முகலாயப் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முகலாயப் பேரரசு
[[தில்லி சுல்தானகம்|]]
1526–1858 [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|]]


கொடி

முகலாயப் பேரரசு அதன் உச்சத்தில் (1700).
தலைநகரம் லாகூர், டெல்லி, ஆக்ரா,காபூல்
மொழி(கள்) பாரசீகம் (initially also Chagatai; பின்னர் உருது)
அரசாங்கம் முடியாட்சி
கூட்டாட்சி அமைப்பையும் கொண்டிருந்தது
பேரரசர்
 -  1526–1530 பாபர்
 -  1530–1539, 1555–1556 ஹுமாயூன்
 -  1556–1605 அக்பர்
 -  1605–1627 ஜஹாங்கீர்
 -  1628–1658 சா சகான் (ஷாஜகான்)
 -  1659–1707 ஔரங்கசீப்
 -  1707–1857 பிந்திய பேரரசர்கள்
வரலாறு
 -  அமைப்பு ஏப்ரல் 21, 1526 1526
 -  வீழ்ச்சி செப்டம்பர் 21 1857 1858
பரப்பளவு
30,00,000 km² (11,58,306 sq mi)
மக்கள்தொகை
 -  1700 est. 15,00,00,000 
நாணயம் ரூபாய், தோமான்
Warning: Value not specified for "common_name"|- style="font-size: 85%;" Warning: Value specified for "continent" does not comply
முகலாய அரண்மனையொன்றின் உட் தோற்றம்ஆக்ரா கோட்டை

முகலாயப் பேரரசு உச்ச நிலையில் இருக்கும்பொழுது, அக்காலத்தில் பாரதம் என்று அழைக்கப்பட்ட இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசம் போன்ற நாடுகளின் பெரும் பகுதிகளை உள்ளடக்கிய பேரரசாக இருந்தது. கிபி 1526 தொடக்கம், 1712 வரையான காலப்பகுதியில் இந்த அரசு நிலைபெற்றிருந்தது. துருக்கிய  -பாரசீக / துருக்கிய -மங்கோலிய தெமூரித் தலைவனான பாபர், 1526 ஆம் ஆண்டில் கடைசி டில்லி சுல்தானான, இப்ராஹிம் லோடி என்பவரை, முதலாவது பானிபட் போரில் தோற்கடித்து முகலாய அரசைத் தோற்றுவித்தார். முகல் என்பது மங்கோலியர் என்பதற்கான பாரசீக மொழிச் சொல்லாகும். முகலாயர் இஸ்லாம் சமயத்தைச் சேந்தவர்கள்.[1]

பேரரசின் பெரும்பகுதி, இரண்டாவது முகலாய மன்னனான ஹுமாயூனின் காலத்தில், பஷ்தூன் ஷேர் ஷா சூரி என்பவரால் கைப்பற்றப்பட்டது. பேரரசன் அக்பர் காலத்திலும், குறிப்பிடத்தக்க அளவு விரிவடைந்த இப் பேரரசு, ஔரங்கசீப்பின் ஆட்சியின் இறுதிக்காலம் வரை தொடர்ந்து விரிவடைந்து சென்றது.

முகலாயப் பேரரசர்கள்[தொகு]

முகலாயப் பேரரசர்கள்
பேரரசன் ஆட்சியேற்பு ஆட்சி முடிவு
பாபர் 1526 1530
ஹுமாயூன் 1530 1540
இடையீடு * 1540 1555
ஹுமாயூன் 1555 1556
அக்பர் 1556 1605
ஜஹாங்கீர் 1605 1627
சா சகான் 1627 1658
அவுரங்கசீப் 1658 1707
முகமது ஆசம் ஷா 1707 1707
முதலாம் பகதூர் ஷா 1707 1712

* ஆப்கானிய ஆட்சி (சேர் சா சூரியும், வழி வந்தோரும்)

பாபர் தோற்றுவித்த முகலாயப் பேரரசு[தொகு]

முகலாயப் பேரரசைத் தோற்றுவித்த பாபர் முதலில் பெர்கானா என்னும் சமவெளியில் உள்ள நாட்டையே ஆண்டு வந்தார். இவரது முன்னோர்கள் ஆண்டு வந்த சாமர்கண்ட் பகுதியை மீண்டும் பிடிக்க வேண்டும் என எண்ணினார். ஆனால் தன்னுடைய பெர்கானாப் பள்ளத்தாக்கையும் இழந்ததால் இந்துகுஷ் மலையைத் தாண்டி வந்து காபூலைப் பிடித்து ஒரு சிற்றரச ஆட்சியை நிறுவினார். இவரது முன்னோர் காலத்தில் தைமூர்களின் கீழ் பஞ்சாப் பகுதியைத் திருப்பிக் கொடுக்கும்படி தில்லி சுல்தானான இப்ராகிம் லோடியை பாபர் வேண்டினார். அதற்கு தில்லி சுல்தான் மறுத்தார். இதனால் ஏற்பட்ட பானிப்பட் போரில் ஒரு இலட்சம் வீரர்களைக் கொண்ட தில்லி சுல்தானின் சேனையை வென்று முகலாயப் பேரரசை தோற்றுவித்தார். ராஜபுத்திரர்களையும் ஆப்கானியர்களையும் வென்று வட இந்தியாவில் பேரரசர் ஆனார்.

இவர் தன் இறுதிக்காலங்களில் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தார். இதைப் பயன்படுத்திக் கொண்ட பாபரின் தங்கையின் கணவரான மாது காஜ்வா தன்னை அரசராக்கி கொள்ளலாம் என நினைத்திருந்தார். ஆனால் பாபரின் மகனான ஹூமாயூனால் இது தடைப்பட்டது. இவரின் ஆட்சிக்குப் பின் இவரது மகனான ஹுமாயூன் ஆட்சிக்கு வந்தார். இவருடைய ஆட்சியில் முகலாயப் பேரரசை சேர் சா சூரியிடம் இழந்து மீண்டும் போரிட்டுப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்பர் ஆட்சியில் முகலாய அரசு[தொகு]

அக்பர் ஆட்சியில் முகலாய அரசு விரிவாக்கத்தில் மால்வா (1562), குஜராத் (1572), வங்காளம் (1574), காபூல் (1581), காஷ்மீர் (1586) மற்றும் காண்டேஷ் (1601) ஆகியவைகள் மற்றப் பகுதிகளில் வெற்றி கொண்டவைகளில் அடங்கும். அக்பர் தான் வெற்றி பெற்ற ஒவ்வொரு மாகாணத்திலும் அவருடைய அதிகாரத்தின் கீழ் ஒரு ஆளுனரை நியமித்தார்.

ஒளரங்கசீப்  ஆட்சியில் முகலாயப் பேரரசின் முடிவு[தொகு]

ஒளரங்கசீப் (ஆட்சி காலம்:1658-1707) முகலாயப் பேரரசின் ஒரு குறிப்பிடத்தகுந்த பேரரசர்களில் ஒருவர் ஆவார். ஷாஜகான் மற்றும் மும்தாஜ் தம்பதியர்களின் ஐந்தாவது வாரிசாவார். இவர் ஆலம்கீர் (பாரசீக மொழியில் ’ஆலம்கீர்’ எனில் பிரபஞ்சத்தை ஆளப்பிறந்தவன் எனப் பொருள்) என அழைக்கப்பட்டார். இவரது ஆட்சிக் காலம் கி.பி. 1658 இலிருந்து கி.பி. 1707 வரையாகும். இவரது ஆட்சிக் காலத்தில் முகலாயப் பேரரசு காபுலில் இருந்து தமிழ்நாடு வரை பரந்து விரிந்திருந்தது. இந்தியாவை ஒருங்கிணைத்து, திறம்பட ஆட்சி செய்த முதல் பேரரசர் ஆவார். முகலாய மன்னர்களில் அக்பரும், ஒளரங்கசீப் ஆகிய இருவர் மட்டுமே 49 ஆண்டுகள் சாகும் வரை நாட்டை ஆண்டவர்கள்.

ராஜபுத்திரர்கள் சில காலங்களாக முகலாயப் பேரரசோடு நட்புறவு கொண்டே இருந்தனர். ஆனால் ஒளரங்கசீப் ஆட்சியில் நிலை மாறியது. ஒளரங்கசீப் மேவார் நாட்டு அரசர் இறந்தவுடன் அவரது இரண்டு மகன்களையும் இஸ்லாத்தை  தழுவச் சொல்லி வற்புறுத்தினார். இதனால் ராஜபுத்திரருக்கும் முகலாயருக்கும் பெரும்பகை ஏற்பட்டது. இரண்டு தரப்புமே மற்ற தரப்பு மதத்தின் வழிபாட்டு இடங்களை இடித்தனர். சீக்கியர் மதகுருவான குரு தேக் பகதூர், ஒளரங்கசீப்பை எதிர்த்ததால் அவருக்கு ஒளரங்கசீப் மரணதண்டனை கொடுத்துக் கொன்றார்.

இவரது சமகாலத்தில் பேரரசர் சிவாஜி தக்காணத்தில் பலமிக்க மராட்டியப் பேரரசை நிறுவியிருந்தார். இவரின் ஆட்சியில் மராட்டிய மன்னர் சிவாஜி இறந்ததால் மராட்டியர் நாட்டைப் பிடித்ததோடு, சிவாஜியின் மகனான சம்பாஜியைச் சிறைப் பிடித்தார். சம்பாஜியின் மகனான சாகுஜிவைக் கவனித்து வந்த ராஜசாராமோடு போரிட்டு, மராட்டியத்தில் சில கோட்டைகளை ஒளரங்கசீப் பிடித்துக் கொண்டார். இராசாராம் தமிழகத்தில் இருந்த செஞ்சிக் கோட்டைக்கு வந்துவிட்டார். இவ்வாறு சிவாஜியின் கீழ் இருந்த மராட்டியரோடு, ஏறக்குறைய தென்னிந்தியாவில் 25 வருடங்களுக்கு மேலாக ஒளரங்கசீப் பல போர்களைச் சந்திக்க வேண்டி இருந்தது. மேலும் மராட்டியப் பேரரசின் பல கோட்டைகளைப் பிடிக்க எண்ணி, முடியாத ஒளரங்கசீப் அந்த மனவருத்தத்தாலேயே ஆமத் நகரில் இறந்தார். பேரரசர் தெற்கே வந்ததால் வட இந்தியாவில் முகலாயப் பேரரசு சிதைய ஆரம்பித்து நாளடைவில் மறைந்தது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Mughal Empire

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகலாயப்_பேரரசு&oldid=2702664" இருந்து மீள்விக்கப்பட்டது