கருத்துரு
Appearance
கருத்துரு (ⓘ) என்பது ஒன்றைப் (பொருள், கருத்தியல், நிகழ்வு, முறைமை, முறையாக்கம்) பற்றி மனத்தில் எழும் கருத்து படிமம் ஆகும். ஒன்றைப் பற்றிய பொதுப் பண்புகளை இயல்புகளை கருத்துரு எடுத்துக்கூறுகிறது. ஒன்றைப் பற்றி புரிந்துகொள்ள அதன் அடிப்படைக் கருத்துருவை புரிந்து கொள்வது தேவையாகும்.
கருத்துரு பல விடயங்களை ஒரு நோக்குக்காக ஒரு வரைச்சட்டத்தில் (framework) ஒருங்கே இணைக்கிறது.
கருத்துருக்களை மூன்று நிலைகளில் (concept hierarchies) விபரிப்பர்:
- மேல் நிலைக் கருத்துரு - superordinate (பொதுத்தன்மையாக இருக்கும்)
- அடிப்படைக் கருத்துரு - basic - intermediate (இடைநிலை விளக்கத்துடன் இருக்கும்)
- கீழ்நிலைக் கருத்துரு - subordinate (துல்லியமாக இருக்கும்)