வலிகுறை இடைவினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

துகள் இயற்பியலில் வலிகுறை இடைவினை (weak interaction) என்பது, இயற்கையின் நான்கு அடைப்படை இடைவினைகளுள் ஒன்று. ஏனைய மூன்றும் வலிய இடைவினை, மின்காந்தம், ஈர்ப்பு என்பனவாகும். வலிகுறை இடைவினையை, வலிகுறை விசை, வலிகுறை அணுக்கரு விசை போன்ற பெயர்களாலும் அழைப்பர். அணுவின் அளவு மட்டத்தில் வலிய இடைவினையும், மின்காந்த விசையும், வலிகுறை இடைவினையிலும் வலிமை கூடியவை. ஈர்ப்பு விசை, வலிகுறை இடைவினையிலும் வலுக் குறைந்தது. அணுக்கூறுகளில் கதிரியக்கச் சிதைவு ஏற்படுவதற்கு காரணம் இதுவே. விண்மீன்களில் ஐதரசன் சேர்க்கையையும் இது தொடக்கிவைக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலிகுறை_இடைவினை&oldid=2223103" இருந்து மீள்விக்கப்பட்டது