பேரியான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேரியான் (Baryon) எனப்படுவது, அணுக்கருனிகளும் பிற நிறைகூடிய துகள்களுக்கும் வழங்கப்படும் பொதுப்பெயராகும். ஒரு குறிப்பிட்டச் செயலில் பங்குபெறும் பேரியான்களும் அதன் எதிர் துகளான எதிர் பேரியான்களும் (Antibaryon) பேரியான் எண் எனப்படும். இந்தச் செயலில் பேரியான் எண் (baryon number) மாறாமல் இருக்கிறது. இது ஆற்றல், நிறைவேகம் இவைகளின் அழிவின்மை விதியை ஒத்திருக்கிறது. இவ்விதி பேரியான் எண் அழியா விதி (Law of conservation of Baryon numbers) எனப்படும். ஒருகுறிப்பிட்டத் தொகுதியில் மொத்த பேரியான் எண் ஒரு மாறிலியாகும். எடுத்துக் காட்டிற்கு, கதிரியக்கத்தின் போது U 238 ஒரு α துகளை உமிழ்ந்து தோரியம் 234 ஆக மாறுகிறது. யுரேனியத்தில் மொத்தம் 238 நேர்மின்னிகளும் நொதுமிகளும் இருப்பதால், அதன் பேரியான் எண் 238 ஆகும். அதேபோல் செயல் முடிவில் Th234 + He4 . இரண்டிலும்சேர்த்து 238 பேரியான்கள் உள்ளன. அதாவது முன்னும் பின்னும் பேரியான் எண் மாறாமலிருக்கிறது.

தோரியம் 234, ஒரு β துகளை உமிழ்கிறது. புரோட்டாக்டினியம் 234 கிடைக்கிறது. எதிர்மின்னியின் நிறை மிக்குறைவு. இதற்கு பேரியான் எண் இல்லை. எனவே பேரியான் எண்ணில் மாற்றமில்லை என்பது தெளிவு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரியான்&oldid=3110605" இலிருந்து மீள்விக்கப்பட்டது