உள்ளடக்கத்துக்குச் செல்

வன்மி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அணுக்கூறுகளாகிய துகள்களின் இயற்பியலில் வன்மி அல்லது ஆட்ரான் (Hadron) என்பது குவார்க்குகள் கட்டுண்டு இருக்கும் நிலையில் உள்ள துகள்களின் பொதுப்பெயர். வன்மிகள் (ஆட்ரான்கள்) அணுக்கரு வன்விசையால் கட்டுண்டு இருப்பவை. அணுக்கருவைச் சுற்றி வரும் எதிர்மின்னிகள் எப்படி மின்காந்த விசையால் கட்டுண்டு உள்ளதோ அது போலவே அணுக்கரு வன்விசையால் கட்டுண்டு இருக்கும் துகள்கள் வன்மிகள் (ஆட்ரான்கள்) எனப்படுவை.. அணுக்கரு வன்விசை புவியீர்ப்பு விசைபோல 1038 மடங்கு மிகுந்த வலுவுடைய விசையாகும்.

வன்மிகளில் இரண்டு உள்வகைத் துகள்கள் உள்ளன. அவை பாரியான்கள் என்றும், இடைமிகள் (மேசான்கள்) என்றும் கூறப்படுவன. பாரியான்களில் பரவலாக அறியப்படும் நேர்மின்னிகளும், நொதுமிகளும் அடங்கும். இடைமிகளில் (மேசான்களில்) பல வகைகள் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வன்மி&oldid=3888196" இலிருந்து மீள்விக்கப்பட்டது