போசான்
அணுவின் உட்கூறுகள் பற்றிய துகளியலில் போசான் (bosons (/[invalid input: 'icon']ˈboʊsɒn/[1]) என்பது கீழ்க்காணும் பண்புகள் கொண்ட எந்தவொரு அணுத்துகளும் ஆகும். இவை ஒரே குவாண்ட்டம் நிலையில் (quantum state) பல துகள்கள் இருக்கும்படியான போசு-ஐன்சுட்டீன் புள்ளியல் படி இயங்குவன. இத்துகள்கள் முழுவெண் தற்சுழற்சி (Spin) கொண்டவை. இவ்வகையான துகள்களுக்குப் போசான் என்னும் பெயரை, இந்திய அறிவியலாளர் சத்தியேந்திரநாத்து போசு என்பாரின் பெயரில், அவர் கண்டுபிடிப்புகளைப் பெருமை செய்யுமாறு நோபல்பரிசாளர் பால் திராக்கு (Paul Dirac) சூட்டினார்[2][3][4] நன்றாக அறியப்பட்ட போசான்களில் ஒன்று ஒளியன் (photon). இது தவிர தற்சுழற்சி எண் 0 (சுழி; s=0)) கொண்ட இகிசு போசான் (Higgs boson), தற்சுழற்சிகள் 0, 1 கொண்ட மேசான்கள், கருதுகோளாக இருக்கும் தற்சுழற்சி எண் 2 ((s=2) கொண்டதாகக் கருதப்படும் பொருளீர்ப்பான் (கிராவிட்டான்) முதலியனவும், நிலையாக இருக்கும் நிறை மிகுந்த முழு அணுக்கருகள் சிலவும் (எ.கா.: தியூட்ரியம், ஈலியம்-4. ஈயம்-208 என்னும் ஓரிடத்தான் ஆகியவவை)[Note 1] போசான்களாகும். போசான்கள் மற்றொரு வகையான துகள்களான பெர்மியான்களில் இருந்து மாறுபட்டவை. பெர்மியான்கள் என்பவை ஒரு குவாண்ட்டம் நிலையில் ஒன்றுக்கு மேற்பட்ட துகள் இருக்கலாகாது (பவுலி விலக்கு விதியால்), ஆனால் போசான்கள் ஒன்றுக்கு மேற்பட்டவை ஒரே குவாண்ட்டம் நிலையில் இருக்க வல்லவை. இப்படியான போசானின் பண்புகளால், வியப்பூட்டும் பாய்மப்பண்புகள் (மீபாய்மம்) கொண்டுள்ளது மிகுகுளிர்விக்கப்பட்ட ஈலியம்-4[5]
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
[தொகு]- ↑ Even-mass-number nuclides, which comprise 152/255 = ~ 60% of all stable nuclides, are bosons, i.e. they have integerspin. Almost all (148 of the 152) are even-proton, even-neutron (EE) nuclides, which necessarily have spin 0 because of pairing. The remainder of the stable bosonic nuclides are 5 odd-proton, odd-neutron stable nuclides (see isotope under "odd proton-odd proton nuclei"); these odd-odd bosons are: 2
1H, 6
3Li,10
5B, 14
7N and 180m
73Ta). All have nonzero integer spin.
References
[தொகு]- ↑ Wells, John C. (1990). Longman pronunciation dictionary. Harlow, England: Longman. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0582053838. entry "Boson"
- ↑ Notes on Dirac's lecture Developments in Atomic Theory at Le Palais de la Découverte, 6 December 1945, UKNATARCHI Dirac Papers BW83/2/257889. See note 64 to p. 331 in "The Strangest Man" by Graham Farmelo
- ↑ "boson (dictionary entry)". Merriam-Webster's Online Dictionary. பார்க்கப்பட்ட நாள் 2010-03-21.
- ↑ "BBC News - Higgs boson: The poetry of subatomic particles". BBC Online. 4 July 2012. பார்க்கப்பட்ட நாள் 6 July 2012.
- ↑ "boson". Merriam-Webster Online Dictionary. பார்க்கப்பட்ட நாள் 2010-03-21.
மேலும் படிக்க
[தொகு]- Sakurai, J.J. (1994). Modern Quantum Mechanics (Revised Edition), pp 361–363. Addison-Wesley Publishing Company, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-201-53929-2.
- Srednicki, Mark (2007). Quantum Field Theory, Cambridge University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-86449-7.