்நொதுமிக்கள், மற்றும் மியோன்கள் குறித்தும் மேலும் இத்தகைய அணுத்துகள்களைக் குறித்தும் நவீன துகள் இயற்பியல் கல்வி குவியப்படுத்துகிறது. குறிப்பாக இங்கு "துகள்" என்ற சொல் செவ்வியல் இயற்பியல்படி பொருந்தாத சொல்லாகும். இவை அலை-துகள் இருமையை வெளிப்படுத்துகின்றன.

மேலும் அறிந்துகொள்ள

[தொகு]

பொதுவான நூல்கள்

[தொகு]

எளிமையானவை

[தொகு]

கடினமானவை

[தொகு]

A survey article:

  • Robinson, Matthew B., Gerald Cleaver, and J. R. Dittmann (2008) "A Simple Introduction to Particle Physics" - Part 1, 135pp. and Part 2, nnnpp. Baylor University Dept. of Physics.

Texts:

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=துகள்_இயற்பியல்&oldid=3937490" இலிருந்து மீள்விக்கப்பட்டது