ஐக்கிய இராச்சியத்தின் நான்காம் வில்லியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நான்காம் வில்லியம்
William IV
William IV.jpg
சர் மார்ட்டின் சீ 1833 இல் வரைந்த ஓவியம்
ஐக்கிய இராச்சியத்தின் மன்னர்
ஆட்சிக்காலம்26 சூன் 1830 – 20 சூன் 1837
Coronation8 செப்டம்பர் 1831
முன்னையவர்நான்காம் ஜோர்ஜ்
பின்னையவர்விக்டோரியா
பிரதமர்கள்
See list
அனோவரின் மன்னர்
ஆட்சிக்காலம்26 சூன் 1830 – 20 சூன் 1837
முன்னையவர்நான்காம் ஜோர்ஜ்
பின்னையவர்முதலான் ஏர்னெஸ்ட் ஆகுஸ்டசு
பிறப்புஆகத்து 21, 1765(1765-08-21)
பக்கிங்காம் அரண்மனை, லண்டன்
இறப்பு20 சூன் 1837(1837-06-20) (அகவை 71)
வின்சர் அரண்மனை, பெர்க்சயர்
புதைத்த இடம்8 சூலை 1837
சென் ஜோர்ஜின் சப்பல், வின்சர்
துணைவர்அடிலெய்டு
குடும்பம்உறுப்பினர்சட்டபூர்வமாக:

கிளாரன்சின் இளவரசி எலிசபெத்

சட்டபூர்வமல்லாமல்:

 • ஜார்ஜ் பிட்ஸ்கிளாரென்சு, மண்ஸ்டரின் பிரபு
 • என்றி பிட்ஸ்கிளாரென்சு
 • சோபியா சிட்னி
 • லேடி மேரி பொக்சு
 • பிரெடெரிக் பிட்ஸ்கிளாரென்சு பிரபு
 • எலிசபெத் ஹேய்
 • அடோல்பசு பிட்ஸ்கிளாரென்சு பிரபு
 • லேடி அகுஸ்தா கோர்டன்
 • அகுஸ்தசு பிட்ஸ்கிளாரென்சு பிரபு
 • அமெலியா கேரி
பெயர்கள்
வில்லியம் ஹென்றி
மரபுஹனோவர் மாளிகை
தந்தைஜோர்ஜ் III
தாய்சார்லொட்
மதம்ஆங்கிலிக்கம்
தொழில்போர்வீரர் (கடற்படை)
கையொப்பம்நான்காம் வில்லியம் William IV's signature

நான்காம் வில்லியம் (William IV, (வில்லியம் ஹென்றி; 21 ஆகத்து 1765 – 20 சூன் 1837) 1830 முதல் இறக்கும் வரை பெரிய பிரித்தானியா, அயர்லாந்து, மற்றும் ஹனோவர் ஆகியவற்றின் மன்னராகப் பதவியில் இருந்தவர். மூன்றாம் ஜோர்ஜ் மன்னரின் மூன்றாவது மகனான வில்லியம், நான்காம் ஜோர்ஜ் மன்னரின் இளைய சகோதரரும், நான்காம் ஜோர்ஜிற்குப் பின்னர் பதவிக்கு வந்தவரும் ஆவார்.

இளமையில் அரச கடற்படையில் பணியாற்றிய வில்லியம், "அரச மாலுமி" என அழைக்கப்பட்டார்.[1][2] வட அமெரிக்கா, மற்றும் கரிபியன் நாடுகளில் பணியாற்றிய இவர், கடற்படை சமர்களில் பெரிதளவு பங்குபற்றவில்லை. இவரது இரண்டு மூத்த சகோதரர்களும் சட்டபூர்வமான வாரிசுகள் இல்லாமல் இறந்ததை அடுத்து வில்லியம் தனது 64வது அகவையில் பிரித்தானிய மன்னராக முடி சூடினார். இவரது ஆட்சிக் காலத்தில் பல சீர்திருத்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. வறியவர் சட்டம் மேன்மைப்படுத்தப்பட்டது. குழந்தைத் தொழிலாளர் கட்டுப்படுத்தப்பட்டது. பிரித்தானியப் பேரரசின் அனேகமான அனைத்துப் பிரதேசங்களிலும் அடிமை முறை முற்றாக இல்லாதொழிக்கப்பட்டது. வில்லியம் தனது ஏனைய சகோதரர்களைப் போன்று அரசியலில் அதிகம் ஈடுபடாவிடினும், இவரே நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் பிரதமர் ஒருவரை நியமித்த கடைசி மன்னார் ஆவார்.

வில்லியம் இறக்கும் போது, இவருக்கு சட்டபூர்வமாக பிள்ளைகள் எவரும் உயிருடன் இல்லாவிடினும், 20 ஆண்டுகளாக டொரத்தியா யோர்தான் என்ற நடிகை ஒருவருடன் இருந்த தொடர்பால் இவர் இறக்கும் போது இவருக்கு 10 சட்டபூர்வமல்லாத பிள்ளைகளில் 8 பேர் உயிருடன் இருந்தனர். வில்லியத்தை அடுத்து அவரது பெறாமகள் விக்டோரியா பிரித்தானிய அரசியாகவும், வில்லியமின் சகோதரர் முதலாம் ஏர்னெஸ்டு ஆகுஸ்தசு அனோவரின் மன்னராகவும் முடி சூடினர்.

மேற்கோள்கள்[தொகு]

 1. Staff writer (25 January 1831). "Scots Greys". The Times (UK): p. 3. "...they will have the additional honour of attending our "Sailor King"..." 
 2. Staff writer (29 June 1837). "Will of his late Majesty William IV". The Times (UK): p. 5. "...ever since the accession of our sailor King..." 

வெளி இணைப்புகள்[தொகு]

 • William IV at the official website of the British monarchy