ஹெமு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹெமு
பேரரசர்
ஹெமுவின் உருவச்சிலை, பானிபட், அரியானா
ஆட்சிக்காலம்7 அக்டோபர் 1556-5 நவம்பர் 1556
முடிசூட்டுதல்7 அக்டோபர் 1556
முன்னையவர்அக்பர்
பின்னையவர்அக்பர்
இறப்பு5 நவம்பர் 1556
பானிபட், அரியானா
பட்டப் பெயர்
விக்கிரமாதித்தியன்
மதம்இந்து
தில்லிப் பேரரசர் ஹெமு
இரண்டாம் பானிபட் போரில் ஹெமு [1]

ஹெமு (Hemu) (/ˈhˌm/; ஹேமசந்திர விக்கிரமாத்தியன் என்றும் ஹெமு விக்கிரமாத்தியன் என்றும் அழைக்கப்பட்டவர்.[2] இராஜபுத்திர வீரரான இந்து சமய ஹெமு, ஆப்கானிய சூரி வம்சத்தின் மன்னர் முகமது அடில் ஷாவின்[3] அமைச்சராகவும், போர்ப் படைத்தலைவராகப் பணியாற்றியவர். முகமது அடில் ஷா சூரியின் படைகளை எதிர்த்து, உமாயூன் மற்றும் அக்பரின் படைகள் ஆக்ரா மற்றும் தில்லியில் நடந்த 22 போர்களில் தளபதி ஹெமு வெற்றி பெற்றார்.[4] [5][6]

அக்பரின் முகலாயர் படைகளை தில்லிப் போரில் வென்ற ஹெமு 7 அக்டோபர் 1556இல் தன்னை தில்லியின் பேரரசராக, 7 அக்டோபர் 1556இல் பட்டம் சூட்டிக் கொண்டவர். பின்னர் ஒரு மாதம் கழித்து அக்பரின் படைகளுடன் இரண்டாம் பானிபட் போரில் போரிட்டு காயம் பட்டு பிடிபட்ட ஹெமு, அக்பரின் காப்பாளர் பைராம் கானால் கைது செய்யப்பட்டு 5 நவம்பர் 1556 தலைகொய்யப்பட்டார். [7]

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hemu
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
Mughal-era historians on Hemu
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெமு&oldid=3444995" இருந்து மீள்விக்கப்பட்டது