உள்ளடக்கத்துக்குச் செல்

மின்துளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயற்பியல், வேதியியல், மற்றும் மின்னணுப் பொறியியலில், மின்துகள் துளை அல்லது மின்னன் துளை அல்லது இலத்திரன் துளை (electron hole) என்பது ஓர் அணுவில் அல்லது படிக அமைப்பில் வெளியுயர் நிலைப்பட்டையில் இருக்கும் எதிர்மின்னி அல்லது மின்னன் அவ்விடத்தில் இல்லா நிலையில், அங்கு நிலவும் எதிர்நிலை ஆற்றலைக் குறிக்கப் பயன்படுகிறது. எதிர்ப் பொருளின் உண்மையான துணிக்கையான பாசித்திரனில் அல்லது நேர்மின்னனில் இருந்து இது வேறுபட்டதாகும்.

எதிர்மின்னி அல்லது மின்னன் (electron) ஆற்றலை உட்கவர்ந்து உயர் நிலைக்கு செல்லும் பொழுது தான் இருந்த இடத்தில் இந்த மின்துளையை அங்கு இட்டுச் செல்கிறது. அந்த மின்துளைகள் எதிர்மின்னி போல் அணு பின்னல்களுக்கு இடையே நகர வல்லது. இவற்றின் இயக்கமானது குறைக்கடத்திக் கருவிகளின் செயல்பாட்டுக்கு காரணம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்துளை&oldid=2385204" இலிருந்து மீள்விக்கப்பட்டது