உள்ளடக்கத்துக்குச் செல்

நியூட்ரினோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியூட்ரினோ/ஆன்டிநியூட்ரினோ
Neutrino/Antineutrino
நியூட்ரீனோக்களைக் கண்டுபிடிக்க முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட ஐதரசன் குமிழ்க்கலம் (நவம்பர் 13, 1970). ஐதரசன் அணுவொன்றின் நேர்மின்னியை நியூட்ரோனோ ஒன்றின் மோதல்.
பொதிவுஅடிப்படைத் துகள்
புள்ளியியல்பெர்மியோன்
Generationமுதலாவது, இரண்டாவது, மூன்றாவது
இடைவினைகள்வலிகுறை இடையீடு, ஈர்ப்பு
குறியீடுν
e
, ν
μ
, ν
τ
, ν
e
, ν
μ
, ν
τ
எதிர்த்துகள்ஆன்டிநியூட்ரினோக்கள் பெரும்பாலும் நியூட்ரினோவை ஒத்தது.
Theorizedν
e
(இலத்திரன் நியூட்ரினோ): வூல்ஃப்காங் பவுலி (1930)
ν
μ
(மியூவோன் நியூட்ரினோ): 1940களின் இறுதியில் ν
τ
(டாவு நியூட்ரினோ): 1970களின் நடுப்பகுதி
கண்டுபிடிப்புν
e
: கிளைட் கோவான், பிரெடெரிக் ரைனெசு (1956)
ν
μ
: லியோன் லெடெர்மான், மெல்வின் சுவார்ட்சு, சாக் ஸ்டைன்பேர்கர் (1962)
ν
τ
: டோனட் கூட்டு (2000)
வகைகள்3 – எதிர்மின்னி நியூட்ரினோ, muon neutrino, tau neutrino
திணிவுசிறியது
மின்னூட்டம்e
சுழற்சி12
Weak hypercharge−1
BL−1
X−3

நியூட்ரினோ (Neutrino) அல்லது நுண்நொதுமி என்பது அணுவின் அடிப்படைத் துகள்களுள் ஒன்றாகும். இவை மென்மிகள் எனப்படும் அடிப்படைத்துகள் குடும்பத்தில் அடங்குகின்றன. அணுக்கருவில் உள்ள மின்மம் அற்ற பிறிதொரு துகள் நொதுமி (நியூட்ரான்) போன்று நியூட்ரினோக்களும் மின்மத்தன்மை அற்றவை. மின்காந்தப்புல விசையால் எதிர்மின்னி அல்லது நேர்மின்னி போன்றவை மாற்றங்களுக்கு உள்ளாகின்றன, ஆனால் நியூட்ரினோக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை, அதனால் மின்னேற்றத்தைக் கொண்டிருப்பதில்லை.

செப்டம்பர் 2011இல் ஒளியைவிட நுண்நொதுமிகள் விரைவாகப் பயணம் செய்யக்கூடியவை[1][2] என்று அறியப்பட்டது, இந்த ஆய்வின் முடிவுகளுக்கு பல எதிர்ப்புகளும் எழுந்தன. இது மெய்யானால் ஐன்ஸ்டைனின் சார்புக் கோட்பாட்டைப் பற்றிய விளக்கம் வேறுபடக்கூடும். ஒக்டோபர் 2011லும் ஆய்வு நடத்தப்பட்டு நுண்நொதுமிகளே வேகம் கூடியவை என்று மீண்டும் நிறுவப்பட்டது, எனினும் பிறிதொரு குழுவினர் நவம்பர் 2011இல் இதே ஆய்வைச் செய்து இதில் வழு உண்டு என வாதாடினர்.[3]. எனினும், 2012 பெப்ரவரியில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், மேற்குறிப்பிட்ட பரிசோதனையின் போது நியூட்ரினோக்களின் வெளியேற்றம் மற்றும் வரவு நேரங்களை அளவிடும் அணுக் கடிகாரத்துடன் தளர்வாகப் பொருத்தப்பட்ட இழை ஒளியிய வடம் ஒன்றினால் இந்த வழு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டது[4]. இதே பரிசோதனை இதே ஆய்வுக்கூடத்தில் 2012 மார்ச் மாதத்தில் மீண்டும் பரிசோதிக்கப்பட்டதில் நியூட்ரினோக்களினதும் ஒளியினதும் வேகங்களில் வேறுபாடுகள் இல்லை எனக் கண்டுபிடிக்கப்பட்டது[5][6][7][8].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Jason Palmer (23 September 2011). "Speed-of-light results under scrutiny at Cern" (in English). பார்க்கப்பட்ட நாள் 5 December 2011.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. ஒளியை விட வேகப் பயணம் பரிசோதனை, விக்கிசெய்தி, செப்டம்பர் 24, 2011
  3. Jason Palmer (21 November 2011). "Faster-than-light neutrino result queried" (in English). பார்க்கப்பட்ட நாள் 5 December 2011.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. John Timmer (2012). "Faster Than Light Neutrino Result Apparently a Mistake Due to Loose Cable". ars. p. 1.
  5. Antonello, M. et al. (16 March 2012). "Measurement of the neutrino velocity with the ICARUS detector at the CNGS beam". ArXiv. http://arxiv.org/abs/1203.3433. பார்த்த நாள்: 17 March 2012. 
  6. Associated Press (16 March 2012). "Einstein Proved Right in Retest of Neutrinos’ Speed". New York Times. http://www.nytimes.com/2012/03/17/science/einstein-proved-right-in-retest-of-neutrinos-speed.html. பார்த்த நாள்: 17 March 2012. 
  7. Palmer, Jason (16 March 2012). "Neutrinos clocked at light-speed in new Icarus test". பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 17 March 2012.
  8. நியூட்ரினோக்கள் ஒளியை விட வேகமாகச் செல்லவில்லை, பரிசோதனைகள் தெரிவிப்பு, விக்கிசெய்தி, மார்ச் 17, 2012

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூட்ரினோ&oldid=3218535" இலிருந்து மீள்விக்கப்பட்டது