பண்டைக் கிரேக்கம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

பண்டைக் கிரேக்கம் என்பது கிரேக்க வரலாற்றில் பொ.ஊ.மு. 1100 அளவில் கிரேக்கத்தின் இருண்ட கால முடிவு தொடக்கம் பொ.ஊ.மு. 146-இல் உரோமர் கிரீசைத் தோற்கடிக்கும் வரையிலான காலப்பகுதியில் இருந்த கிரேக்கப் பண்பாட்டைக் குறிக்கும். பொதுவாக மேற்கத்திய நாகரிகத்தின் அடிப்படையாக அமைந்தது இதுவே எனக் கொள்ளப்படுகிறது. கிரேக்கப் பண்பாடு உரோமப் பேரரசின் மீது வலுவான செல்வாக்கைக் கொண்டிருந்தது. அது கிரேக்கப் பண்பாட்டின் ஒரு வடிவத்தை ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் பரப்பியது. மொழி, அரசியல், கல்வி முறை, மெய்யியல், அறிவியல், கலைகள் ஆகியவற்றில் கிரேக்கப் பண்பாடு பெரும் செல்வாக்குக் கொண்டிருந்தது. அத்துடன் இது மேற்கு ஐரோப்பாவில், மறுமலர்ச்சியை உருவாக்குவதிலும், பொ.ஊ. 18-ஆம் 19-ஆம் நூற்றாண்டுகளில் பல புதிய செந்நெறி மீள்விப்புக்களை ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய இடங்களில் உருவாக்குவதிலும் அடிப்படையாக இருந்தது.

ஆரம்பமும் பரம்பலும்[தொகு]
வரலாற்று மூலாதாரங்களின்படி இது பொ.ஊ.மு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகும். இதன் ஆரம்பக்குடிகள் மத்திய ஆசியாவிலிருக்கும் சிடேப்பிப் புல்வெளியில் இருந்து வந்த ஆரியர்களே ஆவர்.