மேல் குவார்க்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேல் குவார்க்
பொதிவுஅடிப்படைத் துகள்
புள்ளியியல்பெர்மியான்ic
Generationமுதல்
இடைவினைகள்வலிமை, வலிமையற்றது, மின்காந்த விசை, ஈர்ப்புவிசை
குறியீடுu
எதிர்த்துகள்மேல் மறுதலை குவார்க்கு (u)
Theorizedமுர்ரே செல்- மான் (1964)
ஜார்ஜ் சிவெயிக் (1964)
கண்டுபிடிப்புSLAC (1968)
திணிவு2.3+0.7
−0.5
 MeV/c2
[1]
Decays intoநிலையானது அல்லது கீழ் குவார்க் + பாசிட்ரான் + எலக்ட்ரான் நியூட்ரினோ
மின்னூட்டம்+23 e
Color chargeஆம்
சுழற்சி12
Weak isospinLH: +12, RH: 0
Weak hyperchargeLH: +13, RH: +43


மேல் குவார்க்குகள் (Up quarks) என்பவை அணு உட்துகள்கள் ஆகும். புரோட்டான்கள் போன்ற பல பெரிய துகள்களை உருவாக்க இத்துகள்கள் உதவுகின்றன. மேல் குவார்க்குகளின் மின்சுமை +2/3 ஆகும். அறியப்பட்டுள்ள ஆறுவகையான குவார்க்குகளில் இவையே மிகவும் இலேசானவையாகும். மேல் குவார்க்குகளின் கோண உந்தம் ½ ஆகும். அடிப்படை விசைகள் எனப்படும் ஈர்ப்பு விசை, வலிய இடைவினை, வலிகுறை இடைவினை,மின்காந்த விசை ஆகிய நான்கும் மேல் குவார்க்குகளைப் பாதிக்கின்றன. அனைத்து குவார்க்குகளையும் போலவே மேல் குவார்க்குகளும் அடிப்படைத் துகள்களாகும். இதன்பொருள் இவை மிகச்சிறியவை, இவற்றை மேலும் பிரிக்க இயலாது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

மின்சுமை +2/3 பெற்றுள்ள இரண்டு மேல் குவார்க்குகள் மற்றும் -1/3 மின்சுமை கொண்ட ஒரு கீழ் குவார்க்கு சேர்ந்து மின்சுமை +1 பெற்றுள்ள புரோட்டான்களை உருவாக்குகின்றன. இதேபோல ஒரு மேல் குவார்க் மற்றும் இரண்டு கீழ் குவார்க்குகள் இணைந்து மின்சுமையற்ற ஒரு நியூட்ரானை உருவாக்குகின்றன. சிக்கல் நிறைந்த துகள்களான பையான்களை உருவாக்கவும் மேல் குவார்க்குகள் பயன்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேல்_குவார்க்கு&oldid=2747003" இருந்து மீள்விக்கப்பட்டது