உள்ளடக்கத்துக்குச் செல்

நாற்குவார்க்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துகள் இயற்பியலில், நாற்குவார்க்கு (tetraquark) என்பது நான்கு வலுவெண் குவார்க்குகளாலான ஒரு புறணி மேசான் துகளாகும். வன் ஊடாட்டத்துக்கான புதுக்கோட்பாடாகிய குவைய நிறவியக்கவியலில் நாற்குவார்க்கு கொள்கையளவில் ஏற்கப்படுகிறது. எந்தவொரு ஏற்புடைய நாற்குவார்க்கும் குவார்க்குப் படிம வகைபாட்டுக்கப்பால் அமையும் ஒரு புறணிவகைத் துகளுக்கான எடுத்துகாட்டாகும்.

சப்பானில் 2003ஆம் ஆண்டில் தற்காலிகமாக ஒரு துகள் X(3872) என பெல்லிச் செய்முறையில் அழைக்கப்பட்டது. இது ஒரு நாற்குவார்க்கின் உறுப்படியாகும்[1] எனக் கருதப்பட்டது.[2] இங்கு X என்பது தற்காலிகப் பெயரே. இதன்பொருள் இதன் இன்னும் சில இயல்புகள் ஆயப்படவேண்டும் என்பதே. துகளின் பின்னமையும் எண் MeV/c2 என்பதன் படிக்கான பொருண்மை ஆகும்.

பெர்மி ஆய்வகத்தில் 2004இல் ஒரு DsJ(2632) நிலை காணப்பட்டது. இதுவும் நாற்குவார்க்கின் உறுப்படியாகக் கூறப்பட்டது.

பெல்லி 2007இல் Z(4430) எனும் நிலையைக் கண்டதாக அறிவித்தார். இது ccdu ஒரு நாற்குவார்க்கின் உறுப்படியாகும். 2014 இல் பெரிய ஆட்ரான் மோதுவி LHCb செய்முறை வாயிலாக இந்த ஒத்திசைவை 13.9 அளவுக்கும் மேல் அமைவதாக உறுதிப்படுத்தியது.[3] 2007இல் பெல்லி Y(4660) நிலையைக் கண்டுபிடித்ததற்கான சான்றுகள் உள்ளன. இதுவும் நாற்குவார்க்கின் நிலையாக அமையலாம்.[4]

ஃபெர்மி ஆய்வகம் 2009இல் Y(4140) எனும் தற்காலிகமானத் துகளைக் கண்டறிந்ததாகவும் அது நாற்குவார்க்காக அமையலாம் எனவும் அறிவித்தனர்.[5]

2010 இல் DESY இலிருந்து இரு இயற்பியலாளர்களும் குவைத்-இ-ஆசாம் பல்கலைக்கழகத்திலிருந்து ஓர் இயற்பியலாளரும் முந்தைய அப்சிலான் மேசானின் செய்முறைத் தரவுகளை மீளாய்வு செய்து நன்கு வரையறுத்த நாற்குவார்க்கு நிலவுவதாக அறிவித்தனர். இது அடிமட்டவகை ஒத்திசைவுத் துகளாக அமைவதாக அவர்கள் கூறினர்.[6][7]

2013 இல் இரண்டு தனித்தனிக் குழுக்கள் Zc(3900) நிலவுவதை அறிவித்தன.[8] [9]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. D. Harris (13 April 2008). "The charming case of X(3872)". Symmetry Magazine. பார்க்கப்பட்ட நாள் 2009-12-17.
  2. L. Maiani, F. Piccinini, V. Riquer and A.D. Polosa (2005). "Diquark-antidiquarks with hidden or open charm and the nature of X(3872)". Physical Review D 71: 014028. doi:10.1103/PhysRevD.71.014028. Bibcode: 2005PhRvD..71a4028M. 
  3. "LHCb confirms existence of exotic hadrons".
  4. G. Cotugno, R. Faccini, A.D. Polosa and C. Sabelli (2010). "Charmed Baryonium". Physical Review Letters 104 (13): 132005. doi:10.1103/PhysRevLett.104.132005. Bibcode: 2010PhRvL.104m2005C. 
  5. Anne Minard (2009-03-18). "New Particle Throws Monkeywrench in Particle Physics". Universetoday.com. பார்க்கப்பட்ட நாள் 2014-04-12.
  6. "Evidence grows for tetraquarks". physicsworld.com. Archived from the original on 2011-11-09. பார்க்கப்பட்ட நாள் 2014-04-12.
  7. A. Ali, C. Hambrock, M.J. Aslam; Hambrock; Aslam (2010). "Tetraquark Interpretation of the BELLE Data on the Anomalous Υ(1S)π+π- and Υ(2S)π+π- Production near the Υ(5S) Resonance". Physical Review Letters 104 (16): 162001. doi:10.1103/PhysRevLett.104.162001. Bibcode: 2010PhRvL.104p2001A. 
  8. "Physics - New Particle Hints at Four-Quark Matter". Physics.aps.org. 2013-06-17. பார்க்கப்பட்ட நாள் 2014-04-12.
  9. Eric Swanson (2013). "Viewpoint: New Particle Hints at Four-Quark Matter". இயற்பியல் 69 (6). doi:10.1103/Physics.6.69. Bibcode: 2013PhyOJ...6...69S. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாற்குவார்க்கு&oldid=4025228" இலிருந்து மீள்விக்கப்பட்டது