எதிர்த்துகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
துகள்களின் (இடது), மற்றும் எதிர்த்துகள்களின் (வலது) மின்னூட்டத்தைக் காட்டும் படிமம். மேலிருந்து கீழாக; எதிர்மின்னி/பாசித்திரன், நேர்மின்னி/எதிர்ப்புரோத்தன், நொதுமி/எதிர்நியூத்திரன்.

அறியப்பட்ட அனைத்து அணுத் துகள்களுக்கும், அவற்றின் ஒத்த திணிவும் எதிர் ஏற்றமும் கொண்ட தொடர்புடைய எதிர்த் துகள்கள் (antiparticles) உள்ளன. உதாரணமாக இலத்திரனின் எதிர்த் துகளான எதிர் இலத்திரன் ஒரு நேர் ஏற்றம் கொண்ட துகள் (பாசித்திரன்) ஆகும். இது குறிப்பிட்ட இயற்கையான கதிரியக்கச் சிதைவு மூலம் உருவாக்கப்படுகிறது.

இயற்கை விதிகள் துகள்களுக்கும் எதிர்த்துகள்களுக்கும் சமச்சீரானவை. உதாரணமாக ஒரு எதிர்புரோட்டான் மற்றும் பாசிட்ரான் இணைந்து ஒரு எதிர்ஐதரசன் அணுவை உருவாக்க முடியும். இதன் பண்புகள் ஏறக்குறைய சாதாரண ஐதரசன் அணுவைப் போன்றே இருக்கும். இதனால், ஏன் பெருவெடிப்பின் பின் பேரண்டம் அரைவாசி எதிர்ப்பொருளும், அரைவாசி பொருளுமாக நிரம்பாமல் ஏறக்குறைய மொத்தமாக பொருளால் (matter) நிரம்பியுள்ளது எனும் கேள்வி உருவாகிறது. ஆரம்பத்தில் கச்சிதமானதாகக் கருதப்பட்ட இந்த சமச்சீர்த் தன்மை, உண்மையில் அண்ணளவானதே என்பது மின்னூட்ட நிகர்மை மீறுகையின் (Charge Parity violation) கண்டுபிடிப்பு உணர்த்தியது.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எதிர்த்துகள்&oldid=1851744" இருந்து மீள்விக்கப்பட்டது